திருமுறை 3 · 3.104 · 11

திருச்சிற்றம்பலம்

திருப்பருதிநியமம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
பரிதிநியமம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

விண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழப்பெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசிப் பேணார் பலிதேர்ந்துகண்கொண்ட சாயலோ டேர்கவர்ந்த கள்வர்க் கிடம்போலும்பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதிந் நியமமே.
சொற்பிரிப்பு
விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன்சடை தாழ,பெண் கொண்ட மார்பில் வெண்நீறு பூசி, பேண் ஆர் பலி தேர்ந்து,கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம்போலும்பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதி(ந்) நியமமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

அரவொலி வில்லொலி அம்பினொலி அடங்கார் புரமூன்றும்நிரவவல் லார்நிமிர் புன்சடைமேல் நிரம்பா மதிசூடிஇரவில் புகுந்தென் னெழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்பரவவல் லார்வினை பாழ்படுக்கும் பரிதிந் நியமமே.
சொற்பிரிப்பு
அரவு ஒலி, வில் ஒலி, அம்பின் ஒலி, அடங்கார் புரம் மூன்றும்நிரவ வல்லார், நிமிர் புன்சடைமேல் நிரம்பா மதி சூடி,இரவு இல் புகுந்து, என் எழில் கவர்ந்த இறைவர்க்குஇடம்போலும்பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதி(ந்) நியமமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

வாண்முக வார்குழல் வாள்நெடுங்கண் வளைத்தோள் மாதஞ்சநீண்முக மாகிய பைங்களிற்றின் உரிமேல் நிகழ்வித்துநாண்முகங் காட்டி நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்பாண்முக வண்டினம் பாடியாடும் பரிதிந் நியமமே.
சொற்பிரிப்பு
வாள்முக, வார்குழல், வாள்நெடுங்கண், வளைத் தோள், மாது அஞ்ச,நீள் முகம் ஆகிய பைங்களிற்றின் உரி மேல் நிகழ்வித்து,நாண் முகம் காட்டி, நலம் கவர்ந்த நாதர்க்கு இடம்போலும்பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதி(ந்) நியமமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி விரிபுன் சடைதாழத்துஞ்சிருள் மாலையும் நண்பகலுந் துணையார் பலிதேர்ந்துஅஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்பஞ்சுரம் பாடிவண் டியாழ்முரலும் பரிதிந் நியமமே.
சொற்பிரிப்பு
வெஞ்சுரம் சேர் விளையாடல் பேணி, விரிபுன்சடை தாழ,துஞ்சு இருள் மாலையும் நண்பகலும், துணையார், பலி தேர்ந்து,அம் சுரும்பு ஆர் குழல் சோர, உள்ளம் கவர்ந்தார்க்கு இடம்போலும்பஞ்சுரம் பாடி வண்டு யாழ்முரலும் பரிதி(ந்) நியமமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண் மதிசூடித்தார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்து தலையார் பலிதேர்வார்ஏர்புல்கு சாயல் எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்பார்புல்கு தொல்புக ழால்விளங்கும் பரிதிந் நியமமே.
சொற்பிரிப்பு
நீர் புல்கு புன்சடை நின்று இலங்க, நெடு வெண்மதி சூடி,தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து, தலை ஆர் பலி தேர்வார்ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்பார் புல்கு தொல்புகழால் விளங்கும் பரிதி(ந்) நியமமே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

வெங்கடுங் காட்டகத் தாடல்பேணி விரிபுன் சடைதாழத்திங்கள் திருமுடி மேல்விளங்கத் திசையார் பலிதேர்வார்சங்கொடு சாயல் எழில்கவர்ந்த சைவர்க் கிடம்போலும்பைங்கொடி முல்லை படர்புறவிற் பரிதிந் நியமமே.
சொற்பிரிப்பு
வெங்கடுங் காட்டு அகத்து ஆடல் பேணி, விரிபுன்சடை தாழ,திங்கள் திருமுடி மேல் விளங்க, திசை ஆர் பலி தேர்வார்சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க்கு இடம்போலும்பைங்கொடி முல்லை படர் புறவின் பரிதி(ந்)நியமமே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப் பெரிய மழுவேந்திமறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்பறையொலி சங்கொலி யால்விளங்கும் பரிதிந் நியமமே.
சொற்பிரிப்பு
பிறை வளர் செஞ்சடை பின் தயங்க, பெரிய மழு ஏந்தி,மறை ஒலி பாடி, வெண் நீறு பூசி, மனைகள் பலி தேர்வார்இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்பறை ஒலி சங்கு ஒலியால் விளங்கும் பரிதி(ந்) நியமமே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

ஆசடை வானவர் தானவரோ டடியார் அமர்ந்தேத்தமாசடை யாதவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்காசடை மேகலை சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்பாசடைத் தாமரை வைகுபொய்கைப் பரிதிந் நியமமே.
சொற்பிரிப்பு
ஆசு அடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்து ஏத்த,மாசு அடையாத வெண் நீறு பூசி, மனைகள் பலி தேர்வார்காசு அடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம்போலும்பாசடைத் தாமரை வைகு பொய்கைப் பரிதி(ந்) நியமமே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

நாடினர் காண்கிலர் நான்முகனுந் திருமால் நயந்தேத்தக்கூடலர் ஆடலர் ஆகிநாளுங் குழகர் பலிதேர்வார்ஏடலர் சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்பாடலர் ஆடல ராய்வணங்கும் பரிதிந் நியமமே.
சொற்பிரிப்பு
நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்த,கூடலர் ஆடலர் ஆகி, நாளும் குழகர் பலி தேர்வார்ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதி(ந்) நியமமே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

கல்வளர் ஆடையர் கையிலுண்ணுங் கழுக்கள் இழுக்கானசொல்வள மாக நினைக்கவேண்டா சுடுநீ றதுவாடிநல்வளை சோர நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப் பரிதிந் நியமமே.
சொற்பிரிப்பு
கல் வளர் ஆடையர், கையில் உண்ணும் கழுக்கள், இழுக்கு ஆனசொல் வளம் ஆக நினைக்க வேண்டா; சுடு நீறு அது ஆடி,நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம்போலும்பல் வளர் முல்லை அம் கொல்லை வேலிப் பரிதி(ந்) நியமமே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

பையர வம்விரி காந்தள்விம்மு பரிதிந் நியமத்துத்தையலொர் பாகம் அமர்ந்தவனைத் தமிழ்ஞான சம்பந்தன்பொய்யிலி மாலை புனைந்தபத்தும் பரவிப் புகழ்ந்தேத்தஐயுற வில்லை பிறப்பறுத்தல் அவலம் அடையாவே.
சொற்பிரிப்பு
பை அரவம் விரி காந்தள் விம்மு பரிதி(ந்) நியமத்துத்தையல் ஒர்பாகம் அமர்ந்தவனைத் தமிழ் ஞானசம்பந்தன்பொய் இலி மாலை புனைந்த பத்தும் பரவிப் புகழ்ந்து ஏத்த,ஐயுறவு இல்லை, பிறப்பு அறுத்தல்; அவலம் அடையாவே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்