திருமுறை 4 · 4.111 · 11

திருச்சிற்றம்பலம்

சரக்கறை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருவிருத்தம்
தலம்
பொது
நாடு
பொது

1

விடையும் விடைப்பெரும் பாகாவென் விண்ணப்பம் வெம்மழுவாட்படையும் படையாய் நிரைத்தபல் பூதமும் பாய்புலித்தோல்உடையு முடைதலை மாலையும் மாலைப் பிறையொதுங்குஞ்சடையு மிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
சொற்பிரிப்பு
விடையும் விடைப்பெரும் பாகா என் விண்ணப்பம் வெம்மழுவாள்படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய்புலித் தோல்உடையும் முடைதலை மாலையும் மாலைப் பிறை ஒதுங்கும்சடையும் இருக்கும் சரக்கு அறையோ என் தனி நெஞ்சமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

விஞ்சத் தடவரை வெற்பாவென் விண்ணப்பம் மேலிலங்குசங்கக் கலனுஞ் சரிகோ வணமுந் தமருகமும்அந்திப் பிறையும் அனல்வா யரவும் விரவியெல்லாஞ்சந்தித் திருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
சொற்பிரிப்பு
விஞ்சத் தடவரை வெற்பா என் விண்ணப்பம் மேல் இலங்குசங்கக் கலனும் சரி கோவணமும் தமருகமும்அந்திப் பிறையும் அனல்வாய் அரவும் விரவி எல்லாம்சந்தித்து இருக்கும் சரக்கு அறையோ என் தனி நெஞ்சமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

வீந்தார் தலைகல னேந்தீயென் விண்ணப்பம் மேலிலங்குசாந்தாய வெந்த தவளவெண் ணீறுந் தகுணிச்சமும்பூந்தா மரைமேனிப் புள்ளி யுழைமா னதள்புலித்தோல்தாந்தா மிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
சொற்பிரிப்பு
வீந்தார் தலைகலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்குசாந்து ஆய வெந்த தவள வெண் நீறும் தகுணிச்சமும்பூந்தாமரை மேனிப் புள்ளி உழைமான் அதள் புலித்தோல்தாம் தாம் இருக்கும் சரக்கு அறையோ என் தனி நெஞ்சமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

வெஞ்சமர் வேழத் துரியாயென் விண்ணப்பம் மேலிலங்குவஞ்சமா வந்த வருபுனற் கங்கையும் வான்மதியும்நஞ்சமா நாகம் நகுசிர மாலை நகுவெண்டலைதஞ்சமா வாழுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
சொற்பிரிப்பு
வெஞ்சமர் வேழத்து உரியாய் என் விண்ணப்பம் மேல் இலங்குவஞ்சமா வந்த வருபுனல் கங்கையும் வான்மதியும்நஞ்சம் மா நாகம் நகு சிர மாலை நகு வெண்தலைதஞ்சமா வாழும் சரக்கு அறையோ என் தனி நெஞ்சமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

வேலைக் கடல்நஞ்ச முண்டாயென் விண்ணப்பம் மேலிலங்குகாலற் கடந்தா னிடங்கயி லாயமுங் காமர்கொன்றைமாலைப் பிறையும் மணிவா யரவும் விரவியெல்லாஞ்சாலக் கிடக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
சொற்பிரிப்பு
வேலைக் கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்குகாலற் கடந்தான் இடம் கயிலாயமும் காமர் கொன்றைமாலைப் பிறையும் மணிவாய் அரவும் விரவி எல்லாம்சாலக் கிடக்கும் சரக்கு அறையோ என் தனி நெஞ்சமே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

வீழிட்ட கொன்றையந் தாராயென் விண்ணப்பம் மேலிலங்குசூழிட் டிருக்குநற் சூளா மணியுஞ் சுடலைநீறும்ஏழிட் டிருக்குநல் லக்கு மரவுமென் பாமையோடுந்தாழிட் டிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
சொற்பிரிப்பு
வீழிட்ட கொன்றை அம் தாராய் என் விண்ணப்பம் மேல் இலங்குசூழ் இட்டு இருக்கும் நல் சூளா மணியும் சுடலை நீறும்ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும் அரவும் என்பு ஆமை ஓடும்தாழ் இட்டு இருக்கும் சரக்கு அறையோ என் தனி நெஞ்சமே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

விண்டார் புரமூன்று மெய்தாயென் விண்ணப்பம் மேலிலங்குதொண்டா டியதொண் டடிப்பொடி நீறுந் தொழுதுபாதங்கண்டார்கள் கண்டிருக் குங்கயி லாயமுங் காமர்கொன்றைத்தண்டார் இருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
சொற்பிரிப்பு
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்குதொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும் தொழுது பாதம்கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும் காமர் கொன்றைத்தண் தார் இருக்கும் சரக்கு அறையோ என் தனி நெஞ்சமே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

விடுபட்டி ஏறுகந் தேறீயென் விண்ணப்பம் மேலிலங்குகொடுகொட்டி கொக்கரை தக்கை குழல்தாளம் வீணைமொந்தைவடுவிட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுந்தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
சொற்பிரிப்பு
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்குகொடுகொட்டி கொக்கரை தக்கை குழல் தாளம் வீணை மொந்தை,வடுவிட்ட கொன்றையும், வன்னியும், மத்தமும், வாள் அரவும்,தடுகுட்டம் ஆடும் சரக்கு அறையோ என் தனி நெஞ்சமே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

வெண்டிரைக் கங்கை விகிர்தாவென் விண்ணப்பம் மேலிலங்குகண்டிகை பூண்டு கடிசூத் திரமேற் கபாலவடங்குண்டிகை கொக்கரை கோணற் பிறைகுறட் பூதப்படைதண்டிவைத் திட்ட சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
சொற்பிரிப்பு
வெண்திரைக் கங்கை விகிர்தா என் விண்ணப்பம் மேல் இலங்குகண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம்குண்டிகை, கொக்கரை, கோணற் பிறை, குறள் பூதப்படை,தண்டி வைத்திட்ட சரக்கு அறையோ என் தனி நெஞ்சமே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

வேதித்த வெம்மழு வாளீயென் விண்ணப்பம் மேலிலங்குசோதித் திருக்குநற் சூளா மணியுஞ் சுடலைநீறும்பாதிப் பிறையும் படுதலைத் துண்டமும் பாய்புலித்தோல்சாதித் திருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
சொற்பிரிப்பு
வேதித்த வெம்மழு ஆளீ என் விண்ணப்பம் மேல் இலங்குசோதித் திருக்கும் நல் சூளா மணியும், சுடலை நீறும்,பாதிப் பிறையும், படுதலைத் துண்டமும், பாய்புலித் தோல்,சாதித்து இருக்கும் சரக்கு அறையோ என் தனி நெஞ்சமே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

விவந்தா டியகழல் எந்தாயென் விண்ணப்பம் மேலிலங்குதவந்தா னெடுக்கத் தலைபத் திறுத்தனை தாழ்புலித்தோல்சிவந்தா டியபொடி நீறுஞ் சிரமாலை சூடிநின்றுதவந்தா னிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
சொற்பிரிப்பு
விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்குதவந்தான் எடுக்கத் தலை பத்து இறுத்தனை தாழ் புலித் தோல்சிவந்து ஆடிய பொடி நீறும் சிரமாலை சூடி நின்றுதவம் தான் இருக்கும் சரக்கு அறையோ என் தனி நெஞ்சமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்