1
சொற்பிரிப்பு
உரை
அம்பிகை பாகன்; விடை மேலேறி அருளும் முதல்வன்; அவன் உறைகின்ற திருவாடானையை மலர்களால் அலங்கரித்தும் அருச்சித்தும் வழிபடுவோரை வினைகள் வருத்தம் செய்யா; மாறாக, அவை அழிந்து ஒழியும்.
திருச்சிற்றம்பலம்
அம்பிகை பாகன்; விடை மேலேறி அருளும் முதல்வன்; அவன் உறைகின்ற திருவாடானையை மலர்களால் அலங்கரித்தும் அருச்சித்தும் வழிபடுவோரை வினைகள் வருத்தம் செய்யா; மாறாக, அவை அழிந்து ஒழியும்.
வற்றிய பிரமகபாலத்தைக் கையிலேந்தி நின்று ஆடுதலை உடையானது திருவாடானையை இதழ்களுள்ள மலர்களைத் தூவிக் கைதொழ, உங்கள் வினைகள் அழியும்.
மங்கை பங்கன்; மான்மறியை ஏந்திய திருக்கரத்தன்; அவன் உறைகின்ற திருவாடானையைத் தம்முடைய கையினால் தொழுது ஏத்த வல்லவரை மங்கச் செய்யும் நோயும் பிணியும் மாயும்.
திருநீறு அணிந்த மார்பில் பூணூலொடு தோல்புனை அண்ணல் உறைகின்ற திருவாடானையை பலநிற மலர்களிட்டுத் தூவிக் கைதொழுது வழிபட்டுத் தியானம் செய்வாருடைய இடர்களானவை நீங்கும்.
கொய்த அழகிய கொன்றை மலர்களைச் சூடிய ஐயன் எழுந்தருளியுள்ள திருவாடானையைக் கை நிறைந்த மலர்கள் தூவி வணங்கிட கொடிய வல்வினைகள் அழிந்துபோகும்.
தூய நிறமுடைய இளம்பிறை பொருந்திய நீண்ட சடையை உடையவர்; பஞ்ச கௌவியம் ஆடுவர்; ஆகியவரின் திருவாடானையை தேனுடைய மலர்களைச் சேர்த்தலால் முன் செய்த பழவினை பற்றறக் கெடும்.
வெண்மையான ஒளியுடன் விளங்கும் மழுப்படையினை ஏந்தியவன்; சடையைச் சூழ்ந்த மாலையன் ஆகிய சிவன் உறைகின்ற திருவாடானையை அழகுடைய மிக்க மலர்களைத் தூவி நாள்தோறும் வழிபட்டு வலம் கொள்வாருடைய வினை மாயும்.
சுட்ட திருநீற்றை அணிந்த மார்பில் பூணூலொடு தோல் புனைவர்; அந்தமில்லவர்; அவர் உறையும் திருவாடானையை மணமுள்ள மலர்களைத் தூவிக் கைதொழும் சிந்தனையை உடையவரது வினை தேய்ந்து ஒழியும்.
மறைவல்ல பூசுரர்களொடு சுரர்களும் தொழும், ஒலிக்கும் நீர்த்தடங்கள், உடைய திருவாடானையில் உறையும் ஈசனை ஏத்தத் தீவினை அழியும்; நல்வினையாகியசிவபுண்ணியம் வந்து சேரும்.
திருமாலும் மலர்மேல் உறையும் நான்முகனும் கைதொழல் ஆகிய அந்தணனின் திருவாடானையை தூய்மைமிக்க மலர்களைத் தூவிக் கைதொழத் தீவினைகள் தீரும்.
இறந்தவர்கள் மலிந்த வெந்த காட்டில் நின்று ஆடலான் ஆகிய சிவன் உறைகின்ற திருவாடானையை நாடி, ஞானசம்பந்தனின் செந்தமிழ்த் திருப்பதிகத்தைப் பாட நோயும் பிணியும் அழியும்.
திருச்சிற்றம்பலம்