1
சொற்பிரிப்பு
உரை
அழகிய திருமேனியர்; ஆகாயத்தில் தவழும் பிறையைச் சூடியவர்; கங்கை நதியைச் சடையில் தாங்கியவர்; மணமுள்ள கொன்றை மலரை அணிந்த சடையினர்; உமாதேவியாகிய கொடியைப் பாகத்தில் உடையவர்; உடையாகப் புலித்தோலை அரையில் அசைப்பர்; ஊர்தியாக விடையை ஏறுவர்; இப்பண்புகளை உடைய எங்கள் பெம்மான் விருப்பத்துடன் இனிது உறையும் இடம் திருவிற்குடி வீரட்டம்; இவருக்கு அடியாராகிப் பணிய வல்லார்தமை அருவினைகள் அடையா.