திருமுறை 3 · 3.120 · 11

திருச்சிற்றம்பலம்

திருஆலவாய்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
புறநீர்மை
தலம்
ஆலவாய் (மதுரை)
நாடு
பாண்டியநாடு

1

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானிபங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளிஅங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே.
சொற்பிரிப்பு
மங்கையர்க்குஅரசி வளவர்கோன் பாவை, வரி வளைக் கைம்மடமானிபங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ,பொங்குஅழல் உருவன் பூதநாயகன் நால் வேதமும்பொருள்களும்அருளிஅம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

வெற்றவே யடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியுங்கொற்றவன் றனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவி நின்றேத்தும்ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை யொழிந்திட்டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற ஆலவா யாவதும் இதுவே.
சொற்பிரிப்பு
வெற்றவேஅடியார் அடிமிசை வீழும் விருப்பினன், வெள்ளைநீறுஅணியும்கொற்றவன்தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்றுஏத்தும்ஒற்றைவெள்விடையன்உம்பரார்தலைவன், உலகினில்இயற்கையைஒழிந்திட்டுஅற்றவர்க்கு அற்ற சிவன், உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

செந்துவர் வாயாள் சேலன கண்ணாள் சிவன்திரு நீற்றினை வளர்க்கும்பந்தணை விரலாள் பாண்டிமா தேவி பணிசெயப் பாரிடை நிலவுஞ்சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந் தண்ணெருக் கம்மலர் வன்னிஅந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.
சொற்பிரிப்பு
செந்துவர்வாயாள் சேல் அன கண்ணாள், சிவன்திருநீற்றினை வளர்க்கும்பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய,பார் இடை நிலவும்சந்தம் ஆர் தரளம், பாம்பு, நீர், மத்தம், தண் எருக்கம்மலர்,வன்னி,அந்தி வான்மதி, சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய்ஆவதும் இதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

கணங்களாய் வரினுந் தமியராய் வரினும் அடியவர் தங்களைக் கண்டால்குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங் கோபுரஞ் சூழ்மணிக் கோயில்மணங்கமழ் கொன்றை வாளரா மதியம் வன்னிவண் கூவிள மாலைஅணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.
சொற்பிரிப்பு
கணங்கள்ஆய் வரினும் தமியராய் வரினும் அடியவர் தங்களைக்கண்டால்குணம்கொடு பணியும் குலச்சிறை பரவும் கோபுரம் சூழ்மணிக் கோயில்மணம்கமழ் கொன்றை, வாள் அரா, மதியம், வன்னி, வண் கூவிளமாலைஅணங்கு வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

செய்யதா மரைமேல் அன்னமே யனைய சேயிழை திருநுதற் செல்விபையர வல்குற் பாண்டிமா தேவி நாடொறும் பணிந்தினி தேத்தவெய்யவேற் சூலம் பாசம்அங் குசமான் விரிகதிர் மழுவுடன் தரித்தஐயனார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே.
சொற்பிரிப்பு
செய்யதாமரைமேல் அன்னமே அனைய சேயிழை திருநுதல் செல்வி,பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்தொறும் பணிந்து இனிதுஏத்த,வெய்ய வேல், சூலம், பாசம், அங்குசம், மான், விரிகதிர் மழுஉடன்தரித்தஐயனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்றகுலமில ராகக் குலமதுண் டாகத் தவம்பணி குலச்சிறை பரவுங்கலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன்அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.
சொற்பிரிப்பு
நலம் இலர் ஆக, நலம் அது உண்டு ஆக, நாடவர் நாடு அறிகின்றகுலம் இலர் ஆக, குலம் அது உண்டு ஆக, தவம் பணி குலச்சிறை பரவும்கலை மலி கரத்தன், மூஇலைவேலன், கரிஉரி மூடியகண்டன்,அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும்இதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

முத்தின்தாழ் வடமுஞ் சந்தனக் குழம்பும் நீறுந்தன் மார்பினின் முயங்கப்பத்தியார் கின்ற பாண்டிமா தேவி பாங்கொடு பணிசெய நின்றசுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே சுடர்மர கதமடுத் தாற்போல்அத்தனார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே.
சொற்பிரிப்பு
முத்தின் தாழ்வடமும் சந்தனக்குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க,பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய, நின்றசுத்தம் ஆர் பளிங்கின் பெருமலை உடனே சுடர் மரகதம் அடுத்தால் போல்,அத்தனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய்ஆவதும் இதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

நாவணங் கியல்பாம் அஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகுங்கோவணம் பூதி சாதனங் கண்டால் தொழுதெழு குலச்சிறை போற்றஏவணங் கியல்பாம் இராவணன் திண்டோ ள் இருபதும் நெரிதர வூன்றிஆவணங் கொண்ட சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.
சொற்பிரிப்பு
நாஅணங்கு இயல்பு ஆம் அஞ்சு எழுத்து ஓதி, நல்லராய் நல் இயல்பு ஆகும்கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற,ஏஅணங்கு இயல்பு ஆம் இராவணன் திண்தோள் இருபதும் நெரிதர ஊன்றி,ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

மண்ணெலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச் சோழன்றன் மகளாம்பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி பாங்கினாற் பணிசெய்து பரவவிண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்பரி தாம்வகை நின்றஅண்ணலார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே.
சொற்பிரிப்பு
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்தன் மகள் ஆம்பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால்பணி செய்துபரவவிண் உளார் இருவர் கீழொடு மேலும் அளப்பு அரிது ஆம்வகை நின்றஅண்ணலார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந் தொழுதுதன் குணத்தினைக் குலாவக்கண்டுநா டோ றும் இன்புறு கின்ற குலச்சிறை கருதிநின் றேத்தக்குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள் குறியின்கண் நெறியிடை வாராஅண்டநா யகன்றான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவா யாவதும் இதுவே.
சொற்பிரிப்பு
தொண்டராய்உள்ளார் திசைதிசைதோறும் தொழுதுதன்குணத்தினைக்குலாவக்கண்டு, நாள்தோறும் இன்பு உறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த,குண்டராய் உள்ளார் சாக்கியர் தங்கள் குறியின் கண் நெறி இடை வாராஅண்ட நாயகன் தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

பன்னலம் புணரும் பாண்டிமா தேவி குலச்சிறை யெனுமிவர் பணியும்அந்நலம் பெறுசீர் ஆலவா யீசன் திருவடி யாங்கவை போற்றிக்கன்னலம் பெரிய காழியுள் ஞான சம்பந்தன் செந்தமி ழிவைகொண்டின்னலம் பாட வல்லவர் இமையோர் ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.
சொற்பிரிப்பு
பல்—நலம் புணரும் பாண்டிமாதேவி, குலச்சிறை, எனும் இவர் பணியும்அந் நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி,கன்னல்அம் பெரியகாழியுள்ஞான சம்பந்தன் செந்தமிழ்இவைகொண்டுஇன்நலம் பாட வல்லவர், இமையோர் ஏத்த, வீற்றிருப்பவர், இனிதே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்