திருமுறை 3 · 3.101 · 11

திருச்சிற்றம்பலம்

திருஇராமேச்சுரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
இராமேச்சுரம்
நாடு
பாண்டியநாடு

1

திரிதரு மாமணி நாகமாடத் திளைத்தொரு தீயழல்வாய்நரிகதிக் கவெரி யேந்தியாடும் நலமே தெரிந்துணர்வார்எரிகதிர் முத்தம் இலங்குகானல் இராமேச் சுரமேயவிரிகதிர் வெண்பிறை மல்குசென்னி விமலர் செயுஞ்செயலே.
சொற்பிரிப்பு
திரிதரு மா மணி நாகம் ஆடத் திளைத்து, ஒரு தீ—அழல்வாய்,நரி கதிக்க, எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார்எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய,விரி கதிர் வெண்பிறை மல்கு சென்னி, விமலர்; செயும் செயலே!
உரை

உரை எழுதப்படவில்லை

2

பொறிகிளர் பாம்பரை யார்த்தயலே புரிவோ டுமைபாடத்தெறிகிள ரப்பெயர்ந் தெல்லியாடுந் திறமே தெரிந்துணர்வார்எறிகிளர் வெண்டிரை வந்துபேரும் இராமேச் சுரமேயமறிகிளர் மான்மழுப் புல்குகையெம் மணாளர் செயுஞ்செயலே.
சொற்பிரிப்பு
பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து, அயலே புரிவோடு உமை பாட,தெறி கிளரப் பெயர்ந்து, எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார்எறி கிளர் வெண்திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய,மறி கிளர் மான் மழுப் புல்கு கை, எம் மணாளர்; செயும்செயலே!
உரை

உரை எழுதப்படவில்லை

3

அலைவளர் தண்புனல் வார்சடைமேல் அடக்கி யொருபாகம்மலைவளர் காதலி பாடஆடி மயக்கா வருமாட்சிஇலைவளர் தாழை முகிழ்விரியும் இராமேச் சுரமேயார்தலைவளர் கோலநன் மாலைசூடுந் தலைவர் செயுஞ்செயலே.
சொற்பிரிப்பு
அலை வளர் தண் புனல் வார் சடைமேல் அடக்கி, ஒரு பாகம்மலை வளர் காதலி பாட, ஆடி மயக்கா வரு மாட்சிஇலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார்தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர், செயும் செயலே!
உரை

உரை எழுதப்படவில்லை

4

மாதன நேரிழை யேர்தடங்கண் மலையான் மகள்பாடத்தேதெரி அங்கையில் ஏந்தியாடுந் திறமே தெரிந்துணர்வார்ஏதமி லார்தொழு தேத்திவாழ்த்தும் இராமேச் சுரமேயார்போதுவெண் டிங்கள்பைங் கொன்றைசூடும் புனிதர் செயுஞ்செயலே.
சொற்பிரிப்பு
மா தன நேர் இழை ஏர் தடங்கண் மலையான் மகள் பாட,தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார்ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார்போது வெண்திங்கள் பைங்கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

சூலமோ டொண்மழு நின்றிலங்கச் சுடுகா டிடமாகக்கோலநன் மாதுடன் பாடஆடுங் குணமே குறித்துணர்வார்ஏலந றும்பொழில் வண்டுபாடும் இராமேச் சுரமேயநீலமார் கண்ட முடையவெங்கள் நிமலர் செயுஞ்செயலே.
சொற்பிரிப்பு
சூலமோடு ஒண்மழு நின்று இலங்க, சுடுகாடு இடம் ஆக,கோல நல் மாது உடன்பாட, ஆடும் குணமே குறித்துஉணர்வார்ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய,நீலம் ஆர் கண்டம் உடைய, எங்கள் நிமலர்; செயும் செயலே!
உரை

உரை எழுதப்படவில்லை

6

கணைபிணை வெஞ்சிலை கையிலேந்திக் காமனைக் காய்ந்தவர்தாம்இணைபிணை நோக்கிநல் லாளொடாடும் இயல்பின ராகிநல்லஇணைமலர் மேலன்னம் வைகுகானல் இராமேச் சுரமேயார்அணைபிணை புல்கு கரந்தைசூடும் அடிகள் செயுஞ்செயலே.
சொற்பிரிப்பு
கணை பிணை வெஞ்சிலை கையில் ஏந்தி; காமனைக் காய்ந்தவர் தாம்இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி, நல்லஇணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார்அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும்செயலே!
உரை

