திருமுறை 3 · 3.075 · 11

திருச்சிற்றம்பலம்

திருச்சண்பைநகர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
சீர்காழி - 09-சண்பை
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

எந்தமது சிந்தைபிரி யாதபெரு மானெனஇ றைஞ்சியிமையோர்வந்துதுதி செய்யவளர் தூபமொடு தீபமலி வாய்மையதனால்அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள் செய்யஅமர் கின்றஅழகன்சந்தமலி குந்தளநன் மாதினொடு மேவுபதி சண்பைநகரே.
சொற்பிரிப்பு
“எம் தமது சிந்தை பிரியாத பெரு மான்!” என இறைஞ்சி, இமையோர்வந்து துதிசெய்ய, வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால்,அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்,சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு, மேவு பதி சண்பைநகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

அங்கம்விரி துத்தியர வாமைவிர வாரமமர் மார்பிலழகன்பங்கயமு கத்தரிவை யோடுபிரி யாதுபயில் கின்றபதிதான்பொங்குபர வைத்திரைகொ ணர்ந்துபவ ளத்திரள்பொ லிந்தவயலேசங்குபுரி யிப்பிதர ளத்திரள்பி றங்கொளிகொள் சண்பைநகரே.
சொற்பிரிப்பு
அங்கம் விரி துத்தி அரவு, ஆமை, விர வு ஆரம் அமர் மார்பில் அழகன்,பங்கய முகத்து அரிவையோடு பிரி யாது, பயில்கின்ற பதிதான்-பொங்கு பரவைத் திரை கொணர்ந்து பவ ளத்திரள் பொலிந்த அயலே,சங்கு புரி இப்பி தரளத்திரள் பி றங்கு ஒளி கொள் சண்பைநகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

போழுமதி தாழுநதி பொங்கரவு தங்குபுரி புன்சடையினன்யாழின்மொழி மாழைவிழி யேழையிள மாதினொ டிருந்தபதிதான்வாழைவளர் ஞாழல்மகிழ் மன்னுபுனை துன்னுபொழில் மாடுமடலார்தாழைமுகிழ் வேழமிகு தந்தமென உந்துதகு சண்பைநகரே.
சொற்பிரிப்பு
போழும் மதி, தாழும் நதி, பொங்கு அரவு, தங்கு புரிபுன்சடையினன்,யாழ் இன்மொழி, மாழைவிழி, ஏழை இள மாதினொடு இருந்த பதிதான்-வாழைவளர் ஞாழல், மகிழ், மன்னு புனை, துன்னு பொழில் மாடுமடல்ஆர்தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என, உந்து தகு சண்பைநகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

கொட்டமுழ விட்டவடி வட்டணைகள் கட்டநட மாடிகுலவும்பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி பாவையொடு மேவுபதிதான்வட்டமதி தட்டுபொழி லுட்டமது வாய்மைவழு வாதமொழியார்சட்டகலை எட்டுமரு வெட்டும்வளர் தத்தைபயில் சண்பைநகரே.
சொற்பிரிப்பு
கொட்ட முழவு, இட்ட அடி வட்டணைகள் கட்ட, நடம் ஆடி, குலவும்பட்டம் நுதல், கட்டு மலர் மட்டு மலி, பாவையொடு மேவு பதிதான்-வட்டமதி தட்டு பொழிலுள், தமது வாய்மை வழுவாத மொழியார்சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பைநகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

பணங்கெழுவு பாடலினொ டாடல்பிரி யாதபர மேட்டிபகவன்அணங்கெழுவு பாகமுடை ஆகமுடை யன்பர்பெரு மானதிடமாம்இணங்கெழுவி யாடுகொடி மாடமதில் நீடுவிரை யார்புறவெலாந்தணங்கெழுவி யேடலர்கொள் தாமரையில் அன்னம்வளர் சண்பைநகரே.
சொற்பிரிப்பு
பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரி யாத பரமேட்டி, பகவன்,அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம்இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில், நீடு விரை ஆர் புறவு எலாம்,தணம்கெழுவிஏடுஅலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பைநகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

