திருமுறை 3 · 3.119 · 11

திருச்சிற்றம்பலம்

திருவீழிமிழலை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
புறநீர்மை
தலம்
வீழிமிழலை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

புள்ளித்தோ லாடை பூண்பது நாகம் பூசுசாந் தம்பொடி நீறுகொள்ளீத்தீ விளக்குக் கூளிகள் கூட்டங் காளியைக் குணஞ்செய்கூத் துடையோன்அள்ளற் காராமை அகடு வான்மதியம் ஏய்க்கமுட் டாழைக ளானைவெள்ளைக்கொம் பீனும் விரிபொழில் வீழி மிழலையா னெனவினை கெடுமே.
சொற்பிரிப்பு
புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்; பூசு சாந்தம் பொடி—நீறு;கொள்ளித்தீ விளக்கு; கூளிகள் கூட்டம்; காளியைக் குணம் செய் கூத்து உடையோன்-அள்ளல் கார் ஆமை அகடு வான்மதியம் ஏய்க்க,முள்—தாழைகள் ஆனைவெள்ளைக்கொம்பு ஈனும் விரி பொழில் வீழி- மிழலையான் என, வினை கெடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

இசைந்தவா றடியா ரிடுதுவல் வானோர் இழுகுசந் தனத்திளங் கமலப்பசும்பொன்வா சிகைமேற் பரப்புவாய் கரப்பாய் பத்திசெய் யாதவர் பக்கல்அசும்புபாய் கழனி யலர்கயன் முதலோ டடுத்தரிந் தெடுத்தவான் சும்மைவிசும்புதூர்ப் பனபோல் விம்மிய வீழி மிழலையா னெனவினை கெடுமே.
சொற்பிரிப்பு
இசைந்த ஆறு அடியார் இடு துவல், வானோர் இழுகு சந்தனத்து இளங் கமலப்பசும்பொன் வாசிகைமேல் பரப்புவாய்; கரப்பாய், பத்திசெய்யாதவர் பக்கல்;அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து அரிந்து எடுத்த வான் சும்மைவிசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழி- மிழலையான்! என, வினை கெடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

நிருத்தனா றங்கன் நீற்றன் நான்மறையன் நீலமார் மிடற்றன்நெற் றிக்கண்ஒருத்தன்மற் றெல்லா வுயிர்கட்கும் உயிராய் யுளனிலன் கேடிலி யுமைகோன்திருத்தமாய் நாளும் ஆடுநீர்ப் பொய்கை சிறியவர் அறிவினின் மிக்கவிருத்தரை யடிவீழ்ந் திடம்புகும் வீழி மிழலையா னெனவினை கெடுமே.
சொற்பிரிப்பு
நிருத்தன், ஆறு அங்கன், நீற்றன், நால்மறையன், நீலம் ஆர் மிடற்றன், நெற்றிக்கண்ஒருத்தன், மற்று எல்லா உயிர்கட்கும் உயிர் ஆய் உளன், இலன், கேடு இலி, உமைகோன்-திருத்தம் ஆய் நாளும் ஆடு நீர்ப் பொய்கை, சிறியவர் அறிவினின் மிக்கவிருத்தரை அடி வீழ்ந்து இடம் புகும் வீழி- மிழலையான் என, வினை கெடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

தாங்கருங் காலந் தவிரவந் திருவர் தம்மொடுங் கூடினா ரங்கம்பாங்கினால் தரித்துப் பண்டுபோ லெல்லாம் பண்ணிய கண்ணுதற் பரமர்தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமாச் செண்பகம் வண்பலா இலுப்பைவேங்கைபூ மகிழால் வெயில்புகா வீழி மிழலையா னெனவினை கெடுமே.
சொற்பிரிப்பு
தாங்க(அ)ருங் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும் கூடினார் அங்கம்பாங்கினால்—தரித்துப் பண்டு போல் எல்லாம் பண்ணிய கண்நுதல் பரமர்தேம் கொள் பூங் கமுகு, தெங்கு, இளங் கொடி, மா, செண்பகம், வண் பலா, இலுப்பை,வேங்கை, பூ மகிழால், வெயில் புகா வீழி- மிழலையான் என, வினை கெடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

கூசுமா மயானங் கோயில்வா யிற்கண் குடவயிற் றனசில பூதம்பூசுமா சாந்தம் பூதிமெல் லோதி பாதிநற் பொங்கர வரையோன்வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர் மலரணைந் தெழுந்தவான் தென்றல்வீசுமாம் பொழில்தேன் துவலைசேர் வீழி மிழலையா னெனவினை கெடுமே.
சொற்பிரிப்பு
கூசு மா மயானம் கோயில் வாயில்கண் குடவயிற்றன சிலபூதம்,பூசு மா சாந்தம் பூதி, மெல்லோதி பாதி, நன் பொங்குஅரவு அரையோன்-வாசம் ஆம் புன்னை, மௌவல், செங்கழுநீர், மலர் அணைந்து எழுந்த வான் தென்றல்வீசு மாம்பொழில் தேன் துவலை சேர்—வீழி- மிழலையான் என, வினை கெடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

