திருமுறை 4 · 4.101 · 10

திருச்சிற்றம்பலம்

திருவாரூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருவிருத்தம்
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

குலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோஅலம்பலம் பாவரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்சிலம்பலம் பாவரு சேவடி யான்றிரு மூலட்டானம்புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
சொற்பிரிப்பு
குலம்பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு கொலோஅலம்புஅலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்சிலம்பு அலம்பா வரு சேவடியான் திரு மூலட்டானம்புலம்பு அலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

மற்றிட மின்றி மனைதுறந் தல்லுணா வல்லமணர்சொற்றிட மென்று துரிசுபட் டேனுக்கு முண்டுகொலோவிற்றிடம் வாங்கி விசயனொ டன்றொரு வேடுவனாய்ப்புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
சொற்பிரிப்பு
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர்சொல் திடம் என்று துரிசு பட்டேனுக்கும் உண்டுகொலோவில் திடம் வாங்கி விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்ப்புற்று இடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

ஒருவடி வின்றிநின் றுண்குண்டர் முன்னமக் குண்டுகொலோசெருவடி வெஞ்சிலை யாற்புரம் அட்டவன் சென்றடையாத்திருவுடை யான்றிரு வாரூர்த் திருமூலட் டானன்செங்கட்பொருவிடை யானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
சொற்பிரிப்பு
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டுகொலோசெருவடி வெஞ்சிலையால் புரம் அட்டவன் சென்று அடையாத்திருஉடையான் திருஆரூர்த் திருமூலட்டானன் செங்கண்பொருவிடையான் அடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

மாசினை யேறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரைவிட்டீசனை யேநினைந் தேசறு வேனுக்கும் உண்டுகொலோதேசனை ஆரூர்த் திருமூலட் டானனைச் சிந்தைசெய்துபூசனைப் பூசுரர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
சொற்பிரிப்பு
மாசினை ஏறிய மேனியர் வன் கண்ணர் மொண்ணரைவிட்டுஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டுகொலோதேசனை ஆரூர்த் திருமூலட் டானனைச் சிந்தை செய்துபூசனைப் பூசுரர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

அருந்தும் பொழுதுரை யாடா அமணர் திறமகன்றுவருந்தி நினைந்தர னேயென்று வாழ்த்துவேற் குண்டுகொலோதிருந்திய மாமதில் ஆரூர்த் திருமூலட் டானனுக்குப்பொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
சொற்பிரிப்பு
அருந்தும் பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று,வருந்தி நினைந்து அரனே என்று வாழ்த்துவேற்கு உண்டுகொலோதிருந்திய மாமதில் ஆரூர்த் திருமூலட் டானனுக்குப்பொருந்தும் தவம் உடைத் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

வீங்கிய தோள்களுந் தாள்களு மாய்நின்று வெற்றரையேமூங்கைகள் போலுண்ணு மூடர்முன் னேநமக் குண்டுகொலோதேங்கமழ் சோலைத்தென் னாரூர்த் திருமூலட் டானன்செய்யபூங்கழ லானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
சொற்பிரிப்பு
வீங்கிய தோள்களும் தாள்களுமாய் நின்று வெற்று அரையேமூங்கைகள் போல் உண்ணும் மூடர் முன்னே நமக்கு உண்டுகொலோதேங்கமழ் சோலைத் தென்ஆரூர்த் திருமூலட்டானன் செய்யபூங்கழலான் அடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

பண்ணிய சாத்திரப் பேய்கள் பறிதலைக் குண்டரைவிட்டெண்ணிற் புகழீசன் றன்னருள் பெற்றேற்கு முண்டுகொலோதிண்ணிய மாமதில் ஆரூர்த் திருமூலட் டானனெங்கள்புண்ணியன் றன்னடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
சொற்பிரிப்பு
பண்ணிய சாத்திரப் பேய்கள் பறிதலைக் குண்டரை விட்டுஎண்ணில் புகழ் ஈசன் தன் அருள் பெற்றேற்கும் உண்டுகொலோதிண்ணிய மாமதில் ஆரூர்த் திருமூலட்டானன் எங்கள்புண்ணியன் தன் அடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

கரப்பர்கள் மெய்யைத் தலைபறிக் கச்சுகம் என்னுங்குண்டர்உரைப்பன கேளாதிங் குய்யப்போந் தேனுக்கும் உண்டுகொலோதிருப்பொலி ஆரூர்த் திருமூலட் டானன் திருக்கயிலைப்பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
சொற்பிரிப்பு
கரப்பர்கள் மெய்யைத் தலை பறிக்கச் சுகம் என்னும் குண்டர்உரைப்பன கேளாது இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோதிருப்பொலி ஆரூர்த் திருமூலட்டானன் திருக்கயிலைப்பொருப்பன் விருப்பு அமர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

கையி லிடுசோறு நின்றுண்ணுங் காதல் அமணரைவிட்டுய்யும் நெறிகண் டிங்குய்யப் போந்தேனுக்கு முண்டுகொலோஐயன் அணிவயல் ஆரூர்த் திருமூலட் டானனுக்குப்பொய்யன் பிலாவடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
சொற்பிரிப்பு
கையில் இடுசோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு,உய்யும் நெறிகண்டு இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோஐயன் அணிவயல் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்பொய் அன்பு இலா அடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

குற்ற முடைய அமணர் திறமது கையகன்றிட்டுற்ற கருமஞ்செய் துய்யப்போந் தேனுக்கும் உண்டுகொலோமற்பொலி தோளான் இராவணன் றன்வலி வாட்டுவித்தபொற்கழ லானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
சொற்பிரிப்பு
குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டுஉற்ற கருமம் செய்து உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோமற்பொலி தோளான் இராவணன் தன் வலி வாட்டுவித்தபொற்கழலான் அடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்