திருமுறை 3 · 3.115 · 11

திருச்சிற்றம்பலம்

திருஆலவாய்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
ஆலவாய் (மதுரை)
நாடு
பாண்டியநாடு

1

ஆலநீழ லுகந்த திருக்கையே யானபாட லுகந்த திருக்கையேபாலின்நேர்மொழி யாளொரு பங்கனே பாதமோதலர் சேர்புர பங்கனேகோலநீறணி மேதகு பூதனே கோதிலார்மன மேவிய பூதனேயாலநஞ்சமு துண்ட களத்தனே யாலவாயுறை யண்டர் களத்தனே.
சொற்பிரிப்பு
"ஆல நீழல் உகந்தது இருக்கையே; ஆன பாடல் உகந்தது இருக்கையே;பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே; பாதம் ஓதலர் சேர் புர பங்கனே;கோல நீறு அணி மே தகு பூதனே; கோது இலார் மனம் மேவிய பூதனே;ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர்கள் அத்தனே."
உரை

உரை எழுதப்படவில்லை

2

பாதியாவுடன் கொண்டது மாலையே பாம்புதார்மலர்க் கொன்றைநன் மாலையேகோதினீறது பூசிடு மாகனே கொண்டநற்கையின் மானிட மாகனேநாதனாடொறு மாடுவ தானையே நாடியன்றுரி செய்தது மானையேவேதநூல்பயில் கின்றது வாயிலே விகிர்தனூர்திரு வாலநல் வாயிலே.
சொற்பிரிப்பு
பாதி ஆய் உடன் கொண்டது மாலையே; பம்பு தார் மலர்க் கொன்றை நல்மாலையே;கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே; கொண்ட நன்கையில் மான் இடம் ஆகனே;நாதன் நாள்தொறும் ஆடுவது ஆன் ஐயே; நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே;வேத நூல் பயில்கின்றது வாயிலே; விகிர்தன் ஊர் திரு ஆல நல்வாயிலே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

காடுநீட துறப்பல கத்தனே காதலானினை வார்த மகத்தனேபாடுபேயொடு பூத மசிக்கவே பல்பிணத்தசை நாடி யசிக்கவேநீடுமாநட மாட விருப்பனே நின்னடித்தொழ நாளு மிருப்பனேயாடனீள்சடை மேவிய வப்பனே யாலவாயினின் மேவிய வப்பனே.
சொற்பிரிப்பு
காடு நீடது உறப் பல கத்தனே; காதலால் நினைவார்தம்அகத்தனே;பாடு பேயோடு பூதம் மசிக்கவே, பல்பிணத் தசை நாடிஅசிக்கவே;நீடும் மாநடம் ஆட விருப்பனே; நின் அடித் தொழ நாளும் இருப்பனே;ஆடல் நீள்சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

பண்டயன்றலை யொன்று மறுத்தியே பாதமோதினர் பாவ மறுத்தியேதுண்டவெண்பிறை சென்னி யிருத்தியே தூயவெள்ளெரு தேறி யிருத்தியேகண்டுகாமனை வேவ விழித்தியே காதலில்லவர் தம்மை யிழித்தியேயண்டநாயக னேமிகு கண்டனே யாலவாயினின் மேவிய கண்டனே.
சொற்பிரிப்பு
பண்டு அயன்தலை ஒன்றும் அறுத்தியே; பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே;துண்ட வெண்பிறை சென்னி இருத்தியே; தூய வெள் எருது ஏறி இருத்தியே;கண்டு காமனை வேவ விழித்தியே; காதல் இல்லவர் தம்மைஇழித்தியேஅண்ட நாயகனே! மிகு கண்டனே! ஆலவாயினில் மேவிய(அ) கண்டனே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

சென்றுதாதை யுகுத்தனன் பாலையே சீறியன்பு செகுத்தனன் பாலையேவென்றிசேர்மழுக் கொண்டுமுன் காலையே வீடவெட்டிடக் கண்டுமுன் காலையேநின்றமாணியை யோடின கங்கையா னிலவமல்கி யுதித்தன கங்கையாலன்றுநின்னுரு வாகத் தடவியே யாலவாயர னாகத் தடவியே.
சொற்பிரிப்பு
சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி, அன்பு செகுத்தனன்பால் ஐயேவென்றி சேர் மழுக்கொண்டு, முன்காலையே, வீட வெட்டிடக் கண்டு, முன் காலையே,நின்ற மாணியை, ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து, அனகம் கையால்,அன்று, நின் உரு ஆகத் தடவியே! ஆலவாய், அரன்நாகத்து அடவியே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

