திருமுறை 3 · 3.121 · 11

திருச்சிற்றம்பலம்

திருப்பந்தணைநல்லூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
புறநீர்மை
தலம்
பந்தணைநல்லூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

இடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மதிலை யிவைசொல்லி யுலகெழுந் தேத்தக்கடறினா ராவர் காற்றுளா ராவர் காதலித் துறைதரு கோயில்கொடிறனார் யாதுங் குறைவிலார் தாம்போய்க் கோவணங் கொண்டுகூத் தாடும்படிறனார் போலும் பந்தணை நல்லூர் நின்றஎம் பசுபதி யாரே.
சொற்பிரிப்பு
இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை; இவை சொல்லி உலகு எழுந்து ஏத்த,கடறினார் ஆவர்; காற்று உளார் ஆவர்; காதலித்து உறைதரு கோயில்கொடிறனார்; யாதும் குறைவு இலார்; தாம் போய்க் கோவணம்கொண்டு கூத்து ஆடும்படிறனார் போலும்! பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

கழியுளா ரெனவுங் கடலுளா ரெனவுங் காட்டுளார் நாட்டுளா ரெனவும்வழியுளா ரெனவும் மலையுளா ரெனவும் மண்ணுளார் விண்ணுளா ரெனவும்சுழியுளா ரெனவுஞ் சுவடுதா மறியார் தொண்டர்வாய் வந்தன சொல்லும்பழியுளார் போலும் பந்தணை நல்லூர் நின்றஎம் பசுபதி யாரே.
சொற்பிரிப்பு
“கழி உளார்” எனவும், ”கடல் உளார்” எனவும், ”காட்டு உளார்:, நாட்டு உளார்” எனவும்,“வழி உளார்” எனவும், ”மலை உளார்” எனவும், ”மண்உளார்”, ”விண் உளார்” எனவும்,“சுழி உளார்” எனவும், சுவடு தாம் அறியார், தொண்டர் வாய் வந்தன சொல்லும்பழி உளார் போலும்! பந்தணைநல்லூர் நின்ற எம்பசுபதியாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

காட்டினா ரெனவும் நாட்டினா ரெனவுங் கடுந்தொழிற் காலனைக் காலால்வீட்டினா ரெனவுஞ் சாந்தவெண் ணீறு பூசியோர் வெண்மதி சடைமேல்சூட்டினா ரெனவுஞ் சுவடுதா மறியார் சொல்லுள சொல்லுநால் வேதப்பாட்டினார் போலும் பந்தணை நல்லூர் நின்றஎம் பசுபதி யாரே.
சொற்பிரிப்பு
“காட்டினார்” எனவும், ”நாட்டினார்” எனவும், ”கடுந் தொழில் காலனைக் காலால்வீட்டினார்” எனவும், சாந்த வெண்நீறு பூசி, ஓர் வெண்மதி சடைமேல்சூட்டினார்” எனவும், சுவடு தாம் அறியார், சொல் உள சொல்லும் நால்வேதப்-பாட்டினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

முருகினார் பொழில்சூழ் உலகினா ரேத்த மொய்த்தபல் கணங்களின் றுயர்கண்டுருகினா ராகி யுறுதிபோந் துள்ளம் ஒண்மையால் ஒளிதிகழ் மேனிகருகினா ரெல்லாங் கைதொழு தேத்தக் கடலுள்நஞ் சமுதமா வாங்கிப்பருகினார் போலும் பந்தணை நல்லூர் நின்றஎம் பசுபதி யாரே.
சொற்பிரிப்பு
முருகின் ஆர் பொழில் சூழ் உலகினார் ஏத்த, மொய்த்த பல்கணங்களின் துயர் கண்டுஉருகினார் ஆகி, உறுதி போந்து, உள்ளம் ஒண்மையால், ஒளி திகழ் மேனிகருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த, கடலுள் நஞ்சு அமுதமா வாங்கிப்பருகினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

பொன்னினார் கொன்றை யிருவடங் கிடந்து பொறிகிளர் பூணநூல் புரளமின்னினார் உருவின் மிளிர்வதோர் அரவம் மேவுவெண் ணீறுமெய் பூசித்துன்னினார் நால்வர்க் கறம்அமர்ந் தருளித் தொன்மையார் தோற்றமுங் கேடும்பன்னினார் போலும் பந்தணை நல்லூர் நின்றஎம் பசுபதி யாரே.
சொற்பிரிப்பு
பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூணநூல் புரள,மின்னின் ஆர் உருவின், மிளிர்வது ஓர் அரவம், மேவு வெண்நீறு மெய் பூசி,துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி, தொன்மை ஆர் தோற்றமும் கேடும்பன்னினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

