திருமுறை 3 · 3.113 · 12

திருச்சிற்றம்பலம்

திருக்கழுமலம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
சீர்காழி - பல்பெயர்ப்பத்து
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

உற்றுமை சேர்வது மெய்யினையே யுணர்வது நின்னருள் மெய்யினையேகற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையேயற்ற மறைப்பது முன்பணியே யமரர்கள் செய்வது முன்பணியேபெற்று முகந்தது கந்தனையே பிரம புரத்தை யுகந்தனையே.
சொற்பிரிப்பு
உற்றுஉமைசேர்வது மெய்யினையே; உணர்வதும் நின்அருள் மெய்யினையேகற்றவர் காய்வது காமனையே; கனல் விழி காய்வது காமனையே;அற்றம் மறைப்பதும் உன் பணியே; அமரர்கள் செய்வதும் உன் பணியே;பெற்று முகந்தது கந்தனையே; பிரமபுரத்தை உகந்தனையே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

சதிமிக வந்த சலந்தரனே தடிசிர நேர்கொள் சலந்தரனேயதிரொளி சேர்திகி ரிப்படையா லமர்ந்தன ரும்பர் துதிப்படையால்மதிதவழ் வெற்பது கைச்சிலையே மருவிட மேற்பது கைச்சிலையேவிதியினி லிட்ட விரும்பரனே வேணு புரத்தை விரும்பரனே.
சொற்பிரிப்பு
சதி மிக வந்த சலந்தரனே தடி சிரம் நேர் கொள் சலம் தரனே!அதிர் ஒளி சேர் திகிரிப்படையால் அமர்ந்தனர் உம்பர், துதிப்பு அடையால்,மதி தவழ் வெற்பு அது கைச் சிலையே; மரு விடம் ஏற்பதுகைச்சிலையேவிதியினில் இட்டு அவிரும் பரனே! வேணுபுரத்தை விரும்புஅரனே!
உரை

உரை எழுதப்படவில்லை

3

காதம ரத்திகழ் தோடினனே கானவ னாய்க்கடி தோடினனேபாதம தாற்கூற் றுதைத்தனனே பார்த்த னுடலம் புதைத்தனனேதாதவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினைய தரித்தனனேபோத மமரு முரைப்பொருளே புகலி யமர்ந்த பரம்பொருளே.
சொற்பிரிப்பு
காது அமரத் திகழ் தோடினனே; கானவனாய்க் கடிது ஓடினனே;பாதம் அதால் கூற்று உதைத்தனனே; பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே;தாது அவிழ் கொன்றை தரித்தனனே; சார்ந்த வினை அது அரித்தனனேபோதம் அமரும் உரைப் பொருளே, புகலி அமர்ந்தபரம்பொருளே
உரை

உரை எழுதப்படவில்லை

4

மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே மகிழ்ந்தரை சேர்வது மாசுணமேமெய்த்துடல் பூசுவர் மேன்மதியே வேதம தோதுவர் மேன்மதியேபொய்த்தலை யோடுறு மத்தமதே புரிசடை வைத்தது மத்தமதேவித்தக ராகிய வெங்குருவே விரும்பி யமர்ந்தனர் வெங்குருவே.
சொற்பிரிப்பு
மைத் திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரைசேர்வதும்; மா சு(ண்)ணமேமெய்த்து உடல் பூசுவர்; மேல் மதியே; வேதம் அது ஓதுவர், மேல் மதியே;பொய்த் தலை ஓடு உறும், அத்தம் அதே; புரிசடை வைத்தது, மத்தம் அதே;வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர், வெங்குருவே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

உடன்பயில் கின்றனன் மாதவனே யுறுபொறி காய்ந்திசை மாதவனேதிடம்பட மாமறை கண்டனனே திரிகுண மேவிய கண்டனனேபடங்கொ ளரவரை செய்தனனே பகடுரி கொண்டரை செய்தனனேதொடர்ந்த துயர்க்கொரு நஞ்சிவனே தோணி புரத்துறை நஞ்சிவனே.
சொற்பிரிப்பு
உடன்பயில்கின்றனன், மாதவனே, உறு பொறி காய்ந்து இசை மா தவனே;திடம் பட மாமறை கண்டனனே, திரிகுணம் மேவிய கண்டனனே;படம்கொள் அரவு அரை செய்தனனே; பகடு உரிகொண்டு அரைசெய்தனனே;தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே, தோணிபுரத்து உறை நம் சிவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

திகழ்கைய தும்புகை தங்கழலே தேவர் தொழுவதுந் தங்கழலேயிகழ்பவர் தாமொரு மானிடமே யிருந்தனு வோடெழில் மானிடமேமிகவரு நீர்கொளு மஞ்சடையே மின்னிகர் கின்றது மஞ்சடையேதகவிர தங்கொள்வர் சுந்தரரே தக்கத ராயுறை சுந்தரரே.
சொற்பிரிப்பு
திகழ் கையதும் புகை தங்கு அழலே; தேவர் தொழுவதும்தம் கழலே;இகழ்பவர் தாம் ஒரு மான் இடமே; இருந் தனுவோடு எழில் மானிடமே;மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே, மின் நிகர்கின்றதும், அம் சடையே,தக இரதம் கொள் வசுந்தரரே, தக்க தராய் உறை சுந்தரரே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

