திருமுறை 4 · 4.103 · 10

திருச்சிற்றம்பலம்

திருநாகைக்காரோணம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருவிருத்தம்
தலம்
நாகைக்காரோணம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

வடிவுடை மாமலை மங்கைபங் காகங்கை வார்சடையாய்கடிகமழ் சோலை சுலவு கடல்நாகைக் காரோணனேபிடிமத வாரணம் பேணுந் துரகநிற் கப்பெரியஇடிகுரல் வெள்ளெரு தேறுமி தென்னைகொல் எம்மிறையே.
சொற்பிரிப்பு
வடிவுடை மாமலை மங்கை பங்கா கங்கை வார்சடையாய்கடிகமழ் சோலை சுலவு கடல்நாகைக் காரோணனேபிடி மத வாரணம் பேணும் துரகம் நிற்கப் பெரியஇடிகுரல் வெள் எருது ஏறும் இது என்னைக்கொல் எம் இறையே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

கற்றார் பயில்கடல் நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலேவிற்றாங் கியகரம் வேல்நெடுங் கண்ணி வியன்கரமேநற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித் தகர நின்கரமேசெற்றார் புரஞ்செற்ற சேவக மென்னைகொல் செப்புமினே.
சொற்பிரிப்பு
கற்றார் பயில் கடல் நாகைக் காரோணத்து எம் கண்ணுதலேவில் தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமேநல் தாள் நெடுஞ்சிலை நாண் வலித்த கரம் நின் கரமேசெற்றார் புரம் செற்ற சேவகம் என்னைகொல் செப்புமினே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்தகாமன் பொடிபடக் காய்ந்த கடல்நாகைக் காரோணநின்நாமம் பரவி நமச்சிவா யவென்னும் அஞ்செழுத்துஞ்சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே.
சொற்பிரிப்பு
தூமென் மலர்க்கணை கோத்துத் தீ வேள்வி தொழில்படுத்தகாமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக் காரோண நின்நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்சு எழுத்தும்சாம் அன்று உரைக்கத் தருதி கண்டாய் எங்கள் சங்கரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

பழிவழி யோடிய பாவிப் பறிதலைக் குண்டர்தங்கள்மொழிவழி யோடி முடிவேன் முடியாமைக் காத்துக்கொண்டாய்கழிவழி யோதம் உலவு கடல்நாகைக் காரோணவென்வழிவழி யாளாகும் வண்ணம் அருளெங்கள் வானவனே.
சொற்பிரிப்பு
பழி வழி ஓடிய பாவிப் பறிதலைக் குண்டர் தங்கள்மொழி வழி ஓடி முடிவேன் முடியாமைக் காத்துக்கொண்டாய்கழி வழி ஓதம் உலவு கடல் நாகைக் காரோண என்வழி வழி ஆளாகும் வண்ணம் அருள் எங்கள் வானவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை வெண்ணகைத் தேன்மொழியார்வந்து வலஞ்செய்து மாநட மாட மலிந்தசெல்வக்கந்த மலிபொழில் சூழ்கடல் நாகைக்கா ரோணமென்றுஞ்சிந்தைசெய் வாரைப் பிரியா திருக்குந் திருமங்கையே.
சொற்பிரிப்பு
செந்துவர் வாய்க் கருங்கண் இணை வெண்நகைத் தேன்மொழியார்வந்து வலம் செய்து மாநடம் ஆட மலிந்த செல்வக்கந்தம் மலி பொழில் சூழ்கடல் நாகைக் காரோணம் என்றும்சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும் திருமங்கையே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

பனைபுரை கைம்மத யானை யுரித்த பரஞ்சுடரேகனைகடல் சூழ்தரு நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலேமனைதுறந் தல்லுணா வல்லமண் குண்டர் மயக்கநீக்கிஎனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி யான்செயும் இச்சைகளே.
சொற்பிரிப்பு
பனை புரை கைம்மத யானை உரித்த பரஞ்சுடரேகனைகடல் சூழ் தரு நாகைக் காரோணத்து எம் கண்ணுதலேமனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கிஎனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான் செயும் இச்சைகளே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

சீர்மலி செல்வம் பெரிதுடை யசெம்பொன் மாமலையேகார்மலி சோலை சுலவு கடல்நாகைக் காரோணனேவார்மலி மென்முலை யார்பலி வந்திடச் சென்றிரந்துஊர்மலி பிச்சைகொண் டுண்பது மாதிமை யோவுரையே.
சொற்பிரிப்பு
சீர் மலி செல்வம் பெரிதுடைய செம்பொன் மாமலையேகார்மலி சோலை சுலவு கடல்நாகைக் காரோணனேவார்மலி மென்முலையார் பலி வந்து இடச் சென்று இரந்துஊர்மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ உரையே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

வங்கம் மலிகடல் நாகைக்கா ரோணத்தெம் வானவனேஎங்கள் பெருமானொர் விண்ணப்பம் உண்டது கேட்டருளீர்கங்கை சடையுட் கரந்தாயக் கள்ளத்தை மெள்ளவுமைநங்கை அறியிற்பொல் லாதுகண்டா யெங்கள் நாயகனே.
சொற்பிரிப்பு
வங்கம் மலி கடல் நாகைக் காரோணத்து எம் வானவனேஎங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டு அது கேட்டருளீர்கங்கை சடையுள் கரந்தாய் அக்கள்ளத்தை மெள்ள உமைநங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே.
உரை

உரை எழுதப்படவில்லை

9 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

கருந்தடங் கண்ணியுந் தானுங் கடல்நாகைக் காரோணத்தான்இருந்த திருமலை யென்றிறைஞ் சாதன் றெடுக்கலுற்றான்பெருந்தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்தலறஇருந்தரு ளிச்செய்த தேமற்றுச் செய்திலன் எம்மிறையே.
சொற்பிரிப்பு
கருந் தடங் கண்ணியும் தானும் கடல் நாகைக் காரோணத்தான்இருந்த திருமலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கல் உற்றான்பெருந்தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலறஇருந்து அருளிச் செய்ததே மற்றுச் செய்திலன் எம் இறையே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்