1
சொற்பிரிப்பு
உரை
பெருகும் கங்கை நதியைச் சடையில் மறைத்தவன்; பிறையைச் சூடி, மான் ஏந்திய கையான்; திரிபுரம் மூன்றையும் எரித்த அழகன்; அவனுடைய இடம், எட்டுத்திசையும் பரவி விளங்கும் இரும்பை அதனுள் வண்டுகள் கீதம் முரல்கின்ற பொழில்கள் சூழ்ந்த மாகாளமே.
திருச்சிற்றம்பலம்
பெருகும் கங்கை நதியைச் சடையில் மறைத்தவன்; பிறையைச் சூடி, மான் ஏந்திய கையான்; திரிபுரம் மூன்றையும் எரித்த அழகன்; அவனுடைய இடம், எட்டுத்திசையும் பரவி விளங்கும் இரும்பை அதனுள் வண்டுகள் கீதம் முரல்கின்ற பொழில்கள் சூழ்ந்த மாகாளமே.
வேதவித்து; வெண்ணீறு பூசி; வினையாயினவாகிய கோதுகளை அவித்தான்; சாம்பலாகக் கொடி பறக்கும் மும்மதில்களை எரித்தவன்; ஏதங்களுக்கு வித்தாயினவற்றைத்தீர்ப்பவன்; அவனுடைய இடம் இரும்பை தன்னுள் மாதவத்தோரும் மறையோரும் தொழ நின்ற மாகாளமே.
சுட்ட சாம்பலும் எலும்பும் அணிந்தவன்; விடை ஊர்தியான்; என்னுடைய தந்தை; என்னுடைய பெருமான் ஆகிய சிவனின் இடமாவது, அழகிய சோலைகள் நிறைந்த இரும்பைத் தன்னுள் மணங்கமழும் பொழில்களில் மந்தி மரமேறி பலாப்பழத்தைக் கொண்டு வந்து உண்டு துள்ளித் திரிகின்ற மாகாளமே.
ஆலகால விடத்தைக் கண்டத்தில் அடக்கி; நடுங்கும் மலைமகள் அஞ்சக் களிற்றின் தோலை உரித்த பெருமான் ஆகிய சிவன் உறையும் இடம், குறைவிலாமல் நிறைந்த புகழ் எங்கும் விளங்கும் இரும்பை தன்னுள், கார்மேகங்கள் தங்கும் பொழில்கள் சூழ்ந்ததும் அழகுடையதுமாகிய மாகாளமே.
தூய்மையான திருநீற்றினை அணிந்தவன்; விடை ஊர்தியான்; இமய அரசன் மகள் பார்வதி நடுங்க ஆனையின் தோலை உரித்த பெருமான்; பிறைமதி அணிந்த ஈசன்; எங்கள் இறைவன் ஆகிய சிவனின் இடம், இரும்பை தன்னுள் குற்றமிலாத அடியவர்கள் மலர்கொண்டு அலங்காரம் செய்கின்ற மாகாளமே.
குளிர்ந்ததும் குறையுடையதுமாகிய திங்களைச் சூடிக் கூத்தாடிய பிரான், வினைகளை அழிப்பவன்; பரமன்; பகவன்; விரிந்த சடையுடைய எங்கள் பெருமான் ஆகிய சிவனின் இடம் இரும்பை தன்னுள் வேதம் வல்ல அந்தணர்கள் வணங்கித் தொழ நின்ற மாகாளமே.
சினத்தாற் சீறிப் பொங்குவதும் சிவந்த கண்ணை உடையதுமாகிய பாம்பையும் பிறையையும் புரிந்த பொன்னிற சடையில் தங்க வைத்த பெருமான் உறையும் இடம், எங்கும் விருப்பத்துடன் அமர்ந்தவன் இடம் இரும்பைதன்னுள், மேகம் தோயும் பொழில்கள் சூழ்ந்ததும் அழகாயதும் ஆகிய மாகாளமே.
நரிகள் நடமாடுகின்ற சுடுகாட்டிலே கூத்தாடுதலோடு எரியாடுவான்; எட்டுருவத்தன்; ஆரழல் போல சிவந்த உருவன்; அழகாகவே விருப்பத்துடன் எழுந்தருளியிருக்கும் இடமாவது; இரும்பை தன்னுள் வலம் வந்து பணிவாரின் பிணிகளைத் தீர்க்கும் மாகாளமே.
போராடிய காலனின் உயிரைப் பறித்தான்; இராவணனாகிய அரக்கனின் பத்து முடியும் இருபது தோள்களும் இற்று வீழும்படி விரல் ஊன்றினான்; அச்சிவன் விருப்பத்துடன் எழுந்தருளிய இடம் இரும்பை தன்னுள், தேன் நிறைந்த பொழில்கள் சூழ்ந்ததும் அழகுடையதுமாகிய மாகாளமே.
பாம்பினை அரையில் கச்சாகக் கட்டி, நெருப்பினை அங்கையில் ஏந்தி அடியும் முடியும் அயனும் மாலும் அறியாத வண்ணம் நின்ற பெரியோன் எழுந்தருளிய இடம், குயில்கள் வந்து சேரும் குராமரங்கள் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த இரும்பை தன்னுள் வானோரும் மறையோரும் பொருந்தித் தொழுகின்ற மாகாளமே.
எம்முடைய தந்தை; பெருமான் எழுந்தருளியுள்ள இடம், அழகு தங்கிய சோலைகள் உள்ள இரும்பை தன்னுள் குளிர்ச்சியுடைய பொழில்கள் சூழ்ந்து அழகு நிறைந்த மாகாளத்தில் அந்தமிலா அனலாடுவான் மேல் ஞானசம்பந்தன் சொன்ன இத்தமிழ்த் திருப்பதிகத்தைப் பாடவல்லாரின் பழிபோய்விடும்.
திருச்சிற்றம்பலம்