ஓர்வரு கண்கள் இணைக்கயலே யுமையவள் கண்க ளிணைக்கயலேயேர்மரு வுங்கழ னாகமதே யெழில்கொ ளுதாசன னாகமதேநீர்வரு கொந்தள கங்கையதே நெடுஞ்சடை மேவிய கங்கையதேசேர்வரு யோகதி யம்பகனே சிரபுர மேயதி யம்பகனே.
சொற்பிரிப்பு
ஓர்வுஅரு கண்கள் இணைக்க(அ)யலே; உமையவள் கண்கள் இணைக்கயலே;ஏர் மருவும் கழல் நாகம் அதே; எழில் கொள் உதாசனன்,ஆகம் அதே;நீர் வரு கொந்து அளகம் கையதே, நெடுஞ்சடை மேவியகங்கையதே;சேர்வு அரு யோக தியம்பகனே! சிரபுரம் மேய தி அம்பு அகனே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

ஈண்டு துயிலம ரப்பினனே யிருங்கணி டந்தடி யப்பினனேதீண்டல ரும்பரி சக்கரமே திகழ்ந்தொளி சேர்வது சக்கரமேவேண்டி வருந்த நகைத்தலையே மிகைத்தவ ரோடுந கைத்தலையேபூண்டனர் சேரலு மாபதியே புறவம மர்ந்த வுமாபதியே.
சொற்பிரிப்பு
ஈண்டு துயில் அமர் அப்பினனே இருங் கண் இடந்து அடி அப்பினனே;தீண்டல் அரும் பரிசு அக் கரமே திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே;வேண்டி வருந்த நகைத் தலையே மிகைத்து அவரோடு நகைத்தலையேபூண்டனர்; சேரலும் மா பதியே, புறவம் அமர்ந்த உமாபதியே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

நின்மணி வாயது நீழலையே நேசம தானவர் நீழலையேயுன்னி மனத்தெழு சங்கமதே யொளியத னோடுறு சங்கமதேகன்னிய ரைக்கவ ருங்களனே கடல்விட முண்ட கருங்களனேமன்னி வரைப்பதி சண்பையதே வாரி வயன்மலி சண்பையதே.
சொற்பிரிப்பு
நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர்நீழலையே;உன்னி, மனத்து, எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே;கன்னியரைக் கவரும் க(ள்)ளனே! கடல்விடம் உண்ட கருங் களனே;மன்னி வரைப் பதி, சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

இலங்கை யரக்கர் தமக்கிறையே யிடந்து கயிலை யெடுக்கிறையேபுலன்கள் கெடவுடன் பாடினனே பொறிகள் கெடவுடன் பாடினனேயிலங்கிய மேனி யிராவணனே யெய்து பெயரு மிராவணனேகலந்தருள் பெற்றது மாவசியே காழி யரனடி மாவசியே.
சொற்பிரிப்பு
இலங்கை அரக்கர் தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க, இறையே,புலன்கள் கெட உடன் பாடினனே; பொறிகள் கெட உடன்பாடினனே;இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே;கலந்து அருள் பெற்றதும் மா வசியே; காழி அரன் அடி மா வசியே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

கண்ணிகழ் புண்டரி கத்தினனே கலந்திரி புண்டரி கத்தினனேமண்ணிக ழும்பரி சேனமதே வானக மேய்வகை சேனமதேநண்ணி யடிமுடி யெய்தலரே நளிர்மலி சோலையி லெய்தலரேபண்ணியல் கொச்சை பசுபதியே பசுமிக வூர்வர் பசுபதியே.
சொற்பிரிப்பு
கண் நிகழ் புண்டரிகத்தினனே, கலந்து இரி புண் தரிகத்தினனே,மண் நிகழும் பரிசு ஏனம் அதே, வானகம் ஏய் வகை சேனம் அதே,நண்ணி அடிமுடி எய்தலரே; நளிர் மலி சோலையில் எய்து அலரேபண் இயல் கொச்சை பசுபதியே, பசு மிக ஊர்வர்,பசுபதியே.
உரை

உரை எழுதப்படவில்லை

12

பருமதின் மதுரைமன் னவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரேவருநதி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனேகருதலி லிசைமுர றருமருளே கழுமலம் அமரிறை தருமருளேமருவிய தமிழ்விர கனமொழியே வல்லவர் தம்மிடர் திடமொழியே.
சொற்பிரிப்பு
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரேவரு நதி இடை மிசை வரு கரனே! வசையொடும் அலர் கெட அருகு அரனே!கருதல்இல்இசை முரல்தரும் மருளே, கழுமலம் அமர் இறை தரும் அருளேமருவிய தமிழ்விரகன மொழியே வல்லவர்தம் இடர், திடம், ஒழியே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்