திருமுறை 4 · 4.107 · 10

திருச்சிற்றம்பலம்

திருக்கடவூர் வீரட்டம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருவிருத்தம்
தலம்
கடவூர் வீரட்டம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்இருட்டிய மேனி வளைவாள் எயிற்றெரி போலுங்குஞ்சிச்சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனேஉருட்டிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.
சொற்பிரிப்பு
மருள் துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்காய்இருட்டிய மேனி வளைவாள் எயிற்று எரி போலும் குஞ்சிச்சுருட்டிய நாவில் வெங் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனேஉருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

பதத்தெழு மந்திரம் அஞ்செழுத் தோதிப் பரிவினொடும்இதத்தெழு மாணிதன் இன்னுயிர் உண்ண வெகுண்டடர்த்தகதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுகஉதைத்தெழு சேவடி யான்கட வூருறை உத்தமனே.
சொற்பிரிப்பு
பதத்து எழு மந்திரம் அஞ்சு எழுத்து ஓதிப் பரிவினொடும்இதத்து எழு மாணி தன் இன்உயிர் உண்ண வெகுண்டு அடர்த்தகதத்து எழு காலனைக் கண் குருதிப் புனல் ஆறு ஒழுகஉதைத்து எழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் காமனையும்நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற் கங்கையும் பொங்கரவும்பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் காலனைப் பண்டொருகால்உரப்பிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.
சொற்பிரிப்பு
கரப்புறு சிந்தையர் காண்டற்கு அரியவன் காமனையும்நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனல் கங்கையும் பொங்கு அரவும்பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் காலனைப் பண்டு ஒருகால்உரப்பிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

மறித்திகழ் கையினன் வானவர் கோனை மனமகிழ்ந்துகுறித்தெழு மாணிதன் ஆருயிர் கொள்வான் கொதித்தசிந்தைக்கறுத்தெழு மூவிலை வேலுடைக் காலனைத் தானலறஉறுக்கிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.
சொற்பிரிப்பு
மறித்திகழ் கையினன் வானவர் கோனை மனம் மகிழ்ந்துகுறித்து எழு மாணி தன் ஆர்உயிர் கொள்வான் கொதித்த சிந்தைக்கறுத்து எழு மூஇலை வேல்உடைக் காலனைத் தான் அலறஉறுக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

குழைத்திகழ் காதினன் வானவர் கோனைக் குளிர்ந்தெழுந்துபழக்கமொ டர்ச்சித்த மாணிதன் ஆருயிர் கொள்ளவந்ததழற்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் தானலறஉழக்கிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.
சொற்பிரிப்பு
குழைத்திகழ் காதினன் வானவர் கோனைக் குளிர்ந்து எழுந்துபழக்கமொடு அர்ச்சித்த மாணி தன் ஆர்உயிர் கொள்ள வந்ததழல் பொதி மூஇலை வேல் உடைக் காலனைத் தான் அலறஉழக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

பாலனுக் காயன்று பாற்கடல் ஈந்து பணைத்தெழுந்தஆலினிற் கீழிருந் தாரண மோதி அருமுனிக்காய்ச்சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்தகாலனைக் காய்ந்த பிரான்கட வூருறை உத்தமனே.
சொற்பிரிப்பு
பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்து எழுந்தஆலினின் கீழ் இருந்து ஆரணம் ஓதி அருமுனிக்காய்ச்சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடி வந்தகாலனைக் காய்ந்த பிரான் கடவூர் உறை உத்தமனே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை பணிகயிறாஉடைதலைக் கோத்துழல் மேனியன் உண்பலிக் கென்றுழல்வோன்சுடர்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் துண்டமதாஉடறிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.
சொற்பிரிப்பு
படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை பணி கயிறாஉடைதலை கோத்து உழல் மேனியன் உண்பலிக்கு என்று உழல்வோன்சுடர்பொதி மூஇலை வேல் உடைக் காலனைத் துண்டம் அதாஉடறிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

வெண்டலை மாலையுங் கங்கைக் கரோடி விரிசடைமேற்பெண்டனி நாயகன் பேயுகந் தாடும் பெருந்தகையான்கண்டனி நெற்றியன் காலனைக் காய்ந்து கடலின்விடம்உண்டருள் செய்தபி ரான்கட வூருறை உத்தமனே.
சொற்பிரிப்பு
வெண்தலை மாலையும் கங்கை கரோடி விரிசடை மேல்பெண்டு அணி நாயகன் பேய் உகந்து ஆடும் பெருந்தகையான்கண் தனி நெற்றியன் காலனைக் காய்ந்து கடலின் விடம்உண்டு அருள் செய்தபிரான் கடவூர் உறை உத்தமனே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

கேழல தாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய்வாழிநன் மாமலர்க் கண்ணிடந் திட்டவம் மாலவற்கன்றாழியும் ஈந்து அடுதிறற் காலனை அன்றடர்த்துஊழியு மாய பிரான்கட வூருறை உத்தமனே.
சொற்பிரிப்பு
கேழல் அது ஆகிக் கிளறிய கேசவன் காண்பு அரிது ஆய்வாழி நல் மாமலர்க் கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்றுஆழியும் ஈந்து அடுதிறல் காலனை அன்று அடர்த்துஊழியும் ஆய பிரான் கடவூர் உறை உத்தமனே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்ஆன்றிகழ் ஐந்துகந் தாடும் பிரான்மலை ஆர்த்தெடுத்தகூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழஊன்றிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.
சொற்பிரிப்பு
தேன் திகழ் கொன்றையும் கூவிள மாலை திருமுடிமேல்ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான் மலை ஆர்த்து எடுத்தகூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழஊன்றிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்