1
சொற்பிரிப்பு
உரை
பொழுது புலர்வதற்கு முன்பே தொண்டர்கள் பலர்கூடி, நீறணிந்து, திருவடிகளைத் தொழுது ஏத்த அழகன் நின்ற இடம், கொடிகளுயர்ந்து ஓங்க, விழாக்கள் நிறைந்த திலதைப் பதியில் வடிவான சோலைகளின் மணங்கமழும் மதிமுத்தமே.
திருச்சிற்றம்பலம்
பொழுது புலர்வதற்கு முன்பே தொண்டர்கள் பலர்கூடி, நீறணிந்து, திருவடிகளைத் தொழுது ஏத்த அழகன் நின்ற இடம், கொடிகளுயர்ந்து ஓங்க, விழாக்கள் நிறைந்த திலதைப் பதியில் வடிவான சோலைகளின் மணங்கமழும் மதிமுத்தமே.
தொண்டர்கள் நெருங்கி, விம்மும் தூபமும் கமழ்கின்ற சந்தனமும் மாலைகளும் கொண்டு, தன்னை வழிபட, அடியார்களின் மனக்கருத்தினை அறிந்து நின்ற குழகனின் இடம், தெளிந்த பூம்புனல் ஓடும் அரிசிலாறு சூழ்ந்த திலதைப்பதியில் வண்டுகள் மலர்களைக் கெண்டி இசைபயிலும் சோலைகள் கொண்ட மதிமுத்தமே.
வெற்றியையே கருதுகின்ற போரேற்றை ஊர்தியாகக் கொண்டு மகிழ்ந்தவன், அடியவர்களும் அமரர்களும் தொழுது இரக்க, கடலில் எழுந்த நஞ்சினை அமுதமாக உண்ட கடவுள் ஆகிய சிவன் எழுந்தருளிய இடம், வெளி முழுவதும் செழுமையான கழனிகள் சூழ்ந்த திலதைப்பதியில், தாழை மடலுள் வாழைக்கனி சாறு பிலிற்றும் மதிமுத்தமே.
கங்கைநதி, பிறைநிலவு, வன்னி இலையுடன் நெருங்கிய எருக்கம்பூ, வில்வம் ,கொடிய கண்ணுடைய நாகம் ஆகியவற்றை விரிந்த சடையில் வைத்த விகிர்தன் ஆகிய சிவனுக்கு இடம், சிவந்த நிறமுடைய கயல்கள் பாயும் வெள்ளம் பாயும் அரிசிலாறு சூழ்ந்த திலதைப்பதியில் மேகங்கள் தோயும் பொழில்கள் சூழ்ந்ததும் அழகு நிறைந்ததுமாகிய மதிமுத்தமே.
குதிரைகள் ஏழு பூட்டி இயங்கும் அழகிய தேரினனாகிய சூரியன் போற்றி நின்று வழிபடும் பரமேட்டியாகிய சிவன் எழுந்தருளியுள்ள ஊர்,ஞாழல் மரங்கள் கலந்து, விரிந்த கோங்கு, சுரபுன்னைகள், வேங்கை, மரா மரங்களுள்ளதும் முல்லை மலர்வதுமாகிய திலதைப் பதியில் உள்ள மதிமுத்தமே.
விண் உலகத்தவன்; வேதங்களை விரித்து ஓத வல்லார்; ஒருபாகத்தில் பெண்ணை உடையவர்; பகைவரின் மூன்று மதில்களை எரித்தழித்து உயர்ந்த பெருமான் ஆகிய சிவன் எழுந்தருளியுள்ள இடம் தெளிந்த நிலவின் ஒளி தீண்டும் சோலைகளை உடைய திலதைப்பதி; அங்கு, மண்ணுலகத்தவர்கள் வந்து தன்னுடைய அருளை வேண்டி வழிபட நின்ற மதிமுத்தமே.
கங்கையாற்றைச் சடையில் சூடியவர்; தன்னைச் சரணாக அடையாத முப்புரத்தாரை அழித்தவர்; பொற்றொடியாகிய உமை ஒரு கூறாகச் சேரும் உருவர் ஆகிய சிவனுக்கு இடமாவது தேன் மிகுந்த பொழில்கள் சூழ்ந்ததுவும் அழகு நிறைந்ததுமாகிய திலதைப்பதியில் வற்றாத புனல் பாயும் அரிசிலாறு சூழ்ந்த மதிமுத்தமே.
தீப்போல் சினந்து வெப்பத்துடன் வந்தவன்; பெரிய கயிலைமலையை எடுத்தவன் ஆகிய இராவணனுடைய பத்து முடி இருபது தோள்களை நசுக்கியவர்க்கு இடமாவது பக்கத்தில் புடைத்து வளரும் இளம் பாளைகளிலிருந்து தேன்பாய மந்திகள் அதனை வாய்மடுத்து உண்டு துள்ளும் திலதைப்பதியில் உள்ள மதிமுத்தமே.
படமுடைய பாம்புப் படுக்கை கொண்ட திருமாலும் தாமரை மலர் மேலிருக்கும் நான்முகனும் வழிபட நின்ற இறைவன் ஆகிய சிவன் எழுந்தருளியுள்ள இடம் நாவினால் அவனுடைய புகழைத் தொண்டர் பாடும் திலதைப்பதியில் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே.
பவுத்தராகிய தேரர்கள், அறிவற்ற சமணர்கள் ஆகிய பெருமையில்லாப் பித்தர்கள் சொன்ன மொழிகளை ஒருபொருட்டாகக் கேட்காத பெருமான் ஆகிய சிவன்எழுந்தருளியுள்ள இடம், பத்தர்களும் சித்தர்களும் பணிவுடன் தொழுது வணங்கும் திலதைப்பதியில் மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே.
குளிர்ச்சி நிறைந்த பொழில்கள் சூழ்திலதைப்பதியில் மதிமுத்தத்து இறைவர்மேல் மணம் கமழும் கடற்காழியில் உள்ளான் தமிழ்ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்மாலையைப் பாடி நின்று ஏத்த வல்லார்கள், சிந்திப்பவர்கள் சிவனின் சேவடிகளைப் போய்ச் சேர்வது திண்ணம்.
திருச்சிற்றம்பலம்