1
சொற்பிரிப்பு
உரை
வண்டுகள் பாட, அவ்விசைக்கேற்ப மயில்கள் ஆட, மகிழ்ச்சியால் மான்கன்று துள்ள, மருண்ட கெண்டைமீன்கள் பாயச் சுனையில் நீலமலர் மொட்டு விரியும் திருக்கேதாரமே, தொண்டர்கள் ஐம்புலன்களாகிய அஞ்சத்தக்க களிறுகளையும் அடக்கிச் சுரும்புகள் மொய்க்கும் பருவத்தில் உள்ள மலர்களை இண்டையாகக் கட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால்.