ஒண்பொனா ரனைய அண்ணல்வாழ் கெனவும் உமையவள் கணவன்வாழ் கெனவும்அண்பினார் பிரியார் அல்லுநன் பகலும் அடியவர் அடியிணை தொழவேநண்பினார் எல்லாம் நல்லரென் றேத்த அல்லவர் தீயரென் றேத்தும்பண்பினார் போலும் பந்தணை நல்லூர் நின்றஎம் பசுபதி யாரே.
சொற்பிரிப்பு
“ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க!” எனவும்” உமையவள் கணவன் வாழ்க!” எனவும்,அண்பினார், பிரியார், அல்லும் நன்பகலும், அடியவர் அடி இணை தொழவே,நண்பினார் எல்லாம், ”நல்லர்!” என்று ஏத்த, அல்லவர், ”தீயர்!” என்று ஏத்தும்பண்பினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

எற்றினார் ஏதும் இடைகொள்வா ரில்லை இருநிலம் வானுல கெல்லைதெற்றினார் தங்கள் காரண மாகச் செருமலைந் தடியிணை சேர்வான்முற்றினார் வாழும் மும்மதில் வேவ மூவிலைச் சூலமும் மழுவும்பற்றினார் போலும் பந்தணை நல்லூர் நின்றஎம் பசுபதி யாரே.
சொற்பிரிப்பு
எற்றினார், ஏதும் இடைகொள்வார் இல்லை, இருநிலம் வான்உலகு எல்லைதெற்றினார் தங்கள் காரணம் ஆகச் செரு மலைந்து, அடி இணை சேர்வான்,முற்றினார் வாழும் மும்மதில் வேவ, மூஇலைச்சூலமும் மழுவும்பற்றினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

ஒலிசெய்த குழலின் முழவம தியம்ப வோசையால் ஆடலறாதகலிசெய்த பூதங் கையினா லிடவே காலினாற் பாய்தலும் அரக்கன்வலிகொள்வர் புலியின் உரிகொள்வரேனை வாழ்வுநன் றானுமோர் தலையில்பலிகொள்வர் போலும் பந்தணை நல்லூர் நின்றஎம் பசுபதி யாரே.
சொற்பிரிப்பு
ஒலிசெய்த குழலின் முழவம் அது இயம்ப, ஓசையால் ஆடல் அறாதகலி செய்த பூதம் கையினால் இடவே, காலினால் பாய்தலும், அரக்கன்வலி கொள்வர்; புலியின் உரி கொள்வர்; ஏனை வாழ்வு நன்றானும் ஓர் தலையில்பலி கொள்வர்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

சேற்றினார் பொய்கைத் தாமரை யானுஞ் செங்கண்மா லிவரிரு கூறாத்தோற்றினார் தோற்றத் தொன்மையை யறியார் துணைமையும் பெருமையுந் தம்மில்சாற்றினார் சாற்றி யாற்றலோ மென்னச் சரண்கொடுத் தவர்செய்த பாவம்பாற்றினார் போலும் பந்தணை நல்லூர் நின்றஎம் பசுபதி யாரே.
சொற்பிரிப்பு
சேற்றின் ஆர் பொய்கைத் தாமரையானும், செங்கண்மால், இவர் இருகூறாத்தோற்றினார், தோற்றத் தொன்மையை அறியார், துணைமையும் பெருமையும் தம்மில்சாற்றினார், சாற்றி, ”ஆற்றலோம்” என்ன, சரண் கொடுத்து, அவர் செய்த பாவம்பாற்றினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

10 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 10-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

11

கல்லிசை பூணக் கலையொலி ஓவாக் கழுமல முதுபதி தன்னில்நல்லிசை யாளன் புல்லிசை கேளா நற்றமிழ் ஞானசம் பந்தன்பல்லிசை பகுவாய்ப் படுதலை யேந்தி மேவிய பந்தணை நல்லூர்சொல்லிய பாடல் பத்தும்வல் லவர்மேல் தொல்வினை சூழகி லாவே.
சொற்பிரிப்பு
கல் இசை பூணக் கலை ஒலி ஓவாக் கழுமல முதுபதி தன்னில்நல் இசையாளன், புல் இசை கேளா நல்—தமிழ் ஞானசம்பந்தன்,பல் இசை பகுவாய்ப் படுதலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர்சொல் இசைப்பாடல் பத்தும் வல்லவர் மேல், தொல்வினை சூழகிலாவே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்