திருமுறை 3 · 3.071 · 11

திருச்சிற்றம்பலம்

திருவைகாவூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
வைகாவூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை கூடும்வகையால்ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொல்மகிழும் ஈசனிடமாம்தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறிவாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே.
சொற்பிரிப்பு
கோழை மிடறு ஆக, கவி கோளும் இலஆக, இசை கூடும்வகையால்,ஏழை அடியார் அவர்கள் யாவை சொனசொல் மகிழும் ஈசன் இடம் ஆம்தாழை இளநீர் முதிய காய் கமுகின்வீழ, நிரை தாறு சிதறி,வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி, வயல்சேறு செயும் வைகாவிலே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகஎழிலார்விண்டவர்த முப்புரமெரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம்புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம்வண்டினிசை பாடஅழ கார் குயில்மி ழற்றுபொழில் வைகாவிலே.
சொற்பிரிப்பு
அண்டம் உறு மேருவரை, அங்கி கணை,நாண் அரவு அது, ஆக, எழில் ஆர்விண்டவர் தம் முப்புரம் எரித்த விகிர்தன்(ன்) அவன் விரும்பும் இடம் ஆம்புண்டரிகம் மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம்எலாம்வண்டின் இசை பாட, அழகு ஆர் குயில்மிழற்று பொழில் வைகாவிலே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவையு ணர்ந்தஅடியார்ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம்ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்கள் தோறும் அழகார்வானமதி யோடுமழை நீள்முகில்கள் வந்தணவும் வைகாவிலே.
சொற்பிரிப்பு
ஊனம் இலர் ஆகி, உயர் நல்—தவம் மெய்கற்று, அவை உணர்ந்த அடியார்ஞானம் மிக நின்று தொழ, நாளும் அருள்செய்ய வல நாதன் இடம் ஆம்ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே,பொழில்கள் தோறும், அழகு ஆர்வான மதியோடு மழை நீள் முகில்கள்வந்து அணவும்வைகாவிலே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

இன்னவுரு இன்னநிறம் என்றறிவ தேலரிது நீதிபலவும்தன்னவுரு வாமெனமி குத்தவன் நீதியொடு தானமர்விடம்முன்னைவினை போம்வகையி னால்முழு துணர்ந்துமுயல் கின்றமுனிவர்மன்னஇரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே.
சொற்பிரிப்பு
இன்ன உரு, இன்ன நிறம்,என்று அறிவதேல் அரிது; நீதிபலவும்தன்ன உரு ஆம் என மிகுத்த தவன்நீதியொடு தான் அமர்வு இடம்முன்னை வினை போம் வகையினால், முழுதுஉணர்ந்து முயல்கின்ற முனிவர்மன்ன, இருபோதும் மருவித் தொழுதுசேரும், வயல் வைகாவிலே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கஅழகால்மாதவிமணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே.
சொற்பிரிப்பு
வேதமொடு வேள்வி பல ஆயினமிகுத்து, விதி ஆறு சமயம்ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ,நின்று அருள்செய் ஒருவன் இடம் ஆம்மேதகைய கேதகைகள் புன்னையொடுஞாழல் அவை மிக்க அழகால்,மாதவி மணம் கமழ, வண்டுபலபாடு பொழில் வைகாவிலே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

நஞ்சமுது செய்தமணி கண்டன்நமை யாளுடைய ஞானமுதல்வன்செஞ்சடையி டைப்புனல்க ரந்தசிவ லோகன்அமர் கின்ற இடமாம்அஞ்சுடரொ டாறுபத மேழின் இசையெண்ணரிய வண்ணமுளவாய்மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே.
சொற்பிரிப்பு
நஞ்சு அமுது செய்த மணி-கண்டன், நமைஆள் உடைய ஞான முதல்வன்,செஞ்சடை இடைப் புனல் கரந்த சிவலோகன், அமர்கின்ற இடம் ஆம்அம் சுடரொடு, ஆறுபதம், ஏழின்இசை, எண் அரிய வண்ணம் உள ஆய்,மஞ்சரொடு மாதர்பலரும் தொழுதுசேரும், வயல்வைகாவிலே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையால்தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம்நீளவளர் சோலைதொறும் நாளிபல துன்றுகனி நின்றதுதிரவாளைகுதி கொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே.
சொற்பிரிப்பு
நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகுநல்ல மலர், வல்ல வகையால்,தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம்நீளி வளர் சோலைதொறும் நாளிபலதுன்று கனி நின்றது உதிர,வாளை குதி கொள்ள, மது நாற மலர்விரியும் வயல் வைகாவிலே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன்ஐயிருசி ரங்களையொ ருங்குடன்நெ ரித்தஅழ கன்றனிடமாம்கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம்வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே.
சொற்பிரிப்பு
கை இருப தோடுமெய் கலங்கிட,விலங்கலை எடுத்த கடியோன்ஐ—இருசிரங்களை ஒருங்கு உடன் நெரித்த அழகன் தன் இடம்ஆம்கையின் மலர் கொண்டு, நல காலையொடுமாலை, கருதி, பலவிதம்வையகம் எலாம் மருவி நின்று தொழுதுஏத்தும், எழில் வைகாவிலே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

அந்தமுதல் ஆதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள்எந்தைபெரு மான்இறைவன் என்றுதொழ நின்றருள்செ யீசனிடமாம்சிந்தைசெய்து பாடும்அடியார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள்வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே.
சொற்பிரிப்பு
அந்தம் முதல்—ஆதி பெருமான் அமரர்கோனை, அயன் மாலும்இவர்கள்“எந்தைபெருமான்! இறைவன்!” என்று தொழ,நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம்சிந்தை செய்து பாடும் அடியார், பொடி மெய்பூசி எழு தொண்டர் அவர்கள்வந்து பல சந்த மலர், முந்தி அணையும் பதி நல் வைகாவிலே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

ஈசனெமை யாளுடைய எந்தைபெரு மான்இறைவ னென்றுதனையேபேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிடம்தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன்வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே.
சொற்பிரிப்பு
“ஈசன், எமை ஆள் உடைய எந்தை பெருமான், இறைவன்”என்று தனையேபேசுதல் செயா அமணர், புத்தர் அவர்,சித்தம் அணையா அவன் இடம்தேசம் அது எலாம் மருவி நின்று பரவித்திகழ நின்ற புகழோன்,வாசமலர் ஆன பல தூவி, அணையும் பதி நல்வைகாவிலே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்திருவை காவிலதனைச்செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தன்உரைசெய்உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவர் உருத்திரரெனப்பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே.
சொற்பிரிப்பு
முற்றும் நமை ஆள் உடைய முக்கண் முதல்வன் திருவைகாவில் அதனை,செற்ற மலின் ஆர் சிரபுரத் தலைவன்—ஞானசம் பந்தன்—உரைசெய்உற்ற தமிழ் மாலை ஈர்—ஐந்தும் இவைவல்லவர் உருத்திரர் எனப்-பெற்று, அமரலோகம் மிக வாழ்வர்; பிரியார், அவர் பெரும் புகழொடே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்