திருமுறை 3 · 3.118 · 11

திருச்சிற்றம்பலம்

திருக்கழுமலம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
புறநீர்மை
தலம்
சீர்காழி - 12-கழுமலம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மடல்மலி கொன்றை துன்றுவா ளெருக்கும் வன்னியும் மத்தமுஞ் சடைமேற்படலொலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார் தம்மிடம் பகரில்விடலொலி பரந்த வெண்டிரை முத்தம் இப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்கடலொலி யோதம் மோதவந் தலைக்குங் கழுமல நகரென லாமே.
சொற்பிரிப்பு
மடல் மலி கொன்றை, துன்று வாள் எருக்கும், வன்னியும், மத்தமும், சடைமேல்படல் ஒலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார்தம் இடம் பகரில்,விடல் ஒலி பரந்த வெண்திரை முத்தம் இப்பிகள் கொணர்ந்து, வெள் அருவிக்கடல் ஒலி ஓதம் மோத, வந்து அலைக்கும் கழுமலநகர்எனல் ஆமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

மின்னிய அரவும் வெறிமலர் பலவும் விரும்பிய திங்களுந்தங்குசென்னிய துடையான் தேவர்தம் பெருமான் சேயிழை யொடும்உறை விடமாம்பொன்னியல் மணியு முரிகரி மருப்புஞ் சந்தமும் உந்துவன் றிரைகள்கன்னிய ராடக் கடலொலி மலியுங் கழுமல நகரென லாமே.
சொற்பிரிப்பு
மின்னிய அரவும், வெறிமலர்பலவும், விரும்பிய திங்களும், தங்குசென்னி அது உடையான், தேவர்தம் பெருமான், சேயிழையொடும் உறைவு இடம் ஆம்பொன் இயல் மணியும், முரி கரிமருப்பும், சந்தமும், உந்து வன் திரைகள்கன்னியர் ஆட, கடல் ஒலி மலியும் கழுமலநகர் எனல்ஆமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

சீருறு தொண்டர் கொண்டடி போற்றச் செழுமலர் புனலொடு தூபந்தாருறு கொன்றை தம்முடி வைத்த சைவனார் தங்கிட மெங்கும்ஊருறு பதிகள் உலகுடன் பொங்கி யொலிபுனல் கொளவுடன் மிதந்தகாருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகரென லாமே.
சொற்பிரிப்பு
சீர் உறு தொண்டர், கொண்டு அடி போற்ற, செழு மலர் புனலொடு தூபம்;தார் உறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும்ஊர் உறு பதிகள் உலகு உடன் பொங்கி ஒலிபுனல் கொள, உடன்மிதந்த,கார் உறு செம்மை நன்மையால் மிக்க கழுமலநகர் எனல்ஆமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

மண்ணினா ரேத்த வானுளார் பரச அந்தரத் தமரர்கள் போற்றப்பண்ணினா ரெல்லாம் பலபல வேட முடையவர் பயில்விட மெங்கும்எண்ணினால் மிக்கார் இயல்பினால் நிறைந்தார் ஏந்திழை யவரொடு மைந்தர்கண்ணினால் இன்பங் கண்டொளி பரக்குங் கழுமல நகரென லாமே.
சொற்பிரிப்பு
மண்ணினார் ஏத்த, வான் உளார் பரச, அந்தரத்து அமரர்கள் போற்ற,பண்ணினார் எல்லாம்; பலபல வேடம் உடையவர்; பயில்வு இடம் எங்கும்எண்ணினால் மிக்கார், இயல்பினால் நிறைந்தார், ஏந்திழையவரொடு மைந்தர்கண்ணினால் இன்பம் கண்டு, ஒளி பரக்கும் கழுமலநகர் எனல் ஆமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

சுருதியான் தலையும் நாமகள் மூக்குஞ் சுடரவன் கரமுமுன் னியங்குபரிதியான் பல்லும் இறுத்தவர்க் கருளும் பரமனார் பயின்றினி திருக்கைவிருதினான் மறையும் அங்கமோ ராறும் வேள்வியும் வேட்டவர் ஞானங்கருதினா ருலகிற் கருத்துடை யார்சேர் கழுமல நகரென லாமே.
சொற்பிரிப்பு
சுருதியான் தலையும், நாமகள் மூக்கும், சுடரவன் கரமும், முன் இயங்குபருதியான் பல்லும், இறுத்து அவர்க்கு அருளும் பரமனார்பயின்று இனிது இருக்கைவிருதின் நால்மறையும், அங்கம் ஓர் ஆறும், வேள்வியும் வேட்டவர், ஞானம்கருதினார், உலகில் கருத்து உடையார், சேர் கழுமலநகர் எனல் ஆமே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