பாலனுயிர் மேலணவு காலனுயிர் பாறவுதை செய்தபரமன்ஆலுமயில் போலியலி ஆயிழைத னோடுமமர் வெய்துமிடமாம்ஏலமலி சோலையின வண்டுமலர் கிண்டிநற வுண்டிசைசெயச்சாலிவயல் கோலமலி சேலுகள நீலம்வளர் சண்பைநகரே.
சொற்பிரிப்பு
பாலன் உயிர்மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன்,ஆலும் மயில் போல் இயலி ஆயிழைத னோடும், அமர்வு எய்தும் இடம் ஆம்ஏலம் மலி சோலை இனவண்டு மலர் கெண்டி, நறவு உண்டுஇசைசெய,சாலி வயல் கோலம் மலி சேல் உகள, நீலம் வளர் சண்பைநகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

விண்பொய்அத னால்மழைவி ழாதொழியி னும்விளைவு தான்மிகவுடைமண்பொய்அத னால்வளமி லாதொழியி னுந்தமது வண்மைவழுவார்உண்பகர வாருலகி னூழிபல தோறும்நிலை யானபதிதான்சண்பைநகர் ஈசனடி தாழுமடி யார்தமது தன்மையதுவே.
சொற்பிரிப்பு
விண் பொய் அதனால் மழை விழாதொழியி னும், விளைவுதான் மிக உடைமண் பொய் அதனால் வளம் இலாதொழியி னும், தமது வண்மை வழுவார்உண்ப கரவார், உலகின் ஊழி பல தோறும் நிலை ஆன பதிதான்-சண்பைநகர்; ஈசன் அடி தாழும் அடி யார் தமது தன்மை அதுவே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

வரைக்குல மகட்கொரு மறுக்கம்வரு வித்தமதி யில்வலியுடையரக்கனது ரக்கரசி ரத்துறவ டர்த்தருள் புரிந்தஅழகன்இருக்கையத ருக்கன்முத லானஇமை யோர்குழுமி யேழ்விழவினிற்தருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் கொண்டலன சண்பைநகரே.
சொற்பிரிப்பு
வரைக்குல மகட்கு ஒரு மறுக்கம் வரு வித்த, மதி இல், வலி உடைஅரக்கனது உரக் கரசிரத்து உற அ டர்த்து, அருள்புரிந்த அழகன்இருக்கை அது அருக்கன் முதலான இமை யோர் குழுமி ஏழ் விழவினில்தருக்குலம் நெருக்கும் மலி தண்பொழில்கள் கொண்டல் அன சண்பைநகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

நீலவரை போலநிகழ் கேழலுரு நீள்பறவை நேருருவமாம்மாலுமல ரானும்அறி யாமைவளர் தீயுருவ மானவரதன்சேலும்இன வேலும்அன கண்ணியொடு நண்ணுபதி சூழ்புறவெலாஞ்சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு கிள்ளைபயில் சண்பைநகரே.
சொற்பிரிப்பு
நீல வரை போல நிகழ் கேழல் உரு, நீள் பறவை நேர் உருவம், ஆம்மாலும் மலரானும், அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன்,சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம்சாலி மலி, சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில், சண்பைநகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு வாதவகை யுண்டுபலபொய்ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை நன்றதுணர் வீருரைமினோஆதியெமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்தபதிதான்சாதிமணி தெண்டிரைகொ ணர்ந்துவயல் புகஎறிகொள் சண்பைநகரே.
சொற்பிரிப்பு
போதியர்கள், பிண்டியர்கள், போது வழு வாத வகை உண்டு,பலபொய்ஓதிஅவர் கொண்டுசெய்வது ஒன்றும்இலை நன்றுஅது ணர்வீர் உரைமினோஆதி, எமை ஆள் உடைய அரிவையொடு பிரிவு இலி, அமர்ந்த பதிதான்,சாதிமணி தெண்திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பைநகரே!
உரை

உரை எழுதப்படவில்லை

11

வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு சங்கரன்ம கிழ்ந்தமருமூர்சாரின்முரல் தெண்கடல்வி சும்புறமு ழங்கொலிகொள் சண்பைநகர்மேற்பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் ஞானசம் பந்தனுரைசெய்சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர்சிவ லோகநெறியே.
சொற்பிரிப்பு
வாரின்மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்துஅமரும் ஊர்சாரின் முரல் தெண்கடல் விசும்பு உற மு ழங்கு ஒலி கொள் சண்பைநகர்மேல்,பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன், உரைசெய்சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர், சேர்வர், சிவலோக நெறியே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்