திருமுறை 3 · 3.107 · 11

திருச்சிற்றம்பலம்

திருநாரையூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
நாரையூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

கடலிடை வெங்கடு நஞ்சமுண்ட கடவுள் விடையேறிஉடலிடை யிற்பொடிப் பூசவல்லான் உமையோ டொருபாகன்அடலிடை யிற்சிலை தாங்கியெய்த அம்மான் அடியார்மேல்நடலைவி னைத்தொகை தீர்த்துகந் தானிடம் நாரையூர்தானே.
சொற்பிரிப்பு
கடல் இடை வெங்கடு நஞ்சம் உண்ட கடவுள், விடை ஏறி,உடல் இடையின் பொடிப் பூச வல்லான், உமையோடு ஒருபாகன்,அடல் இடையில் சிலை தாங்கி எய்த அம்மான், அடியார்மேல்நடலை வினைத் தொகை தீர்த்து உகந்தான், இடம் நாரையூர்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம் விரிபூ மலர்க்கொன்றைபெண்ணின்முன் னேமிக வைத்துகந்த பெருமான் எரியாடிநண்ணிய தன்னடி யார்களோடுந் திருநாரை யூரானென்றெண்ணுமின் நும்வினை போகும்வண்ணம் இறைஞ்சும் நிறைவாமே.
சொற்பிரிப்பு
“விண்ணின் மின் நேர் மதி, துத்தி நாகம், விரிபூமலர்க்கொன்றை,பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான்; எரிஆடிநண்ணிய தன் அடியார்களோடும் திரு நாரையூரான்” என்றுஎண்ணுமின்! நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும்! நிறைவு ஆமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

தோடொரு காதொரு காதுசேர்ந்த குழையான் இழைதோன்றும்பீடொரு கால்பிரி யாதுநின்ற பிறையான் மறையோதிநாடொரு காலமுஞ் சேரநின்ற திருநாரை யூரானைப்பாடுமின் நீர்பழி போகும்வண்ணம் பயிலும் உயர்வாமே.
சொற்பிரிப்பு
தோடு ஒரு காது, ஒரு காது சேர்ந்த குழையான், இழைதோன்றும்பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான், மறை ஓதி,நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானைப்பாடுமின், நீர் பழி போகும் வண்ணம்! பயிலும்! உயர்வு ஆமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

வெண்ணில வஞ்சடை சேரவைத்து விளங்குந் தலையேந்திப்பெண்ணில மர்ந்தொரு கூறதாய பெருமான் அருளார்ந்தஅண்ணல்மன் னியுறை கோயிலாகும் அணிநாரை யூர்தன்னைநண்ணல மர்ந்துற வாக்குமின்கள் நடலை கரிசறுமே.
சொற்பிரிப்பு
வெண் நிலவு அம் சடை சேர வைத்து, விளங்கும் தலை ஏந்தி,பெண்ணில் அமர்ந்து ஒரு கூறு அது ஆய பெருமான்; அருள் ஆர்ந்தஅண்ணல்; மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர் தன்னைநண்ணல் அமர்ந்து, உறவு ஆக்குமின்கள்! நடலைகரிசுஅறுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

வானமர் தீவளி நீர்நிலனாய் வழங்கும் பழியாகும்ஊனமர் இன்னுயிர் தீங்குகுற்ற முறைவாற் பிறிதின்றிநானம ரும்பொரு ளாகிநின்றான் திருநாரை யூரெந்தைகோனவ னைக்குறு கக்குறுகா கொடுவல் வினைதானே.
சொற்பிரிப்பு
வான், அமர் தீ, வளி, நீர், நிலன் ஆய், வழங்கும் பழி ஆகும்ஊன் அமர் இன் உயிர் தீங்கு குற்றம் உறைவால், பிறிதுஇன்றி,நான் அமரும் பொருள் ஆகி நின்றான்— திரு நாரையூர் எந்தை,கோன்; அவனைக் குறுகக் குறுகா, கொடுவல் வினைதானே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

