திருமுறை 3 · 3.128 · 11

திருச்சிற்றம்பலம்

திருமறைக்காடு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பிற்சேர்க்கை
தலம்
ஹ பிற்சேர்க்கை
நாடு
பிற்சேர்க்கை

1

விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை முனியவாங்கிப்படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே பரமயோகீகடைத்தலை புகுந்து நின்றோம் கலிமறைக் காடமர்ந்தீர்அடைத்திடுங் கதவு தன்னை யப்படித் தாளினாலே.
சொற்பிரிப்பு
விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை முனிய வாங்கிப்படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே பரமயோகீகடைத்தலை புகுந்து நின்றோம் கலி மறைக்காடு அமர்ந்தீர்அடைத்திடுங் கதவு தன்னை அப்படித் தாளினாலே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

முடைத்தலைப் பலிகொள் வானே முக்கணா நக்கமூர்த்திமடைத்தலைக் கமலம் ஓங்கும் வயல்மறைக் காடமர்ந்தாய்அடைத்திடுங் கதவை என்றிங் கடியனேன் சொல்லவல்லேஅடைத்தனை தேவி தன்னோ டெம்மையாள் உகக்குமாறே.
சொற்பிரிப்பு
முடைத்தலைப் பலி கொள்வானே முக்கணா நக்கமூர்த்திமடைத்தலைக் கமலம் ஓங்கும் வயல் மறைக்காடு அமர்ந்தாய்அடைத்திடும் கதவை என்றிங்கு அடியனேன் சொல்லவல்லேஅடைத்தனை தேவி தன்னோடு எம்மையாள் உகக்குமாறே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

கொங்கண மலர்கள் மேவுங் குளிர்பொழில் இமயப்பாவைபங்கணா வுருவினாலே பருமணி யுமிழும் வெம்மைச்செங்கணார் அரவம் பூண்ட திகழ்மறைக் காடமர்ந்தாய்அங்கணா இதுவன் றோதான் எம்மையாள் உகக்குமாறே.
சொற்பிரிப்பு
கொங்கண மலர்கள் மேவும் குளிர்பொழில் இமயப்பாவைபங்கணா வுருவினாலே பருமணி உமிழும் வெம்மைச்செங்கண் ஆர் அரவம் பூண்ட திகழ் மறைக்காடு அமர்ந்தாய்அங்கணா இதுவன்றோ தான் எம்மை ஆள் உகக்குமாறே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

இருளிடை மிடற்றினானே எழில் மறைப் பொருட்கள்எல்லாந்தெருள்பட முனிவர்க் கீந்ததிகழ் மறைக் காடமர்ந்தாய்மருளுடை மனத்த னேனும் வந்தடி பணிந்துநின்றேர்க்கருளது புரிவ தன்றோ எம்மையாள் உகக்குமாறே.
சொற்பிரிப்பு
இருளிடை மிடற்றினானே எழில் மறைப் பொருட்கள் எல்லாம்தெருள்பட முனிவர்க்கு ஈந்த திகழ் மறைக் காடு அமர்ந்தாய்மருளுடை மனத்தனேனும் வந்தடி பணிந்து நின்றேர்க்குஅருளது புரிவதன்றோ எம்மை ஆள் உகக்குமாறே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

பெருத்தகை வேழந் தன்னைப் பிளிறிட உரிசெய்தானேமருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மாமறைக் காடமர்ந்தாய்கருத்தில னேனும் நின்றன் கழலடி பணிந்துநின்றேன்அருத்தியை அறிவ தன்றோ எம்மையாள் உகக்குமாறே.
சொற்பிரிப்பு
பெருத்தகை வேழம் தன்னைப் பிளிறிட உரி செய்தானேமருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மா மறைக்காடு அமர்ந்தாய்கருத்திலனேனும் நின்றன் கழலடி பணிந்து நின்றேன்அருத்தியை அறிவதன்றோ எம்மை ஆள் உகக்குமாறே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

செப்பமர் கொங்கை மாதர் செறிவளை கொள்ளுந்தேசோடொப்பமர் பலிகொள் வானே ஒளிமறைக் காடமர்ந்தாய்அப்பமர் சடையி னானே அடியனேன் பணியுகந்தஅப்பனே அளவிற் சோதீ அடிமையை உகக்குமாறே.
சொற்பிரிப்பு
அமர் கொங்கை மாதர் கொள்ளும் தேசோடுஒப்பமர் பலி கொள்வானே ஒளி மறைக்காடு அமர்ந்தாய்அப்பு அமர் சடையினானே அடியனேன் பணி உகந்தஅப்பனே அளவில் சோதீ அடிமையை உகக்குமாறே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

