திருமுறை 3 · 3.105 · 11

திருச்சிற்றம்பலம்

திருக்கலிக்காமூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
கலிக்காமூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மடல்வரை யின்மது விம்முசோலை வயல்சூழ்ந் தழகாருங்கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ் சொரியுங் கலிக்காமூர்உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய வொருவன் கழலேத்தஇடர்தொட ராவினை யானசிந்தும் இறைவன் னருளாமே.
சொற்பிரிப்பு
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து, அழகு ஆரும்,கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர்,உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த,இடர் தொடரா; வினை ஆன சிந்தும்; இறைவன்(ன்) அருள் ஆமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

மைவரை போற்றிரை யோடுகூடிப் புடையே மலிந்தோதங்கைவரை யால்வளர் சங்கமெங்கு மிகுக்குங் கலிக்காமூர்மெய்வரை யான்மகள் பாகன்தன்னை விரும்ப உடல்வாழும்ஐவரை யாசறுத் தாளுமென்பர் அதுவுஞ் சரதமே.
சொற்பிரிப்பு
மைவரை போல்—திரையோடு கூடிப் புடையே மலிந்து ஓதம்கை வரையால் வளர் சங்கம் எங்கும் மிகுக்கும் கலிக்காமூர்,மெய் வரையான் மகள் பாகன் தன்னை விரும்ப, உடல் வாழும்ஐவரை ஆசு அறுத்து ஆளும் என்பர்; அதுவும் சரதமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

தூவிய நீர்மல ரேந்திவையத் தவர்கள் தொழுதேத்தக்காவியின் நேர்விழி மாதரென்றுங் கவினார் கலிக்காமூர்மேவிய ஈசனை யெம்பிரானை விரும்பி வழிபட்டால்ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே.
சொற்பிரிப்பு
தூவிய நீர் மலர் ஏந்தி வையத் தவர்கள் தொழுது ஏத்த,காவியின் நேர் விழி மாதர் என்றும் கவின் ஆர் கலிக்காமூர்மேவிய ஈசனை, எம்பிரானை, விரும்பி வழிபட்டால்,ஆவியுள் நீங்கலன்—ஆதிமூர்த்தி, அமரர் பெருமானே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

குன்றுகள் போல்திரை உந்தியந்தண் மணியார் தரமேதிகன்றுடன் புல்கியா யம்மனைசூழ் கவினார் கலிக்காமூர்என்றுணர் ஊழியும் வாழுமெந்தை பெருமான் அடியேத்திநின்றுணர் வாரை நினையகில்லார் நீசர் நமன்தமரே.
சொற்பிரிப்பு
குன்றுகள் போல்—திரை உந்தி, அம் தண் மணி ஆர்தர, மேதிகன்று உடன் புல்கி, ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர்,என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்திநின்று உணர்வாரை நினையகில்லார், நீசர் நமன் தமரே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

வானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடலோதங்கானிடை நீழலிற் கண்டல்வாழுங் கழிசூழ் கலிக்காமூர்ஆனிட யைந்துகந் தாடினானை அமரர் தொழுதேத்தநானடை வாம்வணம் அன்புதந்த நலமே நினைவோமே.
சொற்பிரிப்பு
வான் இடை வாள்மதி மாடம் தீண்ட, மருங்கே கடல் ஓதம்கான் இடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர்,ஆன் இடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த,நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

துறைவளர் கேதகை மீதுவாசம் சூழ்வான் மலிதென்றல்கறைவள ருங்கட லோதமென்றுங் கலிக்கும் கலிக்காமூர்மறைவள ரும்பொரு ளாயினானை மனத்தால் நினைந்தேத்தநிறைவள ரும்புக ழெய்தும்வாதை நினையா வினைபோமே.
சொற்பிரிப்பு
துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல்கறை வளரும் கடல் ஓதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர்,மறை வளரும் பொருள் ஆயினானை மனத்தால் நினைந்து ஏத்த,நிறை வளரும் புகழ் எய்தும்; வாதை நினையா; வினை போமே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

கோலநன் மேனியின் மாதர்மைந்தர் கொணர்மங் கிலியத்திற்காலமும் பொய்க்கினுந் தாம்வழுவா தியற்றுங் கலிக்காமூர்ஞாலமுந் தீவளி ஞாயிறாய நம்பன் கழலேத்திஓலமி டாதவர் ஊழியென்று உணர்வைத் துறந்தாரே.
சொற்பிரிப்பு
கோல நல் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில்,காலமும் பொய்க்கினும், தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர்,ஞாலமும், தீ, வளி, ஞாயிறு, ஆய நம்பன் கழல் ஏத்தி,ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வைத் துறந்தாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

ஊரர வந்தலை நீள்முடியான் ஒலிநீர் உலகாண்டுகாரர வக்கடல் சூழவாழும் பதியாங் கலிக்காமூர்தேரர வல்குல்அம் பேதையஞ்சத் திருந்து வரைபேர்த்தான்ஆரர வம்பட வைத்தபாதம் உடையான் இடமாமே.
சொற்பிரிப்பு
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டுகார் அரவக்கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர்,தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்சத் திருந்து வரை பேர்த்தான்ஆர் அரவம் பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

அருவரை யேந்திய மாலும்மற்றை அலர்மேல் உறைவானும்இருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான் கலிக்காமூர்ஒருவரை யான்மகள் பாகன்தன்னை உணர்வால் தொழுதேத்தத்திருமரு வுஞ்சிதை வில்லைச்செம்மைத் தேசுண் டவர்பாலே.
சொற்பிரிப்பு
அரு வரை ஏந்திய மாலும், மற்றை அலர்மேல் உறைவானும்,இருவரும் அஞ்ச, எரி உரு ஆய் எழுந்தான் கலிக்காமூர்,ஒரு வரையான் மகள் பாகன் தன்னை உணர்வால்—தொழுது ஏத்த,திருமருவும்; சிதைவுஇல்லை; செம்மைத் தேசுஉண்டு,அவர்பாலே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

மாசு பிறக்கிய மேனியாரும் மருவுந் துவராடைமீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர்தோற்றங்காசினி நீர்த்திரள் மண்டியெங்கும் வளமார் கலிக்காமூர்ஈசனை யெந்தைபி ரானையேத்தி நினைவார் வினைபோமே.
சொற்பிரிப்பு
மாசு பிறக்கிய மேனியாரும், மருவும் துவர் ஆடைமீசு பிறக்கிய மெய்யினாரும், அறியார், அவர் தோற்றம்;காசினி நீர்த்திரள் மண்டி, எங்கும் வளம் ஆர் கலிக்காமூர்ஈசனை எந்தைபிரானை ஏத்தி, நினைவார் வினை போமே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

ஆழியுள் நஞ்சமு தாரவுண்டன் றமரர்க் கமுதுண்டுஊழிதொ றும்முள ராவளித்தான் உலகத் துயர்கின்றகாழியுள் ஞானசம் பந்தன்சொன்ன தமிழாற் கலிக்காமூர்வாழி யெம்மானை வணங்கியேத்த மருவா பிணிதானே.
சொற்பிரிப்பு
ஆழியுள் நஞ்சுஅமுது ஆரஉண்டு, அன்று அமரர்க்கு அமுதுஉண்ணஊழிதொறும்(ம்) உளரா அளித்தான், உலகத்து உயர்கின்றகாழியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால், கலிக்காமூர்வாழி எம்மானை வணங்கி ஏத்த, மருவா, பிணிதானே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்