திருமுறை 3 · 3.102 · 11

திருச்சிற்றம்பலம்

திருநாரையூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
நாரையூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

காம்பினை வென்றமென் தோளிபாகங் கலந்தான் நலந்தாங்குதேம்புனல் சூழ்திகழ் மாமடுவில் திருநாரை யூர்மேயபூம்புனல் சேர்புரி புன்சடையான் புலியின் னுரிதோல்மேல்பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே.
சொற்பிரிப்பு
காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான்—நலம் தாங்குதேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய,பூம் புனல் சேர், புரி புன்சடையான்; புலியின்(ன்)உரி—தோல்மேல்பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

தீவினை யாயின தீர்க்கநின்றான் திருநாரை யூர்மேயான்பூவினை மேவு சடைமுடியான் புடைசூழப் பலபூதம்ஆவினில் ஐந்துங்கொண் டாட்டு கந்தான் அடங்கார் மதில்மூன்றும்ஏவினை யெய்தழித் தான்கழலே பரவா எழுவோமே.
சொற்பிரிப்பு
தீவினை ஆயின தீர்க்க நின்றான்— திரு நாரையூர் மேயான்;பூவினை மேவு சடைமுடியான், புடை சூழப் பலபூதம்,ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான், அடங்கார் மதில் மூன்றும்ஏவினை எய்து அழித்தான், கழலே பரவா எழுவோமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

மாயவன் சேயவன் வெள்ளியவன் விடஞ்சேரும் மைமிடற்றன்ஆயவ னாகியொ ரந்தரமும் மவனென்று வரையாகம்தீயவன் நீரவன் பூமியவன் திருநாரை யூர்தன்னில்மேயவ னைத்தொழு வாரவர்மேல் வினையா யினவீடுமே.
சொற்பிரிப்பு
மாயவன், சேயவன், வெள்ளியவன், விடம் சேரும் மைமிடற்றன்ஆயவன், ஆகி ஒர் அந்தரமும்(ம்) அவன் என்று, வரை ஆகம்தீ அவன், நீர் அவன், பூமி அவன், திரு நாரையூர் தன்னில்மேயவனைத் தொழுவார் அவர் மேல் வினை ஆயினவீடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

துஞ்சிரு ளாடுவர் தூமுறுவல் துளங்கும் உடம்பினராய்அஞ்சுட ரார்எரி யாடுவர் ஆரழ லார்விழிக்கண்நஞ்சுமிழ் நாகம் அரைக்கசைப்பர் நலனோங்கு நாரையூர்எஞ்சிவ னார்க்கடி மைப்படுவார்க் கினியில்லை யேதமே.
சொற்பிரிப்பு
துஞ்சு இருள் ஆடுவர்; தூ முறுவல் துளங்கும் உடம்பினராய்,அம் சுடர் ஆர் எரி ஆடுவர்; ஆர் அழல் ஆர் விழிக்கண்,நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர்; நலன் ஓங்குநாரையூர்எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை, ஏதமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

பொங்கிளங் கொன்றையி னார்கடலில் விடமுண் டிமையோர்கள்தங்களை ஆரிடர் தீரநின்ற தலைவர் சடைமேலோர்திங்களை வைத்தனல் ஆடலினார் திருநாரை யூர்மேயவெங்கனல் வெண்ணீ றணியவல்லார் அவரே விழுமியரே.
சொற்பிரிப்பு
பொங்கு இளங் கொன்றையினார், கடலில் விடம் உண்டு இமையோர்கள்தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர், சடைமேல் ஓர்திங்களை வைத்து அனல் ஆடலினார், திரு நாரையூர் மேயவெங்கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

பாருறு வாய்மையி னார்பரவும் பரமேட்டி பைங்கொன்றைத்தாருறு மார்புடை யான்மலையின் தலைவன் மலைமகளைச்சீருறு மாமறு கிற்சிறைவண் டறையுந் திருநாரைஊருறை யெம்மிறை வர்க்கிவையொன் றோடொன் றொவ்வாவே.
சொற்பிரிப்பு
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி, பைங்கொன்றைத்-தார் உறு மார்பு உடையான், மலையின் தலைவன்,மலைமகளைச்சீர் உறும் மா மறுகின் சிறைவண்டு அறையும் திரு நாரை-யூர் உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