மதிதுன்றும் இதழி மத்தம் மன்னிய சென்னியானேகதியொன்றும் ஏற்றி னானே கலிமறைக் காடமர்ந்தாய்விதியொன்று பாவின் மாலை கேட்டருள் வியக்குந்தன்மைஇதுவன்றோ உலகின் நம்பி எம்மையாள் உகக்குமாறே.
சொற்பிரிப்பு
மதி துன்றும் இதழி மத்தம் மன்னிய சென்னியானேகதியொன்றும் ஏற்றினானே கலி மறைக்காடு அமர்ந்தாய்விதியொன்று பாவின் மாலை கேட்டருள் வியக்கும் தன்மைஇதுவன்றோ உலகின் நம்பி எம்மை ஆள் உகக்குமாறே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

நீசனாம் அரக்கன் றிண்டோள் நெரிதர விரலால்ஊன்றுந்தேசனே ஞான மூர்த்தீ திருமறைக் காடமர்ந்தாய்ஆசையை யறுக்க உய்ந்திட் டவனடி பரவமெய்யேஈசனார்க் காள தானான் என்பதை அறிவித்தாயே.
சொற்பிரிப்பு
நீசனாம் அரக்கன் திண் தோள் நெரிதர விரலால் ஊன்றுந்தேசனே ஞான மூர்த்தீ திருமறைக்காடு அமர்ந்தாய்ஆசையை அறுக்க உய்ந்திட்டு அவனடி பரவ மெய்யேஈசனார்க்கு ஆளதானான் என்பதை அறிவித்தாயே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

மைதிகழ் உருவினானும் மலரவன் றானும் மெய்ம்மைஎய்துமா றறிய மாட்டார்எழில்மறைக் காடமர்ந்தாய்பொய்தனை யின்றி நின்னைப் போற்றினார்க் கருளைச்சேரச்செய்தனை யெனக்கு நீயின் றருளிய திறத்தினாலே.
சொற்பிரிப்பு
மை திகழ் உருவினானும் மலரவன் தானும் மெய்ம்மைஎய்துமாறு அறிய மாட்டார்எழில் மறைக்காடு அமர்ந்தாய்பொய்தனையின்றி நின்னைப் போற்றினார்க்கு அருளைச் சேரச்செய்தனை எனக்கு நீயின்று அருளிய திறத்தினாலே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

மண்டலத் தமணர் பொய்யுந் தேரர்கள் மொழியும்மாறக்கண்டனை யகள என்றும் கலிமறைக் காடமர்ந்தாய்தண்டியைத் தானா வைத்தான் என்னுமத் தன்மையாலேஎண்டிசைக் கறிய வைத்தாய் இக்கத வடைப்பித்தன்றே.
சொற்பிரிப்பு
மண்டலத்து அமணர் பொய்யும் தேரர்கள் மொழியும் மாறக்கண்டனை அகள என்றும் கலி மறைக்காடு அமர்ந்தாய்தண்டியைத் தானா வைத்தான் என்னும் அத்தன்மையாலேஎண்டிசைக்கு அறிய வைத்தாய் இக்கதவு அடைப்பித்தன்றே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

மதமுடைக் களிறு செற்ற மாமறைக் காட்டுளானைக்கதவடைத் திறமுஞ் செப்பிக் கடிபொழிற் காழிவேந்தன்தகவுடைப் புகழின் மிக்கதமிழ்கெழுவிரகன் சொன்னபதமுடைப் பத்தும் வல்லார் பரமனுக் கடியர்தாமே.
சொற்பிரிப்பு
மதமுடைக் களிறு செற்ற மாமறைக்காட்டு உளானைக்கதவடைத் திறமுஞ் செப்பிக் கடிபொழிற் காழி வேந்தன்தகவுடைப் புகழின் மிக்க தமிழ்கெழு விரகன் சொன்னபதமுடைப் பத்தும் வல்லார் பரமனுக்கு அடியர் தாமே.சுவாமி : மறைக்காட்டு மணாளர்; அம்பாள் : யாழைப்பழித்த மொழியாள்.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்