கொக்கிற குங்குளிர் சென்னிமத்தங் குலாய மலர்சூடிஅக்கர வோடரை யார்த்துகந்த அழகன் குழகாகநக்கம ருந்திரு மேனியாளன் திருநாரை யூர்மேவிப்புக்கம ரும்மனத் தோர்கள்தம்மைப் புணரும் புகல்தானே
சொற்பிரிப்பு
கொக்கு இறகும், குளிர் சென்னி, மத்தம் குலாய மலர் சூடி,அக்கு அரவோடு அரை ஆர்த்து, உகந்த அழகன்; குழகு ஆக,நக்கு அமரும் திருமேனியாளன்; திரு நாரையூர் மேவிப்புக்கு அமரும் மனத்தோர்கள் தம்மைப் புணரும், புகல்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

ஊழியும் இன்பமுங் காலமாகி உயருந் தவமாகிஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை வினையின் புணர்ப்பாகிநாழிகை யும்பல ஞாயிறாகி நளிர்நாரை யூர்தன்னில்வாழியர் மேதகு மைந்தர்செய்யும் வகையின் விளைவாமே.
சொற்பிரிப்பு
ஊழியும் இன்பமும் காலம் ஆகி, உயரும் தவம் ஆகி,ஏழ் இசையின் பொருள், வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி,நாழிகையும் பல ஞாயிறு ஆகி, நளிர் நாரையூர் தன்னில்வாழியர், மேதகு மைந்தர், செய்யும் வகையின் விளைவு ஆமே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

கூசமி லாதரக் கன்வரையைக் குலுங்க எடுத்தான்றோள்நாசம தாகி இறஅடர்த்த விரலான் கரவாதார்பேசவி யப்பொடு பேணநின்ற பெரியோன் இடம்போலுந்தேசமு றப்புகழ் செம்மைபெற்ற திருநாரை யூர்தானே.
சொற்பிரிப்பு
கூசம் இலாது அரக்கன் வரையைக் குலுங்க எடுத்தான் தோள்நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான், கரவாதார்பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன், இடம்போலும்தேசம் உறப் புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

பூமக னும்மவ னைப்பயந்த புயலார் நிறத்தானும்ஆமள வுந்திரிந் தேத்திக்காண்டல் அறிதற் கரியானூர்பாமரு வுங்குணத் தோர்கள்ஈண்டிப் பலவும் பணிசெய்யுந்தேமரு வுந்திகழ் சோலைசூழ்ந்த திருநாரை யூர்தானே.
சொற்பிரிப்பு
பூமகனும்(ம்), அவனைப் பயந்த புயல் ஆர் நிறத்தானும்,ஆம் அளவும் திரிந்து ஏத்திக் காண்டல் அறிதற்கு அரியான்ஊர்பா மருவும் குணத்தோர்கள் ஈண்டிப் பலவும் பணி செய்யும்,தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த, திரு நாரையூர் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

வெற்றரை யாகிய வேடங்காட்டித் திரிவார் துவராடைஉற்றரை யோர்கள் உரைக்குஞ்சொல்லை உணரா தெழுமின்கள்குற்றமி லாததோர் கொள்கையெம்மான் குழகன் தொழிலாரப்பெற்றர வாட்டி வரும்பெருமான் திருநாரை யூர்சேர்வே.
சொற்பிரிப்பு
வெற்று அரை ஆகிய வேடம் காட்டித் திரிவார், துவர் ஆடைஉற்ற (அ)ரையோர்கள், உரைக்கும் சொல்லை உணராது,எழுமின்கள்குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான், குழகன், தொழில் ஆரப்-பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான், திரு நாரையூர்சேரவே!
உரை

உரை எழுதப்படவில்லை

11

பாடிய லுந்திரை சூழ்புகலித் திருஞான சம்பந்தன்சேடிய லும்புக ழோங்குசெம்மைத் திருநாரை யூரான்மேற்பாடிய தண்டமிழ் மாலைபத்தும் பரவித் திரிந்தாகவாடிய சிந்தையி னார்க்குநீங்கும் அவலக் கடல்தானே.
சொற்பிரிப்பு
பாடு இயலும் திரை சூழ் புகலித் திருஞானசம்பந்தன்,சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மைத் திரு நாரையூரான் மேல்,பாடிய தண் தமிழ்மாலை பத்தும் பரவித் திரிந்து, ஆகஆடிய சிந்தையினார்க்கு நீங்கும், அவலக்கடல் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்