திருமுறை 3 · 3.127 · 11

திருச்சிற்றம்பலம்

திருக்கிளியன்னவூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பிற்சேர்க்கை
தலம்
ஹ பிற்சேர்க்கை
நாடு
பிற்சேர்க்கை

1

தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின்சீர்சி றக்கும் துணைப்பதம் உன்னுவோர்பேர்சி றக்கும் பெருமொழி உய்வகைஏர்சி றக்கும் கிளியன்ன வூரனே.
சொற்பிரிப்பு
தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின்சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர்பேர் சிறக்கும் பெருமொழி உய்வகைஏர் சிறக்கும் கிளியன்னவூரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

வன்மை செய்யும் வறுமைவந் தாலுமேதன்மை யில்லவர் சார்பிருந் தாலுமேபுன்மைக் கன்னியர் பூசலுற் றாலுமேநன்மை யுற்ற கிளியன்ன வூரனே.
சொற்பிரிப்பு
வன்மை செய்யும் வறுமை வந்தாலுமேதன்மை யில்லவர் சார்பிருந்தாலுமேபுன்மைக் கன்னியர் பூசலுற்றாலுமேநன்மையுற்ற கிளியன்ன வூரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

பன்னி நின்ற பனுவல் அகத்தியன்உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன்மன்னி நாகம் முகத்தவர் ஓதலும்முன்னில் நின்ற கிளியன்ன வூரனே.
சொற்பிரிப்பு
பன்னி நின்ற பனுவல் அகத்தியன்உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன்மன்னி நாகம் முகத்தவர் ஓதலும்முன்னில் நின்ற கிளியன்னவூரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

அன்பர் வேண்டும் அவையளி சோதியான்வன்பர் நெஞ்சில் மருவல்இல் லாமுதற்துன்பந் தீர்த்துச் சுகங்கொடு கண்ணுதல்இன்பந் தேக்குங் கிளியன்ன வூரனே.
சொற்பிரிப்பு
அன்பர் வேண்டும் அவை அளி சோதியான்வன்பர் நெஞ்சில் மருவல் இல்லா முதற்துன்பந் தீர்த்துச் சுகங்கொடு கண்ணுதல்இன்பந் தேக்குங் கிளியன்னவூரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

செய்யும் வண்ணஞ் சிரித்துப் புரம்மிசைபெய்யும் வண்ணப் பெருந்தகை யானதோர்உய்யும் வண்ணமிங் குன்னருள் நோக்கிடமெய்யும் வண்ணக் கிளியன்ன வூரனே.
சொற்பிரிப்பு
செய்யும் வண்ணம் சிரித்துப் புரம் மிசைபெய்யும் வண்ணப் பெருந்தகையானதோர்உய்யும் வண்ணம் இங்கு உன்னருள் நோக்கிடமெய்யும் வண்ணக் கிளியன்னவூரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

எண்பெ றாவினைக் கேதுசெய் நின்னருள்நண்பு றாப்பவம் இயற்றிடில் அந்நெறிமண்பொ றாமுழுச் செல்வமும் மல்குமால்புண்பொ றாதகி ளியன்ன வூரனே.
சொற்பிரிப்பு
எண் பெறாவினைக்கு ஏது செய் நின்னருள்நண்புறாப் பவம் இயற்றிடில் அந்நெறிமண்பொறா முழுச் செல்வமும் மல்குமால்புண்பொறாத கிளியன்னவூரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

மூவ ராயினும் முக்கண்ண நின்னருள்மேவு றாதுவி லக்கிடற் பாலரோதாவு றாதுன தைந்தெழுத் துன்னிடதேவ ராக்குங் கிளியன்ன வூரனே.
சொற்பிரிப்பு
மூவராயினும் முக்கண்ண நின்னருள்மேவுறாது விலக்கிடற் பாலரோதாவுறாது உனது ஐந்தெழுத்து உன்னிடதேவராக்கும் கிளியன்னவூரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

திரம் மிகுத்த சடைமுடி யான்வரைஉரம் மிகுத்த இராவணன் கீண்டலும்நிரம் மிகுத்து நெரித்தவன் ஓதலால்வரம் மிகுத்த கிளியன்ன வூரனே.
சொற்பிரிப்பு
திரம் மிகுத்த சடைமுடியான் வரைஉரம் மிகுத்த இராவணன் கீண்டலும்நிரம் மிகுத்து நெரித்தவன் ஓதலால்வரம் மிகுத்த கிளியன்னவூரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

நீதி யுற்றிடும் நான்முகன் நாரணன்பேத முற்றுப் பிரிந்தழ லாய்நிமிர்நாதன் உற்றன நன்மலர் பாய்இருக்கீதம் ஏற்ற கிளியன்ன வூரனே.
சொற்பிரிப்பு
நீதியுற்றிடும் நான்முகன் நாரணன்பேதமுற்றுப் பிரிந்து அழலாய் நிமிர்நாதன் உற்றன நன்மலர்பாய் இருக்கீதம் ஏற்ற கிளியன்னவூரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

மங்கை யர்க்கர சோடுகு லச்சிறைபொங்க ழற்சுரம் போக்கெனப் பூழியன்சங்கை மாற்றிச் சமணரைத் தாழ்த்தவும்இங்கு ரைத்த கிளியன்ன வூரனே.
சொற்பிரிப்பு
மங்கையர்க்கு அரசோடு குலச்சிறைபொங்கழற் சுரம் போக்கெனப் பூழியன்சங்கை மாற்றிச் சமணரைத் தாழ்த்தவும்இங்குரைத்த கிளியன்னவூரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

நிறைய வாழ்கிளி யன்னவூர் ஈசனைஉறையும் ஞானசம் பந்தன்சொல் சீரினைஅறைய நின்றன பத்தும்வல் லார்க்குமேகுறையி லாது கொடுமை தவிர்வரே.குறிப்பு : சித்தாந்தம்-மலர் 5 இதழ் 11 (1932) தலைப்பு ஏட்டிலிருந்து எடுக்கப்பட்டது.
சொற்பிரிப்பு
நிறைய வாழ் கிளியன்னவூர் ஈசனைஉறையும் ஞான சம்பந்தன் சொல் சீரினைஅறைய நின்றன பத்தும் வல்லார்க்குமேகுறையிலாது கொடுமை தவிர்வரே.குறிப்பு : சித்தாந்தம்-மலர் 5 இதழ் 11 (1932) தலைப்பு ஏட்டிலிருந்து எடுக்கப்பட்டது.சுவாமி :அகஸ்தீஸ்வரர்; அம்பாள் : அகிலாண்டேஸ்வரி.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்