திருமுறை 4 · 4.112 · 10

திருச்சிற்றம்பலம்

தனி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருவிருத்தம்
தலம்
பொது
நாடு
பொது

1

வெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்குவெள்ளிப் புரியன்ன வெண்புரி நூலன் விரிசடைமேல்வெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடிவெள் ளென்பணிந்துவெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய வேதியனே.
சொற்பிரிப்பு
வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன் வீழ்ந்து இலங்குவெள்ளிப் புரி அன்ன வெண்புரி நூலன் விரிசடை மேல்வெள்ளித் தகடு அன்ன வெண்பிறை சூடிவெள் என்பு அணிந்து,வெள்ளிப் பொடிப் பவளப்புறம் பூசிய வேதியனே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

உடலைத் துறந்துல கேழுங் கடந்துல வாததுன்பக்கடலைக் கடந்துய்யப் போயிட லாகுங் கனகவண்ணப்படலைச் சடைப்பர வைத்திரைக் கங்கை பனிப்பிறைவெண்சுடலைப் பொடிக்கட வுட்கடி மைக்கண் துணிநெஞ்சமே.
சொற்பிரிப்பு
உடலைத் துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்பக்கடலைக் கடந்து உய்யப் போயிடல் ஆகும் கனக வண்ணப்படலைச் சடைப் பரவைத்திரைக் கங்கைப் பனிப்பிறை வெண்சுடலைப் பொடிக் கடவுட்கு அடிமைக்கண் துணி, நெஞ்சமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

முன்னே யுரைத்தால் முகமனே யொக்குமிம் மூவுலகுக்கன்னையும் அத்தனு மாவா யழல்வணா நீயலையோஉன்னை நினைந்தே கழியுமென் னாவி கழிந்ததற்பின்என்னை மறக்கப் பெறாயெம் பிரானுன்னை வேண்டியதே.
சொற்பிரிப்பு
முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் இம் மூஉலகுக்குஅன்னையும் அத்தனும் ஆவாய் அழல் வணா நீ அலையோஉன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததன் பின்என்னை மறக்கப் பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

நின்னையெப் போது நினையலொட் டாய்நீ நினையப்புகிற்பின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்திஉன்னையெப் போதும் மறந்திட் டுனக்கினி தாயிருக்கும்என்னையொப் பாருள ரோசொல்லு வாழி இறையவனே.
சொற்பிரிப்பு
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் நீ நினையப் புகில்பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்திஉன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும்என்னை ஒப்பார் உளரோ சொல்லு வாழி இறையவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

முழுத்தழல் மேனித் தவளப் பொடியன் கனகக்குன்றத்தெழிற்பெருஞ் சோதியை எங்கள் பிரானை யிகழ்ந்திர்கண்டீர்தொழப்படுந் தேவர் தொழப்படு வானைத் தொழுதபின்னைதொழப்படுந் தேவர்தம் மால்தொழு விக்குந்தன் தொண்டரையே.
சொற்பிரிப்பு
முழுத்தழல் மேனித் தவளப் பொடியன் கனகக் குன்றத்துஎழில் பரஞ்சோதியை எங்கள் பிரானை இகழ்திர் கண்டீர்தொழப்படும் தேவர் தொழப்படுவானைத் தொழுத பின்னைத்,தொழப்படும் தேவர் தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

விண்ணகத் தான்மிக்க வேதத் துளான்விரி நீருடுத்தமண்ணகத் தான்திரு மாலகத் தான்மரு வற்கினியபண்ணகத் தான்பத்தர் சித்தத் துளான்பழ நாயடியேன்கண்ணகத் தான்மனத் தான்சென்னி யானெங் கறைக்கண்டனே.
சொற்பிரிப்பு
விண் அகத்தான் மிக்க வேதத்து உளான் விரி நீர் உடுத்தமண் அகத்தான் திருமால் அகத்தான் மருவற்கு இனியபண் அகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன்கண் அகத்தான் மனத்தான் சென்னியான் எம் கறைக்கண்டனே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமுங்கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்வருங்கடல் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.
சொற்பிரிப்பு
பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய்இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்வரும் கடல் மீள நின்று எம் இறை நல்வீணை வாசிக்குமே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையுந்தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே.
சொற்பிரிப்பு
வானம் துளங்கில் என் மண் கம்பம் ஆகில் என் மால் வரையும்தானம் துளங்கித் தலை தடுமாறில் என் தண்கடலும்மீனம் படில் என் விரிசுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டுஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

சிவனெனும் நாமந் தனக்கே யுடையசெம் மேனியெம்மான்அவனெனை ஆட்கொண் டளித்திடு மாகில் அவன்றனையான்பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால்இவனெனைப் பன்னாள் அழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே.
சொற்பிரிப்பு
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும் ஆகில் அவன் தனை யான்பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பல் நாள் அழைத்தால்,இவன் எனைப் பல்நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

என்னையொப் பாருன்னை எங்ஙனம் காண்பர் இகலியுன்னைநின்னையொப் பார்நின்னைக் காணும் படித்தன்று நின்பெருமைபொன்னையொப் பாரித் தழலை வளாவிச்செம் மானஞ்செற்றுமின்னையொப் பார மிளிருஞ் சடைக்கற்றை வேதியனே.
சொற்பிரிப்பு
என்னை ஒப்பார்உன்னை எங்ஙனம் காண்பர் இகலி உன்னைநின்னை ஒப்பார் நின்னைக் காணும் படித்து அன்று நின் பெருமைபொன்னை ஒப்பாரித்து அழலை வளாவிச் செம்மானம் செற்றுமின்னை ஒப்பார மிளிரும் சடைக்கற்றை வேதியனே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்