திருமுறை 4 · 4.113 · 11

திருச்சிற்றம்பலம்

தனி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருவிருத்தம்
தலம்
பொது
நாடு
பொது

1

பவளத் தடவரை போலுந்திண் டோ ள்களத் தோள்மிசையேபவளக் குழைதழைத் தாலொக்கும் பல்சடை அச்சடைமேற்பவளக் கொழுந்தன்ன பைம்முக நாகமந் நாகத்தொடும்பவளக்கண் வால மதியெந்தை சூடும் பனிமலரே.
சொற்பிரிப்பு
பவளத் தடவரை போலும் திண் தோள்கள் அத்தோள் மிசையேபவளக் குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அச்சடை மேல்பவளக் கொழுந்து அன்ன பைம்முக நாகம் அந் நாகத்தொடும்பவளக் கண் வால மதி எந்தை சூடும் பனிமலரே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

முருகார் நறுமலர் இண்டை தழுவிவண் டேமுரலும்பெருகா றடைசடைக் கற்றையி னாய்பிணி மேய்ந்திருந்தஇருகாற் குரம்பை யிதுநா னுடைய திதுபிரிந்தாற்தருவாய் எனக்குன் திருவடிக் கீழொர் தலைமறைவே.
சொற்பிரிப்பு
முருகு ஆர் நறுமலர் இண்டை தழுவி வண்டே முரலும்பெருகு ஆறு அடை சடைக் கற்றையினாய் பிணி மேய்ந்து இருந்தஇருகால் குரம்பை இது நான் உடையது இது பிரிந்தால்தருவாய் எனக்கு உன் திருவடிக் கீழ் ஓர் தலைமறைவே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

மூவா உருவத்து முக்கண் முதல்வமீக் கூரிடும்பைகாவா யெனக்கடை தூங்கு மணியைக்கை யாலமரர்நாவா யசைத்த வொலியொலி மாறிய தில்லையப்பாற்தீயாய் எரிந்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே.
சொற்பிரிப்பு
மூவா உருவத்து முக்கண் முதல்வ! மிக்கு ஊர் இடும்பைகாவாய் எனக் கடை தூங்கு மணியைக் கையால் அமரர்நாவாய் அசைத்த ஒலி ஒலி மாறியது இல்லை அப்பால்தீயாய் எரிந்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

பந்தித்த பாவங்கள் அம்மையிற் செய்தன இம்மைவந்துசந்தித்த பின்னைச் சமழ்ப்பதென் னேவந் தமரர்முன்னாள்முந்திச் செழுமல ரிட்டு முடிதாழ்த் தடிவணங்கும்நந்திக்கு முந்துற ஆட்செய்கி லாவிட்ட நன்னெஞ்சமே.
சொற்பிரிப்பு
பந்தித்த பாவங்கள் அம்மையில் செய்தன இம்மை வந்துசந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே வந்து அமரர் முன்நாள்முந்திச் செழுமலர் இட்டு முடி தாழ்த்து அடி வணங்கும்நந்திக்கு முந்து உற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

அந்திவட் டத்திளங் கண்ணிய னாறமர் செஞ்சடையான்புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோசந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்தநந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.
சொற்பிரிப்பு
அந்தி வட்டத்து இளங் கண்ணியன் ஆறு அமர் செஞ்சடையான்புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும் பொய் என்பனோசந்திவட்டச் சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்தநந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

உன்மத் தகமலர் சூடி உலகந் தொழச்சுடலைப்பன்மத் தகங்கொண்டு பல்கடை தோறும் பலிதிரிவான்என்மத் தகத்தே இரவும் பகலும் பிரிவரியான்தன்மத் தகத்தொர் இளம்பிறை சூடிய சங்கரனே.
சொற்பிரிப்பு
உன் மத்தக மலர் சூடி உலகம் தொழச்சுடலைப்பல் மத்தகம் கொண்டு பல்கடை தோறும் பலி திரிவான்என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான்தன் மத்தகத்து ஒர் இளம்பிறை சூடிய சங்கரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

அரைப்பா லுடுப்பன கோவணச் சின்னங்கள் ஐயமுணல்வரைப்பாவை யைக்கொண்ட தெக்குடி வாழ்க்கைக்கு வானிரைக்கும்இரைப்பா படுதலை யேந்துகை யாமறை தேடுமெந்தாய்உரைப்பார் உரைப்பன வேசெய்தி யாலெங்கள் உத்தமனே.
சொற்பிரிப்பு
அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள் ஐயம் உணல்வரைப்பாவையைக் கொண்டது எக்குடி வாழ்க்கைக்கு வான் இரைக்கும்இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய்உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

துறக்கப் படாத உடலைத் துறந்துவெந் தூதுவரோடிறப்பன் இறந்தால் இருவிசும் பேறுவன் ஏறிவந்துபிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே.
சொற்பிரிப்பு
துறக்கப் படாத உடலைத் துறந்து வெந் தூதுவரோடுஇறப்பன் இறந்தால் இருவிசும்பு ஏறுவன் ஏறி வந்துபிறப்பன் பிறந்தால் பிறை அணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர்மறப்பன் கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

வேரி வளாய விரைமலர்க் கொன்றை புனைந்தனகன்சேரி வளாயவென் சிந்தை புகுந்தான் திருமுடிமேல்வாரி வளாய வருபுனற் கங்கை சடைமறிவாய்ஏரி வளாவிக் கிடந்தது போலும் இளம்பிறையே.
சொற்பிரிப்பு
வேரி வளாய விரைமலர்க் கொன்றை புனைந்து, அனகன்சேரி வளாய என் சிந்தை புகுந்தான் திருமுடிமேல்வாரி வளாய வருபுனல் கங்கை சடை மறிவாய்ஏரி வளாவிக் கிடந்தது போலும் இளம்பிறையே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப்பன்னெடுங் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சமுண்டென்றென்னொடுஞ் சூளறும் அஞ்சல்நெஞ் சேயிமை யாதமுக்கண்பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண் டீரிப் புகலிடத்தே.
சொற்பிரிப்பு
கல் நெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர் சுருங்கிப்பல் நெடுங் காலம் மழை தான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்றுஎன்னொடும் சூள்அறும் அஞ்சல் நெஞ்சே இமையாத முக்கண்பொன் நெடுங்குன்றம் ஒன்று உண்டு கண்டீர் இப் புகல் இடத்தே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

மேலு மறிந்திலன் நான்முகன் மேற்சென்று கீழிடந்துமாலு மறிந்திலன் மாலுற்ற தேவழி பாடுசெய்யும்பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி மறிந்தசிந்தைக்கால னறிந்தான் அறிதற் கரியான் கழலடியே.
சொற்பிரிப்பு
மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று கீழ் இடந்துமாலும் அறிந்திலன் மால் உற்றதே வழிபாடு செய்யும்பாலன் மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக்காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல் அடியே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்