1
துன்று கொன்றைநஞ் சடையதே தூய கண்டநஞ் சடையதேகன்றின் மானிடக் கையதே கல்லின் மானிடக் கையதேயென்று மேறுவ திடவமேயென்னி டைப்பலி யிடவமேநின்ற தும்மிழலை யுள்ளுமே நீரெனைச் சிறிது முள்ளுமே.
சொற்பிரிப்பு
துன்று கொன்றை நம் சடையதே; தூய கண்டம் நஞ்சு அடையதே;கன்றின்மான் இடக் கையதே; கல்லின்மான் இடக்கை அதே;என்றும் ஏறுவது இடவமே; என் இடைப் பலி இட வ(ம்)மே!நின்றதும் மிழலையுள்ளுமே; நீர் எனைச் சிறிதும் உள்ளுமே!
உரை
உரை எழுதப்படவில்லை