திருமுறை 3 · 3.072 · 11

திருச்சிற்றம்பலம்

திருமாகறல்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
மாகறல்
நாடு
தொண்டைநாடு

1

விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம்மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.
சொற்பிரிப்பு
விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல்அரவம்,மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல் உளான்-கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி செஞ்சடையினான்;செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும், உடனே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார்மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள்அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.
சொற்பிரிப்பு
கலையின் ஒலி, மங்கையர்கள் பாடல் ஒலி, ஆடல், கவின்எய்தி, அழகு ஆர்மலையின் நிகர் மாடம், உயர் நீள்கொடிகள் வீசும் மலி மாகறல் உளான்-இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி, எரிபுன் சடையினுள்அலை கொள் புனல் ஏந்து பெருமான் அடியை ஏத்த, வினை அகலும், மிகவே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்தோலையுடை பேணியதன் மேலொர்சுடர் நாகமசை யாவழகிதாப்பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.
சொற்பிரிப்பு
காலையொடு துந்துபிகள், சங்கு, குழல், யாழ், முழவு, காமருவு சீர்மாலை வழிபாடு செய்து, மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான்-தோலை உடை பேணி, அதன்மேல் ஒர் சுடர் நாகம் அசையா, அழகிதாப்பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த, வினை பறையும், உடனே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனேமங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையேநுங்கள்வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராவெழுமினே.
சொற்பிரிப்பு
இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி, எழில் மெய்யுள் உடனே,மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி, மகிழ் மாகறல் உளான்-கொங்கு, வளர் கொன்றை, குளிர்திங்கள், அணி செஞ்சடையினான்—அடியையேநுங்கள் வினை தீர, மிக ஏத்தி,வழி பாடு நுகரா, எழுமினே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடல்மலி மாகறலுளான்வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானொர்மழு வாளன்வளரும்நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.
சொற்பிரிப்பு
துஞ்சு நறு நீலம், இருள் நீங்க, ஒளி தோன்றும் மது வார் கழனிவாய்,மஞ்சு மலி பூம்பொழிலில், மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான்-வஞ்ச மதயானை உரி போர்த்து மகிழ் வான், ஒர் மழுவாளன்,வளரும்நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன்அடி யாரை நலியா, வினைகளே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவேஉன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர் வானுலகம் ஏறலெளிதே.
சொற்பிரிப்பு
மன்னும் மறையோர்களொடு பல்படிம மா தவர்கள் கூடி உடன் ஆய்இன்ன வகையால் இனிது இறைஞ்சி, இமை யோரில் எழு மாகறல் உளான்-மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள் கங்கையொடுதிங்கள் எனவேஉன்னுமவர், தொல்வினைகள் ஒல்க, உயர் வான் உலகம் ஏறல் எளிதே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர்மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார்கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே.
சொற்பிரிப்பு
வெய்ய வினை நெறிகள் செல, வந்து அணையும் மேல்வினைகள் வீட்டல் உறுவீர்மை கொள் விரி கானல், மது வார் கழனி மாகறல் உளான்—எழில் அது ஆர்கைய கரி கால்வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர்ஐயன்அடி சேர்பவரை அஞ்சி அடை யா, வினைகள்; அகலும், மிகவே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையேமாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்பூசுபொடி யீசனென ஏத்தவினை நிற்றலில போகுமுடனே.
சொற்பிரிப்பு
தூசு துகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வன, பொன் மாடமிசையே,மாசு படு செய்கை மிக, மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்;“பாசுபத! இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி, அழகு ஆர்பூசு பொடி ஈசன்!” என ஏத்த, வினை நிற்றல் இல, போகும், உடனே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமருவுண்பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்சாயவிர லூன்றியவிராவணன தன்மைகெட நின்றபெருமான்ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை யாயினவும் அகல்வதெளிதே.
சொற்பிரிப்பு
தூய விரிதாமரைகள், நெய்தல், கழு நீர், குவளை, தோன்ற, மது உண்பாய வரிவண்டு பலபண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்-சாய விரல் ஊன்றி அவ்விராவணன தன்மை கெட நின்றபெருமான்-ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்மாலுமல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.
சொற்பிரிப்பு
காலின் நல பைங்கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார்மாலும் மலரானும், அறியாமை எரி ஆகி, உயர் மாகறல் உளான்-நாலும் எரி, தோலும் உரி, மா மணிய நாகமொடு கூடி உடன்ஆய்,ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடி யாரை அடையா, வினைகளே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தன்உரையான்மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையேஉடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்குமுடனே.
சொற்பிரிப்பு
கடை கொள் நெடுமாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்கோன்-அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன்—உரையால்,மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையேஉடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும், உடனே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்