திருமுறை 4 · 4.106 · 3

திருச்சிற்றம்பலம்

திருக்கழிப்பாலை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருவிருத்தம்
தலம்
கழிப்பாலை
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச்சென்றுகைதை மடற்புல்கு தென்கழிப் பாலை யதனுறைவாய்பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறியோம்எய்தப் பெறின்இரங் காதுகண் டாய்நம் மிறையவனே.
சொற்பிரிப்பு
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கிச் சென்றுகைதை மடல் புல்கு தென் கழிப்பாலை அதன் உறைவாய்பைதல் பிறையொடு பாம்பு உடன் வைத்த பரிசு அறியோம்எய்தப் பெறின் இரங்காது கண்டாய் நம் இறையவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

பருமா மணியும் பவளமுத் தும்பரந் துந்திவரைபொருமால் கரைமேற் றிரைகொணர்ந் தெற்றப் பொலிந்திலங்குங்கருமா மிடறுடைக் கண்டனெம் மான்கழிப் பாலையெந்தைபெருமா னவனென்னை யாளுடை யானிப் பெருநிலத்தே.
சொற்பிரிப்பு
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரைபொருமால் கரைமேல் திரை கொணர்ந்து ஏற்றப் பொலிந்து இலங்கும்கருமா மிடறுடைக் கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தைபெருமான் அவன் என்னை ஆள் உடையான் இப் பெருநிலத்தே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற் றிங்கு நமன்தமராற்கோட்பட் டொழிவதன் முந்துற வேகுளி ரார்தடத்துத்தாட்பட்ட தாமரைப் பொய்கையந் தண்கழிப் பாலையண்ணற்காட்பட் டொழிந்தமன் றேவல்ல மாயிவ் வகலிடத்தே.
சொற்பிரிப்பு
நாள்பட்டு இருந்து இன்பம் எய்தலுற்று இங்கு நமன் தமரால்கோட்பட்டு ஒழிவதன் முந்துறவே குளிர் ஆர் தடத்துத்தாள்பட்ட தாமரைப் பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்குஆட்பட்டொழிந்தம் அன்றே வல்லமாய் இவ் அகலிடத்தே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்