திருமுறை 3 · 3.114 · 11

திருச்சிற்றம்பலம்

திருவேகம்பம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
நாடு
தொண்டைநாடு

1

பாயுமால்விடை மேலொரு பாகனே பாவைதன்னுரு மேலொரு பாகனேதூயவானவர் வேதத் துவனியே சோதிமாலெரி வேதத் துவனியேயாயுநன்பொருள் நுண்பொரு ளாதியே யாலநீழ லரும்பொரு ளாதியேகாயவின்மதன் பட்டது கம்பமே கண்ணுதற்பர மற்கிடங் கம்பமே.
சொற்பிரிப்பு
பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே; பாவை தன் உருமேல்ஒரு பாகனே;தூய வானவர் வேதத் துவனியே; சோதி மால் எரி வேதத்து வ(ன்)னியே;ஆயும் நன்பொருள் நுண்பொருள் ஆதியே; ஆலநீழல் அரும்பொருள் ஆதியே;காய, வில் மதன் பட்டது கம்பமே; கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

சடையணிந்ததும் வெண்டலை மாலையே தம்முடம்பிலும் வெண்டலை மாலையேபடையிலங்கையிற் சூலம தென்பதே பரந்திலங்கையிற் சூலம தென்பதேபுடைபரப்பன பூத கணங்களே போற்றிசைப்பன பூத கணங்களேகடைகடோ று மிரப்பது மிச்சையே கம்பமேவி யிருப்பது மிச்சையே.
சொற்பிரிப்பு
சடை அணிந்ததும் வெண்டு அலைமாலையே; தம் உடம்பிலும் வெண்தலைமாலையே;படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே; பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே;புடை பரப்பன, பூதகணங்களே; போற்று இசைப்பன, பூதகணங்களேகடைகள்தோறும் இரப்பதும் மிச்சையே; கம்பம் மேவி இருப்பதும் இச்சையே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

வெள்ளெருக்கொடு தும்பை மிலைச்சியே வேறுமுன்செலத் தும்பை மிலைச்சியேயள்ளிநீறது பூசுவ தாகமே யானமாசுண மூசுவ தாகமேபுள்ளியாடை யுடுப்பது கத்துமே போனவூழி யுடுப்பது கத்துமேகள்ளுலாமலர்க் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.
சொற்பிரிப்பு
வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே; ஏறு முன் செலத் தும்பை மிலைச்சியே!அள்ளி நீறு அது பூசுவ தாகமே; ஆன மாசுணம் மூசுவதுஆகமே;புள்ளி ஆடை உடுப்பது கத்துமே; போன, ஊழி, உடுப்பது உகத்துமே;கள் உலாம் மலர்க் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர்க் கம்பம் இருப்பு அதே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

முற்றலாமை யணிந்த முதல்வரே மூரியாமை யணிந்த முதல்வரேபற்றிவாளர வாட்டும் பரிசரே பாலுநெய்யுகந் தாட்டும் பரிசரேவற்றலோடு கலம்பலி தேர்வதே வானினோடு கலம்பலி தேர்வதேகற்றிலாமனங் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.
சொற்பிரிப்பு
முற்றல் ஆமை அணிந்த முதல்வரே; மூரி ஆமை அணிந்தமுதல்வரே;பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே; பாலும் நெய் உகந்து ஆட்டும் பரிசரே;வற்றல் ஓடு கலம், பலி தேர்வதே; வானினோடு கலம், பலி,தேர்வதே,கற்றிலா மனம் கம்பம் இருப்பதே; காஞ்சி மா நகர்க் கம்பம் இருப்பதே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

வேடனாகி விசையற் கருளியே வேலைநஞ்ச மிசையற் கருளியேயாடுபாம்பரை யார்த்த துடையதே யஞ்சுபூதமு மார்த்த துடையதேகோடுவான்மதிக் கண்ணி யழகிதே குற்றமின்மதிக் கண்ணி யழகிதேகாடுவாழ்பதி யாவது மும்மதே கம்பமாபதி யாவது மும்மதே.
சொற்பிரிப்பு
வேடன் ஆகி விசையற்கு அருளியே; வேலை நஞ்சம் மிசையல் கருளியே;ஆடுபாம்பு அரை ஆர்த்தது உடை அதே; அஞ்சு பூதமும்ஆர்த்தது உடையதே;கோடு வான்மதிக்கண்ணி அழகிதே; குற்றம் இல் மதிக் கண்ணி அழகிதே;காடு வாழ் பதி ஆவதும் உ(ம்)மது; ஏகம்பம் மா பதி ஆவதும் உ(ம்)மதே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