பாதியோர் மாதர் மாலுமோர் பாகர் பங்கயத் தயனுமோர் பாலர்ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்கட் கமரர்போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய் பூசுரர் பூமகன் அனையவேதியர் வேதத் தொலியறா வீழி மிழலையா னெனவினை கெடுமே.
சொற்பிரிப்பு
பாதி ஓர் மாதர், மாலும் ஓர்பாகர், பங்கயத்து அயனும்ஓர் பாலர்ஆதிஆய் நடு ஆய் அந்தம் ஆய் நின்ற அடிகளார், அமரர்கட்கு அமரர்,போது சேர் சென்னிப் புரூரவாப் பணி செய் பூசுரர், பூமகன்அனையவேதியர், வேதத்து ஒலி அறா வீழி- மிழலையான் என, வினை கெடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

தன்றவம் பெரிய சலந்தர னுடலந் தடிந்தசக் கரமெனக் கருளென்றன்றரி வழிபட் டிழிச்சிய விமானத் திறையவன் பிறையணி சடையன்நின்றநாட் காலை யிருந்தநாள் மாலை கிடந்தமண் மேல்வரு கலியைவென்றவே தியர்கள் விழாவறா வீழி மிழலையா னெனவினை கெடுமே.
சொற்பிரிப்பு
தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம் எனக்கு அருள்! என்றுஅன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன், பிறை அணி சடையன்-நின்ற நாள் காலை, இருந்த நாள் மாலை, கிடந்த மண்மேல் வரு கலியைவென்ற வேதியர்கள் விழா அறா வீழி- மிழலையான் என,வினை கெடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

கடுத்தவா ளரக்கன் கைலையன் றெடுத்த கரமுரஞ் சிரநெரிந் தலறஅடர்த்ததோர் விரலால் அஞ்செழுத் துரைக்க அருளினன் தடமிகு நெடுவாள்படித்தநான் மறைகேட் டிருந்தபைங் கிளிகள் பதங்களை யோதப்பா டிருந்தவிடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி மிழலையா னெனவினை கெடுமே.
சொற்பிரிப்பு
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம் சிரம் நெரிந்து அலற,அடர்த்தது ஓர்விரலால், அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன், தட மிகு நெடுவாள்படித்த நால்மறை கேட்டு இருந்த பைங்கிளிகள் பதங்களை ஓத, பாடு இருந்தவிடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி- மிழலையான் என,வினை கெடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

அளவிட லுற்ற அயனொடு மாலும் அண்டமண் கெண்டியுங் காணாமுளையெரி யாய மூர்த்தியைத் தீர்த்த முக்கண்எம் முதல்வனை முத்தைத்தளையவிழ் கமலத் தவிசின்மேல் அன்னந் தன்னிளம் பெடையொடும் புல்கிவிளைகதிர்க் கவரி வீசவீற் றிருக்கும் மிழலையா னெனவினை கெடுமே.
சொற்பிரிப்பு
அளவு இடல் உற்ற அயனொடு மாலும் அண்டம் மண் கிண்டியும் காணாமுளை எரி ஆய மூர்த்தியை, தீர்த்தம் முக்கண் எம் முதல்வனை, முத்தை,தளை அவிழ் கமலத்தவிசின் மேல் அன்னம் தன் இளம்பெடையோடும் புல்கி,விளை கதிர்க்கவரி வீச, வீற்றிருக்கும் மிழலையான் என, வினை கெடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

கஞ்சிப்போ துடையார் கையிற்கோ சாரக் கலதிகள் கட்டுரை விட்டுஅஞ்சித்தே விரிய எழுந்தநஞ் சதனை யுண்டம ரர்க்கமு தருளிஇஞ்சிக்கே கதலிக் கனிவிழக் கமுகின் குலையொடும் பழம்விழத் தெங்கின்மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழி மிழலையா னெனவினை கெடுமே.
சொற்பிரிப்பு
கஞ்சிப் போது உடையார், கையில் கோசாரக் கலதிகள், கட்டுரை விட்டுஅஞ்சித் தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு அமரர்க்கு அமுது அருளிஇஞ்சிக்கே கதலிக்கனி விழ, கமுகின் குலையொடும் பழம் விழ, தெங்கின்மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழி- மிழலையான் என, வினை கெடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

வேந்தர்வந் திறைஞ்ச வேதியர் வீழி மிழலையுள் விண்ணிழி விமானத்தேய்ந்ததன் றேவி யோடுறை கின்ற ஈசனை யெம்பெரு மானைத்தோய்ந்தநீர்த் தோணி புரத்துறை மறையோன் தூமொழி ஞானசம் பந்தன்வாய்ந்தபா மாலை வாய்நவில் வாரை வானவர் வழிபடு வாரே.
சொற்பிரிப்பு
வேந்தர் வந்து இறைஞ்ச, வேதியர், வீழி- மிழலையுள், விண் இழிவிமானத்துஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை, எம்பெருமானை,தோய்ந்த நீர்த் தோணிபுரத்து உறை மறையோன்— தூ மொழி ஞானசம்பந்தன்-வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்