திருமுறை 3 · 3.103 · 11

திருச்சிற்றம்பலம்

திருவலம்புரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
வலம்புரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கொடியுடை மும்மதி லூடுருவக் குனிவெஞ் சிலைதாங்கிஇடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்தேத்தத்துடியிடை யாளையொர் பாகமாகத் துதைந்தா ரிடம்போலும்வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே.
சொற்பிரிப்பு
கொடி உடை மும்மதில் ஊடு உருவக் குனி வெஞ்சிலை தாங்கிஇடிபட எய்த அமரர்பிரான், அடியார் இசைந்து ஏத்தத்துடி இடையாளை ஒர்பாகம் ஆகத் துதைந்தார், இடம்போலும்வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன்நகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

கோத்தகல் லாடையுங் கோவணமுங் கொடுகொட்டி கொண்டொருகைத்தேய்த்தன் றனங்கனைத் தேசழித்துத் திசையார் தொழுதேத்தக்காய்த்தகல் லாலதன் கீழிருந்த கடவுள் ளிடம்போலும்வாய்த்தமுத் தீத்தொழில் நான்மறையோர் வலம்புர நன்னகரே.
சொற்பிரிப்பு
கோத்த கல்லாடையும்,கோவணமும், கொடுகொட்டி கொண்டு ஒருகைதேய்த்து அன்று அநங்கனைத் தேசு அழித்து, திசையார் தொழுது ஏத்த,காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும்வாய்த்த முத்தீத் தொழில் நால் மறையோர் வலம்புர நன்நகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

நொய்யதொர் மான்மறி கைவிரலின் நுனைமேல் நிலையாக்கிமெய்யெரி மேனிவெண் ணீறுபூசி விரிபுன் சடைதாழமையிருஞ் சோலை மணங்கமழ இருந்தா ரிடம்போலும்வைகலும் மாமுழ வம்மதிரும் வலம்புர நன்னகரே.
சொற்பிரிப்பு
நொய்யது ஒர் மான்மறி கைவிரலின் நுனை மேல் நிலை ஆக்கி,மெய் எரிமேனி வெண் நீறு பூசி, விரிபுன் சடை தாழ,மை இருஞ் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும்வைகலும் மா முழவம்(ம்) அதிரும் வலம்புர நன்நகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

ஊனம ராக்கை யுடம்புதன்னை யுணரிற் பொருளன்றுதேனமர் கொன்றையி னானடிக்கே சிறுகாலை யேத்துமினோஆனமர் ஐந்துங்கொண் டாட்டுகந்த அடிகள் இடம்போலும்வானவர் நாடொறும் வந்திறைஞ்சும் வலம்புர நன்னகரே.
சொற்பிரிப்பு
ஊன் அமர் ஆக்கை உடம்பு தன்னை உணரின் பொருள் அன்று;தேன் அமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்துமினோ!ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள் இடம்போலும்வானவர் நாள்தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன்நகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

செற்றெறி யுந்திரை யார்கலுழிச் செழுநீர்கிளர் செஞ்சடைமேல்அற்றறி யாதன லாடுநட்ட மணியார் தடங்கண்ணிபெற்றறி வார்எரு தேறவல்ல பெருமான் இடம்போலும்வற்றறி யாப்புனல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே.
சொற்பிரிப்பு
செற்று எறியும் திரை ஆர் கலுழிச் செழுநீர் கிளர் செஞ்சடை மேல்அற்று அறியாது, அனல் ஆடு நட்டம், அணி ஆர் தடங்கண்ணிபெற்று அறிவார், எருது ஏற வல்ல பெருமான், இடம்போலும்வற்று அறியாப் புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன்நகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