கள்ளி யிடுதலை யேந்துகையர் கரிகாடர் கண்ணுதலர்வெள்ளிய கோவண ஆடைதன்மேன் மிளிரா டரவார்த்துநள்ளிருள் நட்டம தாடுவர்நல் நலன்ஓங்கு நாரையூர்உள்ளிய போழ்திலெம் மேல்வரு வல்வினை யாயின வோடுமே.
சொற்பிரிப்பு
கள்ளி இடுதலை ஏந்து கையர், கரிகாடர், கண் நுதலார்வெள்ளிய கோவண ஆடை தன்மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து,நள் இருள் நட்டம் அது ஆடுவர், நன் நலன் ஓங்கு நாரையூர்உள்ளிய போழ்தில், எம்மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

நாமமெ னப்பல வும்முடையான் நலன்ஓங்கு நாரையூர்தாமொம் மெனப்பறை யாழ்குழறா ளார்க ழல்பயிலஈமவி ளக்கெரி சூழ்சுடலை யியம்பும் மிடுகாட்டிற்சாமம் உரைக்கநின் றாடுவானுந் தழலாய சங்கரனே.
சொற்பிரிப்பு
நாமம் எனைப்பலவும்(ம்) உடையான், நலன் ஓங்கு நாரையூர்தாம் ஒம்மெனப் பறை, யாழ், குழல், தாள் ஆர் கழல், பயில,ஈம விளக்கு எரி சூழ், சுடலை இயம்பும்(ம்) இடுகாட்டில்,சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

ஊனுடை வெண்டலை கொண்டுழல்வான் ஒளிர்புன்ச டைமேலோர்வானிடை வெண்மதி வைத்துகந்தான் வரிவண் டியாழ்முரலத்தேனுடை மாமல ரன்னம்வைகுந் திருநாரை யூர்மேயஆனிடை யைந்துகந் தான் அடியே பரவா அடைவோமே.
சொற்பிரிப்பு
ஊன் உடை வெண்தலை கொண்டு உழல்வான், ஒளிர்புன்சடைமேல் ஓர்வான் இடை வெண்மதி வைத்து உகந்தான், வரிவண்டு யாழ்முரலத்தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேயஆன் இடை ஐந்து உகந்தான், அடியே பரவா,அடைவோமே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

தூசு புனைதுவ ராடைமேவு தொழிலா ருடம்பினிலுள்மாசு புனைந்துடை நீத்தவர்கள் மயல்நீர்மை கேளாதேதேசுடை யீர்கள் தெளிந்தடைமின் திருநாரை யூர்தன்னில்பூசு பொடித்தலை வர்அடியார் அடியே பொருத்தமே.
சொற்பிரிப்பு
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார், உடம்பினில்உள்மாசு புனைந்து உடை நீத்தவர்கள், மயல் நீர்மை கேளாதே,தேசு உடையீர்கள்! தெளிந்து அடைமின், திரு நாரையூர்தன்னில்பூசு பொடித் தலைவர் அடியார் அடியே பொருத்தமே!
உரை

உரை எழுதப்படவில்லை

11

தண்மதி தாழ்பொழில் சூழ்புகலித் தமிழ்ஞான சம்பந்தன்ஒண்மதி சேர்சடை யான்உறையுந் திருநாரை யூர்தன்மேல்பண்மதி யாற்சொன்ன பாடல்பத்தும் பயின்றார் வினைபோகிமண்மதி யாதுபோய் வான்புகுவர் வானோர் எதிர்கொளவே.
சொற்பிரிப்பு
தண்மதி தாழ் பொழில் சூழ் புகலித் தமிழ் ஞானசம்பந்தன்,ஒண்மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர் தன்மேல்,பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார், வினை போகி,மண் மதியாது போய், வான் புகுவர், வானோர் எதிர்கொளவே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்