திருமுறை 3 · 3.106 · 11

திருச்சிற்றம்பலம்

திருவலஞ்சுழி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
வலஞ்சுழி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பள்ளம தாய படர்சடைமேற் பயிலுந் திரைக்கங்கைவெள்ளம தார விரும்பிநின்ற விகிர்தன் விடையேறும்வள்ளல் வலஞ்சுழி வாணனென்று மருவி நினைந்தேத்திஉள்ளம் உருக உணருமின்கள் உறுநோ யடையாவே.
சொற்பிரிப்பு
பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரைக் கங்கைவெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன், விடை ஏறும்வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி,உள்ளம் உருக, உணருமின்கள்! உறு நோய் அடையாவே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

காரணி வெள்ளை மதியஞ்சூடிக் கமழ்புன் சடைதன்மேற்தாரணி கொன்றையுந் தண்ணெருக்குந் தழையந் நுழைவித்துவாரணி கொங்கை நல்லாள்தனோடும் வலஞ்சுழி மேவியவர்ஊரணி பெய்பலி கொண்டுகந்த உவகை அறியோமே.
சொற்பிரிப்பு
கார் அணி வெள்ளை மதியம் சூடி, கமழ் புன்சடை தன்மேல்தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து,வார் அணி கொங்கை நல்லாள் தனோடும் வலஞ்சுழி மேவியவர்ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே!
உரை

உரை எழுதப்படவில்லை

3

பொன்னிய லுந்திரு மேனிதன்மேற் புரிநூல் பொலிவித்துமின்னிய லுஞ்சடை தாழவேழ உரிபோர்த் தரவாடமன்னிய மாமறை யோர்கள்போற்றும் வலஞ்சுழி வாணர்தம்மேல்உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க் குயர்வாம் பிணிபோமே.
சொற்பிரிப்பு
பொன் இயலும் திருமேனி தன்மேல் புரிநூல் பொலிவித்துமின் இயலும் சடை தாழ, வேழ உரி போர்த்து, அரவு ஆட,மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழி வாணர் தம்மேல்உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம்; பிணி போமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

விடையொரு பாலொரு பால்விரும்பு மெல்லியல் புல்கியதோர்சடையொரு பாலொரு பாலிடங்கொள் தாழ்குழல் போற்றிசைப்பநடையொரு பாலொரு பால்சிலம்பு நாளும் வலஞ்சுழிசேர்அடையொரு பாலடை யாதசெய்யுஞ் செய்கை அறியோமே.
சொற்பிரிப்பு
விடை, ஒரு பால்; ஒரு பால் விரும்பு மெல்லியல்; புல்கியது ஓர்சடை, ஒரு பால்; ஒருபால் இடம் கொள் தாழ்குழல் போற்று இசைப்ப,நடை, ஒரு பால்; ஒருபால் சிலம்பு; நாளும் வலஞ்சுழி சேர்அடை, ஒரு பால்; அடையாத செய்யும் செய்கைஅறியோமே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

கையம ரும்மழு நாகம்வீணை கலைமான் மறியேந்திமெய்யம ரும்பொடிப் பூசிவீசுங் குழையார் தருதோடும்பையம ரும்மர வாடஆடும் படர்சடை யார்க்கிடமாம்மையம ரும்பொழில் சூழும்வேலி வலஞ்சுழி மாநகரே.
சொற்பிரிப்பு
கை அமரும் மழு, நாகம், வீணை, கலைமான் மறி, ஏந்தி;மெய் அமரும் பொடிப் பூசி; வீசும் குழை ஆர்தரு தோடும்பை அமரும்(ம்) அரவு ஆட, ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம்மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