உண்ணவண் ணத்தொளி நஞ்சமுண்டு வுமையோ டுடனாகிச்சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச் சுடர்ச்சோதி நின்றிலங்கப்பண்ணவண் ணத்தன பாணிசெய்யப் பயின்றா ரிடம்போலும்வண்ணவண் ணப்பறை பாணியறா வலம்புர நன்னகரே.
சொற்பிரிப்பு
உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு, உமையோடு உடன் ஆகி,சுண்ண வண்ணப்பொடி மேனி பூசிச் சுடர்ச் சோதி நின்று இலங்க,பண்ண வண்ணத்தன பாணி செய்ய, பயின்றார் இடம்போலும்வண்ண வண்ணப் பறை பாணி அறா வலம்புர நன்நகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

புரிதரு புன்சடை பொன்தயங்கப் புரிநூல் புரண்டிலங்கவிரைதரு வேழத்தின் ஈருரிதோல் மேல்மூடி வேய்புரைதோள்அரைதரு பூந்துகில் ஆரணங்கை யமர்ந்தா ரிடம்போலும்வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறா வலம்புர நன்னகரே.
சொற்பிரிப்பு
புரிதரு புன்சடை பொன்தயங்க, புரிநூல் புரண்டு இலங்க,விரைதரு வேழத்தின் ஈர் உரி—தோல் மேல் மூடி, வேய் புரை தோள்அரை தரு பூந்துகில் ஆர் அணங்கை அமர்ந்தார் இடம்போலும்வரை தரு தொல்புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன்நகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

தண்டணை தோளிரு பத்தினொடுந் தலைபத் துடையானைஒண்டணை மாதுமை தான்நடுங்க ஒருகால் விரலூன்றிமிண்டது தீர்த்தருள் செய்யவல்ல விகிர்தர்க் கிடம்போலும்வண்டணை தன்னொடு வைகுபொழில் வலம்புர நன்னகரே.
சொற்பிரிப்பு
தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலைபத்து உடையானை,ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க, ஒரு கால்விரல் ஊன்றி,மிண்டு அது தீர்த்து அருள் செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம்போலும்வண்டு இணை தன்னொடு வைகு பொழில் வலம்புர நன்நகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

தாருறு தாமரை மேலயனுந் தரணி யளந்தானும்தேர்வறி யாவகை யால்இகலித் திகைத்துத் திரிந்தேத்தப்பேர்வறி யாவகை யால்நிமிர்ந்த பெருமான் இடம்போலும்வாருறு சோலை மணங்கமழும் வலம்புர நன்னகரே.
சொற்பிரிப்பு
தார் உறு தாமரைமேல் அயனும், தரணி அளந்தானும்,தேர்வு அறியா வகையால் இகலித் திகைத்துத் திரிந்து ஏத்த,பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம்போலும்வார் உறு சோலை மணம் கமழும் வலம்புர நன்நகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

காவிய நல்துவ ராடையினார் கடுநோன்பு மேல்கொள்ளும்பாவிகள் சொல்லைப் பயின்றறியாப் பழந்தொண்டர் உள்ளுருகஆவியுள் நின்றருள் செய்யவல்ல அழகர் இடம்போலும்வாவியின் நீர்வயல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே.
சொற்பிரிப்பு
காவிய நல்—துவர் ஆடையினார், கடு நோன்பு மேற்கொள்ளும்பாவிகள், சொல்லைப் பயின்று அறியாப் பழந் தொண்டர் உள் உருக,ஆவியுள் நின்று அருள் செய்ய வல்ல அழகர் இடம்போலும்வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன்நகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

நல்லியல் நான்மறை யோர்புகலித் தமிழ்ஞான சம்பந்தன்வல்லியந் தோலுடை யாடையினான் வலம்புர நன்னகரைச்சொல்லிய பாடல்கள் பத்துஞ்சொல்ல வல்லவர் தொல்வினைபோய்ச்செல்வன சேவடி சென்றணுகிச் சிவலோகஞ் சேர்வாரே.
சொற்பிரிப்பு
நல் இயல் நால்மறையோர் புகலித் தமிழ் ஞானசம்பந்தன்,வல்லியந் தோல் உடை ஆடையினான் வலம்புர நன்நகரைச்சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர், தொல்வினைபோய்,செல்வன சேவடி சென்று அணுகி, சிவலோகம் சேர்வாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்