திருமுறை 3 · 3.074 · 11

திருச்சிற்றம்பலம்

திருத்தேவூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
தேவூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

காடுபயில் வீடுமுடை யோடுகலன் மூடுமுடை யாடைபுலிதோல்தேடுபலி யூணதுடை வேடமிகு வேதியர் திருந்துபதிதான்நாடகம தாடமஞ்ஞை பாடவரி கோடல்கைம்ம றிப்பநலமார்சேடுமிகு பேடையனம் ஊடிமகிழ் மாடமிடை தேவூரதுவே.
சொற்பிரிப்பு
காடு பயில் வீடு, முடை ஓடு கலன், மூடும் உடை ஆடை புலிதோல்,தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான்-நாடகம் அது ஆட ம(ஞ்)ஞை, பாட அரி, கோடல் கைம் மறிப்ப, நலம் ஆர்சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

கோளரவு கொன்றைநகு வெண்டலையெ ருக்குவனி கொக்கிறகொடும்வாளரவு தண்சலம கட்குலவு செஞ்சடைவ ரத்திறைவனூர்வேளரவு கொங்கையிள மங்கையர்கள் குங்குமம்வி ரைக்குமணமார்தேளரவு தென்றல்தெரு வெங்கும்நிறை வொன்றிவரு தேவூரதுவே.
சொற்பிரிப்பு
கோள் அரவு, கொன்றை, நகு வெண் தலை, எ ருக்கு, வனி, கொக்கு இறகொடும்வாள் அரவு, தண்சலமகள், குலவு செஞ்சடை வரத்து இறைவன் ஊர்வேள்அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும்மணம்ஆர்தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வருதேவூர் அதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

பண்தடவு சொல்லின்மலை வல்லியுமை பங்கன்எமை யாளும்இறைவன்எண்தடவு வானவரி றைஞ்சுகழ லோன்இனிதி ருந்தஇடமாம்விண்தடவு வார்பொழிலு குத்தநற வாடிமலர் சூடிவிரையார்*செண்தடவு மாளிகைசெ றிந்துதிரு வொன்றிவளர் தேவூரதுவே.(* சேண் என்பது செண் எனக் குறுகிநின்றது. )
சொற்பிரிப்பு
பண் தடவு சொல்லின் மலை வல்லி உமை பங்கன், எமை ஆளும் இறைவன்,எண் தடவு வானவர் இறைஞ்சு கழ லோன், இனிது இருந்த இடம் ஆம்விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி, மலர் சூடி, விரை ஆர்செண் தடவும் மாளிகை செறிந்து, திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

மாசில்மனம் நேசர்தம தாசைவளர் சூலதரன் மேலையிமையோர்ஈசன்மறை யோதியெரி ஆடிமிகு பாசுபதன் மேவுபதிதான்வாசமலர் கோதுகுயில் வாசகமும் மாதரவர் பூவைமொழியுந்தேசவொலி வீணையொடு கீதமது வீதிநிறை தேவூரதுவே.
சொற்பிரிப்பு
மாசு இல் மனம் நேசர் தமது ஆசை வளர் சூலதரன், மேலை இமையோர்ஈசன், மறை ஓதி, எரி ஆடி, மிகு பாசுபதன், மேவு பதிதான்-வாசமலர் கோது குயில் வாசகமும், மாதர் அவர் பூவை மொழியும்தேச ஒலி, வீணையொடு கீதம் அது, வீதி நிறை தேவூர் அதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

கானமுறு மான்மறியன் ஆனையுரி போர்வைகன லாடல்புரிவோன்ஏனஎயி றாமையிள நாகம்வளர் மார்பினிமை யோர்தலைவனூர்வானணவு சூதமிள வாழைமகிழ் மாதவிப லாநிலவிவார்தேனமுது வுண்டுவரி வண்டுமருள் பாடிவரு தேவூரதுவே.
சொற்பிரிப்பு
கானம் உறு மான் மறியன்; ஆனை உரி போர்வை; கனல் ஆடல் புரிவோன்;ஏன எயிறு, ஆமை, இள நாகம், வளர் மார்பின் இமையோர் தலைவன்; ஊர்வான் அணவு சூதம், இள வாழை, மகிழ், மாதவி, பலா, நிலவி, வார்தேன் அமுது உண்டு, வரிவண்டு மருள் பாடி வரு தேவூர்அதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