தண்டொடு சூலந் தழையவேந்தித் தைய லொருபாகங்கண்டிடு பெய்பலி பேணிநாணார் கரியின் உரிதோலர்வண்டிடு மொய்பொழில் சூழ்ந்தமாட வலஞ்சுழி மன்னியவர்தொண்டொடு கூடித் துதைந்துநின்ற தொடர்பைத் தொடர்வோமே.
சொற்பிரிப்பு
தண்டொடு சூலம் தழைய ஏந்தி, தையல் ஒருபாகம்கண்டு, இடு பெய் பலி பேணி நாணார், கரியின் உரி—தோலர்,வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர்தொண்டொடு கூடித் துதைந்து நின்ற தொடர்பைத் தொடர்வோமே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

கல்லிய லும்மலை யங்கைநீங்க வளைத்து வளையாதார்சொல்லிய லும்மதில் மூன்றும்செற்ற சுடரான் இடர்நீங்கமல்லிய லுந்திரள் தோளெம்மாதி வலஞ்சுழி மாநகரேபுல்கிய வேந்தனைப் புல்கிஏத்தி யிருப்பவர் புண்ணியரே.
சொற்பிரிப்பு
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து, வளையாதார்சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான், இடர் நீங்கமல் இயலும் திரள்தோள் எம் ஆதி, வலஞ்சுழி மா நகரேபுல்கிய வேந்தனைப் புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

வெஞ்சின வாளரக் கன்வரையை விறலா லெடுத்தான்றோள்அஞ்சுமொ ராறிறு நான்குமொன்றும் அடர்த்தார் அழகாயநஞ்சிருள் கண்டத்து நாதரென்றும் நணுகும் இடம்போலும்மஞ்சுல வும்பொழில் வண்டுகெண்டும் வலஞ்சுழி மாநகரே.
சொற்பிரிப்பு
வெஞ்சின வாள் அரக்கன், வரையை விறலால் எடுத்தான், தோள்அஞ்சும் ஒரு ஆறு இரு நான்கும் ஒன்றும் அடர்த்தார்; அழகு ஆயநஞ்சு இருள் கண்டத்து நாதர்; என்றும் நணுகும் இடம்போலும்மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

ஏடியல் நான்மு கன்சீர்நெடுமா லெனநின் றவர்காணார்கூடிய கூரெரி யாய்நிமிர்ந்த குழகர் உலகேத்தவாடிய வெண்டலை கையிலேந்தி வலஞ்சுழி மேயஎம்மான்பாடிய நான்மறை யாளர்செய்யுஞ் சரிதை பலபலவே.
சொற்பிரிப்பு
ஏடு இயல் நான்முகன், சீர் நெடுமால், என நின்றவர் காணார்கூடிய கூர் எரி ஆய் நிமிர்ந்த குழகர்; உலகு ஏத்தவாடிய வெண்தலை கையில் ஏந்தி; வலஞ்சுழி மேய எம்மான்-பாடிய நால்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே!
உரை

உரை எழுதப்படவில்லை

10

குண்டரும் புத்தருங் கூறையின்றிக் குழுவார் உரைநீத்துத்தொண்டருந் தன்றொழில் பேணநின்ற கழலான் அழலாடிவண்டம ரும்பொழில் மல்குபொன்னி வலஞ்சுழி வாணன்எம்மான்பண்டொரு வேள்வி முனிந்துசெற்ற பரிசே பகர்வோமே.
சொற்பிரிப்பு
குண்டரும் புத்தரும், கூறை இன்றிக் குழுவார், உரை நீத்துதொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான்; அழல்ஆடிவண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன்; எம்மான்பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

வாழியெம் மானெனக் கெந்தைமேய வலஞ்சுழி மாநகர்மேல்காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன கருத்தின் தமிழ்மாலைஆழியிவ் வையகத் தேத்தவல்லார் அவர்க்குந் தமருக்கும்ஊழி யொருபெரும் இன்பமோர்க்கும் உருவும் உயர்வாமே.
சொற்பிரிப்பு
வாழி எம்மான், எனக்கு எந்தை, மேய வலஞ்சுழி மா நகர்மேல்,காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ்மாலை,ஆழி இவ் வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும்ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும்; உருவும் உயர்வு ஆமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்