இரும்புகைக்கொடி தங்கழல் கையதே யிமயமாமக டங்கழல் கையதேயரும்புமொய்த்த மலர்ப்பொறை தாங்கியே யாழியான்றன் மலர்ப்பொறை தாங்கியேபெரும்பகனட மாடுதல் செய்துமே பேதைமார்மனம் வாடுதல் செய்துமேகரும்புமொய்த்தெழு கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.
சொற்பிரிப்பு
இரும் புகைக்கொடி தங்கு அழல் கையதே; இமயமாமகள், தம் கழல், கையதே;அரும்பு மொய்த்த மலர்ப் பொறை தாங்கியே; ஆழியான் தன் மலர்ப் பொறை தாங்கியே;பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே, பேதைமார் மனம் வாடுதல் செய்துமே,கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே, காஞ்சி மா நகர்க் கம்பம் இருப்பு அதே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

முதிரமங்கை தவஞ்செய்த காலமே முன்புமங்கை தவஞ்செய்த காலமேவெதிர்களோடகில் சந்த முருட்டியே வேழமோடகில் சந்த முருட்டியேயதிரவாறு வரத்தழு வத்தொடே யானையாடு வரத்தழு வத்தொடேகதிர்கொள்பூண்முலைக் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.
சொற்பிரிப்பு
முதிரம் மங்கை தவம் செய்த காலமே, முன்பும், அம்கைதவம் செய்த காலமே,வெதிர்களோடு அகில் சந்தம் முருட்டியே, வேழம் ஓடகில் சந்தம் உருட்டியே,அதிர ஆறு வரத்து அழுவத்தொடே, ஆன் ஐ ஆடுவரத்தழுவத்தொடே,கதிர் கொள் பூண் முலைக் கம்பம் இருப்பதே; காஞ்சி மா நகர்க் கம்பம் இருப்பதே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

பண்டரக்க னெடுத்த பலத்தையே பாய்ந்தரக்க னெடுத்த பலத்தையேகொண்டரக்கிய துங்கால் விரலையே கோளரக்கிய துங்கால் விரலையேயுண்டுழன்றது முண்டத் தலையிலே யுடுபதிக்கிட முண்டத் தலையிலேகண்டநஞ்ச மடக்கினை கம்பமே கடவுள்நீயிடங் கொண்டது கம்பமே.
சொற்பிரிப்பு
பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல் நெடுத்த (அ)பலத்தையேகொண்டு, அரக்கியதும் கால்விரலையே; கோள் அரக்கியதும் கால்வு இரலையே;உண்டு உழன்றதும் முண்டத் தலையிலே; உடுபதிக்கு இடம் உண்டு, அத் தலையிலே;கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே; கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

தூணியான சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியேபேணியோடு பிரமப் பறவையே பித்தனான பிரமப் பறவையேசேணினோடு கீழூழி திரிந்துமே சித்தமோடு கீழூழி திரிந்துமேகாணநின்றன ருற்றது கம்பமே கடவுள்நீயிட முற்றது கம்பமே.
சொற்பிரிப்பு
தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தம் ஆன சுடர்விடு சோதியே;பேணி ஓடு பிரமப் பறவையே பித்தன் ஆன பிரமப்பறவையே,சேணினோடு, கீழ், ஊழி திரிந்துமே, சித்தமோடு கீழ், ஊழி திரிந்துமே,காண நின்றனர் உற்றது கம்பமே; கடவுள் நீ இடம் உற்றது கம்பமே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

ஓருடம்பினை யீருரு வாகவே யுன்பொருட்டிற மீருரு வாகவேயாருமெய்தற் கரிது பெரிதுமே யாற்றவெய்தற் கரிது பெரிதுமேதேரரும்மறி யாது திகைப்பரே சித்தமும்மறி யாது திகைப்பரேகார்நிறத்தம ணர்க்கொரு கம்பமே கடவுணீயிடங் கொண்டது கம்பமே.
சொற்பிரிப்பு
ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே, உன் பொருள்—திறம் ஈர் உரு ஆகவே,ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே; ஆற்ற எய்தற்கு அரிது, பெரிதுமே;தேரரும் அறியாது திகைப்பரே; சித்தமும் மறியா, துதி கைப்பரே;கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே; கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

கந்தமார்பொழில் சூழ்தரு கம்பமே காதல்செய்பவர் தீர்த்திடு கம்பமேபுந்திசெய்து விரும்பிப் புகலியே பூசுரன்றன் விரும்பிப் புகலியேயந்தமில்பொரு ளாயின கொண்டுமே யண்ணலின்பொரு ளாயின கொண்டுமேபந்தனின்னியல் பாடிய பத்துமே பாடவல்லவ ராயின பத்துமே.
சொற்பிரிப்பு
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர் தீர்த்திடு உகு அம்பமே;புந்தி செய்வது விரும்பிப் புகலியே பூசுரன் தன் விரும்பிப்புகலியேஅந்தம் இல் பொருள் ஆயின கொண்டுமே, அண்ணலின் பொருள் ஆயின கொண்டுமே,பந்தன் இன் இயல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின,பத்துமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்