ஆறினொடு கீறுமதி யேறுசடை யேறன்அடை யார்நகர்கள்தான்சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன்நமை யாளும்அரனூர்வீறுமலர் ஊறுமது ஏறிவளர் வாயவிளை கின்றகழனிச்சேறுபடு செங்கயல்வி ளிப்பஇள வாளைவரு தேவூரதுவே.
சொற்பிரிப்பு
ஆறினொடு கீறுமதி ஏறு சடை, ஏறன்; அடையார் நகர்கள் தான்,சீறுமவை, வேறுபட நீறு செய்த நீறன்; நமை ஆளும் அரன்; ஊர்வீறு மலர் ஊறும் மது ஏறி, வளர்வு ஆய விளைகின்ற கழனிச்சேறு படு செங்கயல் விளிப்ப, இள வாளை வரு தேவூர் அதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுரம் அன்றவிய நின்றுநகைசெய்என்றனது சென்றுநிலை யெந்தைதன தந்தையமர் இன்பநகர்தான்முன்றின்மிசை நின்றபல வின்கனிகள் தின்றுகற வைக்குருளைகள்சென்றிசைய நின்றுதுளி ஒன்றவிளை யாடிவளர் தேவூரதுவே.
சொற்பிரிப்பு
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம், அன்று, அவிய, நின்று நகைசெய்என் தனது சென்று நிலை; எந்தை தன தந்தை; அமர் இன்ப நகர்தான்-முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று, கறவைக் குருளைகள்சென்று, இசைய நின்று துளி, ஒன்ற விளை யாடி, வளர் தேவூர்அதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

ஓதமலி கின்றதென் இலங்கையரை யன்மலிபு யங்கள்நெரியப்பாதமலி கின்றவிர லொன்றினில டர்த்தபர மன்றனதிடம்போதமலி கின்றமட வார்கள்நட மாடலொடு பொங்குமுரவஞ்சேதமலி கின்றகரம் வென்றிதொழி லாளர்புரி தேவூரதுவே.
சொற்பிரிப்பு
ஓதம் மலிகின்ற தென் இலங்கை அரை யன் மலி புயங்கள் நெரிய,பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அ டர்த்த பரமன் தனது இடம்போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம்,சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழி லாளர் புரி தேவூர் அதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

வண்ணமுகி லன்னஎழில் அண்ணலொடு சுண்ணமலி வண்ணமலர்மேல்நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள் கண்ணவன் நலங்கொள்பதிதான்வண்ணவன நுண்ணிடையின் எண்ணரிய அன்னநடை யின்மொழியினார்திண்ணவண மாளிகைசெ றிந்தஇசை யாழ்மருவு தேவூரதுவே.
சொற்பிரிப்பு
வண்ணம்முகில்அன்ன எழில்அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர்மேல்நண்அவனும் எண்அரிய விண்ணவர்கள் கண்ணவன் நலம் கொள் பதிதான்வண்ண வன நுண் இடையின், எண் அரிய, அன்ன நடை, இன்மொழியினார்திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

10 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

பொச்சமமர் பிச்சைபயில் அச்சமணு மெச்சமறு போதியருமாமொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு நச்சரவன் மொச்சநகர்தான்மைச்சின்முகில் வைச்சபொழில்... ... ... ... ... ..... ... ... ... .. ... ... ... ...( இச்செய்யுளின் மற்றையஅடிகள் கிடைக்கப்பெறவில்லை)
சொற்பிரிப்பு
பொச்சம் அமர் பிச்சை பயில் அச் சமணும், எச்சம் அறு போதியரும், ஆம்மொச்சை பயில் இச்சை கடி பிச்சன், மிகு நச்சு அரவன், மொச்ச நகர்தான்-மைச் சில் முகில் வைச்ச பொழில்...( இச்செய்யுளின் மற்றைய அடிகள் கிடைக்கவில்லை)

11

துங்கமிகு பொங்கரவு தங்குசடை நங்களிறை துன்றுகுழலார்செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு பங்கனமர் தேவூரதன்மேல்பைங்கமல மங்கணிகொள் திண்புகலி ஞானசம் பந்தனுரைசெய்சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை வல்லவர்கள் சங்கையிலரே.
சொற்பிரிப்பு
துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்றுகுழல் ஆர்செங்கயல்கண் மங்கை உமை நங்கை ஒரு பங்கன்—அமர் தேவூர் அதன்மேல்,பைங்கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன், உரைசெய்சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள், சங்கைஇலரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்