நக்கமேகுவர் நாடுமோ ரூருமே நாதன்மேனியின் மாசுண மூருமேதக்கபூமனைச் சுற்றக் கருளொடே தாரமுய்த்தது பாணற் கருளொடேமிக்கதென்னவன் தேவிக் கணியையே மெல்லநல்கிய தொண்டர்க் கணியையேயக்கினாரமு துண்கல னோடுமே யாலவாயர னாருமை யோடுமே.
சொற்பிரிப்பு
நக்கம் ஏகுவர், நாடும் ஓர் ஊருமே; நாதன் மேனியில் மாசுணம் ஊருமே;தக்க பூ, மனைச் சுற்ற, கருளொடே, தாரம், உய்த்தது, பாணற்கு, அருளொடே;மிக்க தென்னவன் தேவிக்கு அணியையே மெல்ல நல்கியதொண்டர்க்கு அணியையே;அக்கினார் அமுது உண்கலன் ஓடுமே; ஆலவாய், அரனார் உமையோடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

வெய்யவன்பல் லுகுத்தது குட்டியே வெங்கண்மாசுணங் கையது குட்டியேயையனேயன லாடிய மெய்யனே யன்பினால்நினை வார்க்கருள் மெய்யனேவையமுய்யவன் றுண்டது காளமே வள்ளல்கையது மேவுகங் காளமேயையமேற்ப துரைப்பது வீணையே யாலவாயரன் கையது வீணையே.
சொற்பிரிப்பு
வெய்யவன் பல் உகுத்தது குட்டியே; வெங்கண் மாசுணம், கையது, குட்டியே;ஐயனே! அனல் ஆடிய மெய்யனே! அன்பினால்நினைவார்க்கு அருள் மெய்யனே!வையம் உய்ய அன்று உண்டது காளமே; வள்ளல் கையது மேவு கங்காளமே;ஐயம் ஏற்பது உரைப்பது வீண், ஐயே! ஆலவாய் அரன் கையது வீணையே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

தோள்கள்பத்தொடு பத்து மயக்கியே தொக்கதேவர் செருக்கை மயக்கியேவாளரக்க னிலத்து களித்துமே வந்தமால்வரை கண்டு களித்துமேநீள்பொருப்பை யெடுத்தவுன் மத்தனே நின்விரற்றலை யான்மத மத்தனேயாளுமாதி முறித்தது மெய்கொலோ வாலவாயர னுய்த்தது மெய்கொலோ.
சொற்பிரிப்பு
தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே, தொக்க தேவர்செருக்கை மயக்கியே,வாள் அரக்கன் நிலத்துக் களித்துமே, வந்து அ(ம்)மால்வரை கண்டு உகளித்துமே,நீள்பொருப்பை எடுத்த உன்மத்தனே, நின் விரல்—தலையால்மதம் மத்தனே!ஆளும் ஆதி முறித்தது மெய்கொலோ? ஆலவாய் அரன் உய்த்ததும் மெய்கொலோ?
உரை

உரை எழுதப்படவில்லை

9

பங்கயத்துள நான்முகன் மாலொடே பாதம்நீண்முடி நேடிட மாலொடேதுங்கநற்றழ லின்னுரு வாயுமே தூயபாடல் பயின்றது வாயுமேசெங்கயற்கணி னாரிடு பிச்சையே சென்றுகொண்டுரை செய்வது பிச்சையேயங்கியைத்திகழ் விப்பதி டக்கையே யாலவாயர னாரதி டக்கையே.
சொற்பிரிப்பு
பங்கயத்து உள நான்முகன், மாலொடே, பாதம் நீள் முடி நேடிட, மாலொடே,துங்க நல்—தழலின் உருஆயுமே; தூய பாடல் பயின்றது, வாயுமே;செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு, உரைசெய்வது பிச்சு ஐயே!அங்கியைத் திகழ்விப்பது இடக்கையே; ஆலவாய், அரனாரது இடக் கையே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

தேரரோடம ணர்க்குநல் கானையே தேவர்நாடொறுஞ் சேர்வது கானையேகோரமட்டது புண்டரி கத்தையே கொண்டநீள்கழல் புண்டரி கத்தையேநேரிலூர்க ளழித்தது நாகமே நீள்சடைத்திகழ் கின்றது நாகமேயாரமாக வுகந்தது மென்பதே யாலவாயர னாரிட மென்பதே.
சொற்பிரிப்பு
தேரரோடு அமணர்க்கு நல்கானையே; தேவர் நாள்தொறும் சேர்வது கானையே;கோரம் அட்டது புண்டரிகத்தையே; கொண்ட, நீள் கழல் புண்டரிகத்தையே;நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே; நீள்சடைத் திகழ்கின்றது நாகமே;ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே; ஆலவாய், அரனார் இடம் என்பதே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

ஈனஞானிக டம்மொடு விரகனே யேறுபல்பொருண் முத்தமிழ் விரகனேயானகாழியுள் ஞானசம் பந்தனே யாலவாயினின் மேயசம் பந்தனேயானவானவர் வாயினு ளத்தனே யன்பரானவர் வாயினு ளத்தனேநானுரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே.
சொற்பிரிப்பு
ஈன ஞானிகள் தம்மொடு விரகனே! ஏறு பல்பொருள் முத்தமிழ் விரகனே,ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய சம்பந்தனே!ஆன வானவர் வாயின் உளத்தனே! அன்பர் ஆனவர் வாயினுள் அத்தனே!நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு, இவை நற்று அமிழ் பத்துமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்