திருமுறை 3 · 3.109 · 11

திருச்சிற்றம்பலம்

கூடச்சதுக்கம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
ஆனைக்கா
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மண்ணது வுண்டரி மலரோன்காணாவெண்ணாவல் விரும்பும யேந்திரருங்கண்ணது வோங்கிய கயிலையாரும்அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.
சொற்பிரிப்பு
மண் அது உண்ட(அ)ரி மலரோன் காணாவெண்நாவல் விரும்பு மயேந்திரரும்,கண்ணது ஓங்கிய கயிலையாரும்,அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

வந்துமா லயனவர் காண்பரியார்வெந்தவெண் ணீறணி மயேந்திரருங்கந்தவார் சடையுடைக் கயிலையாரும்அந்தண்ஆ ரூராதி யானைக்காவே.
சொற்பிரிப்பு
வந்து மால் அயன் அவர் காண்பு அரியார்வெந்த வெண் நீறு அணி மயேந்திரரும்;கந்த வார்சடை உடைக் கயிலையாரும்;அம் தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

மாலயன் தேடிய மயேந்திரருங்காலனை உயிர்கொண்ட கயிலையாரும்வேலைய தோங்கும்வெண் ணாவலாரும்ஆலைஆ ரூராதி யானைக்காவே.
சொற்பிரிப்பு
மால் அயன் தேடிய மயேந்திரரும்,காலனை உயிர்கொண்ட கயிலையாரும்,வேலை அது ஓங்கும் வெண் நாவலாரும்,ஆலை ஆரூர் ஆதி ஆனைக்காவே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

கருடனை யேறரி அயனார்காணார்வெருள்விடை யேறிய மயேந்திரருங்கருடரு கண்டத்தெம் கயிலையாரும்அருளன்ஆ ரூராதி யானைக்காவே.
சொற்பிரிப்பு
கருடனை ஏறு அரி, அயனார், காணார்வெருள் விடை ஏறிய மயேந்திரரும்;கருள்தரு கண்டத்து எம் கயிலையாரும்;அருளன் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

மதுசூதனன் நான்முகன் வணங்கரியார்மதியது சொல்லிய மயேந்திரருங்கதிர்முலை புல்கிய கயிலையாரும்அதியன்ஆ ரூராதி யானைக்காவே.
சொற்பிரிப்பு
மதுசூதனன் நான்முகன் வணங்க(அ)ரியார்மதி அது சொல்லிய மயேந்திரரும்,கதிர்முலை புல்கிய கயிலையாரும்,அதியன் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

சக்கரம் வேண்டுமால் பிரமன்காணாமிக்கவர் கயிலை மயேந்திரருந்தக்கனைத் தலையரி தழலுருவர்அக்கணி யவராரூர் ஆனைக்காவே.
சொற்பிரிப்பு
சக்கரம் வேண்டும் மால் பிரமன் காணாமிக்கவர் கயிலை மயேந்திரரும்,தக்கனைத் தலை அரி தழல் உருவர்அக்கு அணியவர் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

கண்ணனும் நான்முகன் காண்பரியார்வெண்ணாவல் விரும்பு மயேந்திரருங்கண்ணப்பர்க் கருள்செய்த கயிலையெங்கள்அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.
சொற்பிரிப்பு
கண்ணனும், நான்முகன், காண்பு அரியார்வெண் நாவல் விரும்பு மயேந்திரரும்,கண்ணப்பர்க்கு அருள் செய்த கயிலை எங்கள்அண்ணல், ஆரூர் ஆதி ஆனைக்காவே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

கடல்வண்ணன் நான்முகன் காண்பரியார்தடவரை யரக்கனைத் தலைநெரித்தார்விடமது வுண்டவெம் மயேந்திரரும்அடல்விடை யாரூராதி யானைக்காவே
சொற்பிரிப்பு
கடல் வண்ணன் நான்முகன் காண்பு அரியார்தடவரை அரக்கனைத் தலை நெரித்தார்விடம் அது உண்ட எம் மயேந்திரரும்;அடல் விடை ஆரூர் ஆதி ஆனைக்காவே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

ஆதிமால் அயனவர் காண்பரியார்வேதங்கள் துதிசெயும் மயேந்திரருங்காதிலோர் குழையுடைக் கயிலையாரும்ஆதிஆ ரூரெந்தை யானைக்காவே.
சொற்பிரிப்பு
ஆதி, மால் அயன் அவர் காண்பு அரியார்வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும்;காதில் ஒர் குழை உடைக் கயிலையாரும்;ஆதி ஆரூர் எந்தை ஆனைக்காவே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

அறிவில் அமண்புத்தர் அறிவுகொள்ளேல்வெறியமான் கரத்தாரூர் மயேந்திரரும்மறிகட லோன்அயன் தேடத்தானும்அறிவரு கயிலையோன் ஆனைக்காவே.
சொற்பிரிப்பு
அறிவு இல் அமண்புத்தர் அறிவு கொள்ளேல்!வெறிய மான் கரத்து ஆரூர் மயேந்திரரும்,மறிகடலோன் அயன் தேடத் தானும்அறிவு அரு கயிலையோன்—ஆனைக்காவே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

ஏனமா லயனவர் காண்பரியார்கானமார் கயிலைநன் மயேந்திரரும்ஆனஆ ரூராதி யானைக்காவைஞானசம் பந்தன தமிழ்சொல்லுமே.
சொற்பிரிப்பு
ஏனம்மால் அயன் அவர் காண்பு அரியார்கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும்,ஆன ஆரூர், ஆதி ஆனைக்காவைஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே!
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்