திருமுறை 4 · 4.102 · 10

திருச்சிற்றம்பலம்

திருவாரூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருவிருத்தம்
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி வினைபெருக்கித்தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் துணையென் றிருத்திர்தொண்டீர்ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச்சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே.
சொற்பிரிப்பு
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி வினை பெருக்கித்தூம்பினைத் தூர்த்து அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர்ஆம்பல் அம் பூம்பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழல்கீழ்ச்சாம்பலைப் பூசிச் சலம் இன்றித் தொண்டுபட்டு உய்ம்மின்களே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப்பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தானாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்திநீரால் திருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே.
சொற்பிரிப்பு
ஆராய்ந்து அடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்து அடக்கிப்பார் ஊர் பரிப்பத் தம் பங்குனி உத்திரம் பால்படுத்தான்நார் ஊர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்திநீரால் திருவிளக்கு இட்டமை நீள்நாடு அறியும் அன்றே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

பூம்படி மக்கலம் பொற்படி மக்கலம் என்றிவற்றால்ஆம்படி மக்கல மாகிலும் ஆரூர் இனிதமர்ந்தார்தாம்படி மக்கலம் வேண்டுவ ரேல்தமிழ் மாலைகளால்நாம்படி மக்கலஞ் செய்து தொழுதும் மடநெஞ்சமே.
சொற்பிரிப்பு
பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால்ஆம் படிமக்கலம் ஆகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார்தாம் படிமக்கலம் வேண்டுவரேல் தமிழ் மாலைகளால்நாம் படிமக்கலம் செய்து தொழுதும் மடநெஞ்சமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

துடிக்கின்ற பாம்பரை ஆர்த்துத் துளங்கா மதியணிந்துமுடித்தொண்ட ராகி முனிவர் பணிசெய்வ தேயுமன்றிப்பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர் பாதம் பொறுத்தபொற்பால்அடித்தொண்டன் நந்தியென் பானுளன் ஆரூர் அமுதினுக்கே.
சொற்பிரிப்பு
துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்துத் துளங்கா மதி அணிந்துமுடித்தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றிப்பொடிக்கொண்டு பூசிப் புகும்தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால்அடித்தொண்டன் நந்தி என்பான் உளன் ஆரூர் அமுதினுக்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

கரும்பு பிடித்தவர் காயப்பட் டாரங்கோர் கோடலியால்இரும்பு பிடித்தவர் இன்புறப் பட்டார் இவர்கள்நிற்கஅரும்பவிழ் தண்பொழில் சூழணி ஆரூர் அமர்ந்தபெம்மான்விரும்பு மனத்தினை யாதொன்று நானுன்னை வேண்டுவனே.
சொற்பிரிப்பு
கரும்பு பிடித்தவர் காயப்பட்டார் அங்கு ஓர் கோடலியால்இரும்பு பிடித்தவர் இன்புறப் பட்டார் இவர்கள் நிற்கஅரும்பு அவிழ் தண்பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான்விரும்பு மனத்தினை யாது ஒன்று நான் உன்னை வேண்டுவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

கொடிகொள் விதானங் கவரி பறைசங்கங் கைவிளக்கோடிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர் எய்தியும் ஊனமில்லாஅடிகளும் ஆரூர் அகத்தின ராயினும் அந்தவளப்பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு நந்தி புறப்படிலே.
சொற்பிரிப்பு
கொடி கொள் விதானம் கவரி பறை சங்கம் கை விளக்கோடுஇடிவு இல் பெருஞ்செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லாஅடிகளும் ஆரூர் அகத்தினர் ஆயினும் அம் தவளப்பொடிகொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படிலே.
உரை

உரை எழுதப்படவில்லை

7 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

8 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 8-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

9 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

சங்கொலிப் பித்திடு மின்சிறு காலைத் தடவழலில்குங்கிலி யப்புகைக் கூட்டென்றுங் காட்டி இருபதுதோள்அங்குலம் வைத்தவன் செங்குரு திப்புன லோடஅஞ்ஞான்றங்குலி வைத்தான் அடித்தா மரையென்னை ஆண்டனவே.
சொற்பிரிப்பு
சங்கு ஒலிப்பித்திடுமின் சிறு காலைத் தட அழலில்குங்கிலியப் புகைக் கூட்டு என்றும் காட்டி இருபது தோள்அங்குலம் வைத்தவன் செங்குருதிப் புனல் ஓட அஞ்ஞான்றுஅங்குலி வைத்தான் அடித் தாமரை என்னை ஆண்டனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்