உரை எழுதப்படவில்லை

7

நீரினார் புன்சடை பின்புதாழ நெடுவெண் மதிசூடிஊரினார் துஞ்சிருள் பாடியாடும் உவகை தெரிந்துணர்வார்ஏரினார் பைம்பொழில் வண்டுபாடும் இராமேச் சுரமேயகாரினார் கொன்றைவெண் டிங்கள்சூடுங் கடவுள் செயுஞ்செயலே.
சொற்பிரிப்பு
நீரின் ஆர் புன்சடை பின்பு தாழ, நெடு வெண்மதி சூடி,ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்துஉணர்வார்ஏரின் ஆர் பைம்பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய,காரின் ஆர் கொன்றை வெண்திங்கள் சூடும், கடவுள்;செயும் செயலே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

பொன்றிகழ் சுண்ணவெண் ணீறுபூசிப் புலித்தோ லுடையாகமின்றிகழ் சோதியர் பாடலாடல் மிக்கார் வருமாட்சிஎன்றுநல் லோர்கள் பரவியேத்தும் இராமேச் சுரமேயார்குன்றினா லன்றரக் கன்றடந்தோள் அடர்த்தார் கொளுங்கொள்கையே.
சொற்பிரிப்பு
பொன் திகழ் சுண்ண வெண்நீறு பூசி, புலித்தோல் உடை ஆக,மின் திகழ் சோதியர், பாடல் ஆடல் மிக்கார், வரு மாட்சிஎன்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார்குன்றினால் அன்று அரக்கன் தடந்தோள் அடர்த்தார், கொளும் கொள்கையே!
உரை

உரை எழுதப்படவில்லை

9

கோவலன் நான்முகன் நோக்கொணாத குழகன் அழகாயமேவலன் ஒள்ளெரி ஏந்தியாடும் இமையோர் இறைமெய்ம்மைஏவல னார்புகழ்ந் தேத்திவாழ்த்தும் இராமேச் சுரமேயசேவல வெல்கொடி யேந்துகொள்கையெம் மிறைவர் செயுஞ்செயலே.
சொற்பிரிப்பு
கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன், அழகு ஆயமேவலன், ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர் இறை, மெய்ம்மைஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயசே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர், செயும் செயலே!
உரை

உரை எழுதப்படவில்லை

10

பின்னொடு முன்னிடு தட்டைச்சாத்திப் பிரட்டே திரிவாரும்பொன்னெடுஞ் சீவரப் போர்வையார்கள் புறங்கூறல் கேளாதேஇன்னெடுஞ் சோலைவண் டியாழ்முரலும் இராமேச் சுரமேயபன்னெடு வெண்டலை கொண்டுழலும் பரமர் செயுஞ்செயலே.
சொற்பிரிப்பு
பின்னொடு முன் இடு தட்டைச் சாத்திப் பிரட்டே திரிவாரும்,பொன் நெடுஞ் சீவரப் போர்வையார்கள், புறம் கூறல் கேளாதே,இன் நெடுஞ் சோலை வண்டு யாழ்முரலும் இராமேச்சுரம்மேய,பல்—நெடு வெண்தலை கொண்டு உழலும், பரமர் செயும் செயலே!
உரை

உரை எழுதப்படவில்லை

11

தேவியை வவ்விய தென்னிலங்கை அரையன் திறல்வாட்டிஏவியல் வெஞ்சிலை யண்ணல்நண்ணும் இராமேச் சுரத்தாரைநாவியன் ஞானசம் பந்தன்நல்ல மொழியான் நவின்றேத்தும்பாவியன் மாலைவல் லாரவர்தம் வினையாயின பற்றறுமே.
சொற்பிரிப்பு
தேவியை வவ்விய தென் இலங்கை அரையன் திறல் வாட்டிஏ இயல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை,நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும்பா இயல் மாலை வல்லார் அவர் தம் வினை ஆயின பற்று அறுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்