புற்றில்வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனிமலர்க் கொன்றைபற்றிவான் மதியஞ் சடையிடை வைத்த படிறனார் பயின்றினி திருக்கைசெற்றுவன் திரைகள் ஒன்றொடொன் றோடிச் செயிர்த்துவண் சங்கொடு வங்கங்கற்றுறை வரைகள் கரைக்குவந் துரைக்குங் கழுமல நகரென லாமே.
சொற்பிரிப்பு
புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார், பனிமலர்க்கொன்றைபற்றி வான்மதியம் சடை இடை வைத்த படிறனார், பயின்றுஇனிது இருக்கைசெற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடிச் செயிர்த்து, வண் சங்கொடு வங்கம்கல்—துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமலநகர் எனல் ஆமே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

அலைபுனற் கங்கை தங்கிய சடையார் அடல்நெடு மதிலொரு மூன்றுங்கொலையிடைச் செந்தீ வெந்தறக் கண்ட குழகனார் கோயில தென்பர்மலையின்மிக் குயர்ந்த மரக்கலஞ் சரக்கு மற்றுமற் றிடையிடை யெங்குங்கலைகளித் தேறிக் கானலில் வாழும் கழுமல நகரென லாமே.
சொற்பிரிப்பு
அலை புனல் கங்கை தங்கிய சடையார், அடல் நெடுமதில் ஒருமூன்றும்கொலை இடைச் செந்தீ வெந்து அறக் கண்ட குழகனார், கோயிலது என்பர்மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடை இடை எங்கும்கலை களித்து ஏறிக் கானலில் வாழும் கழுமலநகர் எனல் ஆமே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

ஒருக்கமுன் நினையாத் தக்கன்றன் வேள்வி யுடைதர வுழறிய படையார்அரக்கனை வரையால் ஆற்றலன் றழித்த அழகனார் அமர்ந்துறை கோயில்பரக்கும்வண் புகழார் பழியவை பார்த்துப் பலபல அறங்களே பயிற்றிக்கரக்குமா றறியா வண்மையால் வாழுங் கழுமல நகரென லாமே.
சொற்பிரிப்பு
ஒருக்க முன் நினையாத் தக்கன்தன் வேள்வி உடைதரஉழறிய படையர்அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார், அமர்ந்து உறை கோயில்பரக்கும் வண்புகழார் பழி அவை பார்த்துப் பலபலஅறங்களே பயிற்றி,கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமலநகர் எனல் ஆமே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

அருவரை பொறுத்த ஆற்றலி னானும் அணிகிளர் தாமரை யானும்இருவரும் ஏத்த எரியுரு வான இறைவனார் உறைவிடம் வினவில்ஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல் வெள்ளமுன் பரப்பக்கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங் கழுமல நகரென லாமே.
சொற்பிரிப்பு
அரு வரை பொறுத்த ஆற்றலினானும், அணி கிளர் தாமரையானும்,இருவரும் ஏத்த, எரிஉரு ஆன இறைவனார் உறைவு இடம் வினவில்,ஒருவர் இவ் உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல் வெள்ளம் முன் பரப்ப,கருவரை சூழ்ந்த கடல் இடை மிதக்கும் கழுமலநகர் எனல் ஆமே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

உரிந்துயர் உருவில் உடைதவிர்ந் தாரும் அத்துகில் போர்த்துழல் வாருந்தெரிந்துபுன் மொழிகள் செப்பின கேளாச் செம்மையார் நன்மையால் உறைவாங்குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கைகருந்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங் கழுமல நகரென லாமே.
சொற்பிரிப்பு
உரிந்து உயர் உருவில் உடை தவிர்ந்தாரும், அத் துகில் போர்த்து உழல்வாரும்,தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளாச் செம்மையார்நன்மையால் உறைவு ஆம்குருந்து, உயர் கோங்கு, கொடிவிடு முல்லை, மல்லிகை, சண்பகம், வேங்கை,கருந்தடங்கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமலநகர் எனல் ஆமே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

கானலங் கழனி யோதம்வந் துலவுங் கழுமல நகருறை வார்மேல்ஞானசம் பந்தன் நற்றமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார்ஊனசம் பந்தத் துறுபிணி நீங்கி உள்ளமும் ஒருவழிக் கொண்டுவானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார் மற்றிதற் காணையும் நமதே.
சொற்பிரிப்பு
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார்மேல்ஞானசம்பந்தன் நல்—தமிழ்மாலை நன்மையால் உரை செய்து நவில்வார்ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி, உள்ளமும் ஒருவழிக் கொண்டுவான் இடை வாழ்வர்; மண்மிசைப் பிறவார்; மற்று இதற்கு ஆணையும் நமதே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்