திருமுறை 2 · 2.104 · 11

திருச்சிற்றம்பலம்

திருக்கடிக்குளம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டராகம்
தலம்
கடிக்குளம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர் புலியுரி யதளாடைகொடிகொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு குரைகழல் சிலம்பார்க்கக்கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தைத்தம்முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே.
சொற்பிரிப்பு
பொடி கொள் மேனி வெண்ணூலினர் தோலினர் புலி உரியதளாடைகொடி கொளேற்றினர் மணி கிணி எனவருகு உரைகழல் சிலம்பு ஆர்க்கக்கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தைத்தம்முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே.
உரை

கடிக்குளத்தில் எழுந்தருளிய கற்பகத்தைத் தலைசாய்த்துத் திருவடியை வணங்கும் அடியார்களை வினைகள் சூழமாட்டா. கற்பகம் - இத்தலத்தில் இறைவன் திருநாமம்.

2

விண் களார்தொழும் விளக்கினைத் துளக்கிலா விகிர்தனை விழவாரும்மண்க ளார்துதித் தன்பரா யின்புறும் வள்ளலை மருவித்தம்கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத் துறைதரு கற்பகத்தைப்பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே.
சொற்பிரிப்பு
விண்களார் தொழும் விளக்கினைத் துளக்கிலா விகிர்தனை விழவாரும்மண்களார் துதித்து அன்பரா யின்புறும் வள்ளலை அருவித்தம்கண்களார் தரக்கண்டு நங்கடிக் குளத்துறை தருகற்பகத்தைப்பண்களார் தரப்பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே.
உரை

விண்ணோர் தொழும் விளக்கு. துளக்கு - தளர்ச்சி. விகிர்தன்- முரணுறு      செயலினன். திருவிழாக்கள் நிறைந்த மண்ணுலகில் வாழ்வோர் அன்பராகிப் பேரின்பம் பெற ஈந்தருளும் வள்ளல். அவ்வள்ளலைச் சேர்ந்து கண்ணாரக் கண்டு பண்ணாரப் பாடிப் பணிவார் கேடும் பழியும் இலராவர். புகழ் உளராவர். தரிசனமும் கீதமும் திருந்தவும் முற்றவும் செய்தால் எய்தும் பயன்கள் உணர்த்தப்பட்டன.

3

பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது புலியதள் அழல்நாகம்தங்க மங்கையைப் பாகம துடையவர் தழல்புரை திருமேனிக்கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத் துறைதரு கற்பகத்தைஎங்கு மேத்திநின் றின்புறும் அடியரை இடும்பைவந் தடையாவே.
சொற்பிரிப்பு
பொங்கு நற்சரி உரியது போர்ப்பது புலி அதளழல் நாகம்தங்க மங்கையைப் பாகம் அதுடையவர் தழல்புரை திருமேனிக்கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தைஎங்கும் ஏத்தி நின்று இன்பு உறும் அடியரை இடும்பை வந்து அடையாவே.
உரை

கடிக்குளத்து எழுந்தருளும் கற்பகத்தை எவ்விடத்தும் வழிபட்டு இன்பத்தை அடையும் அடியார்களை இடும்பைகள் வந்து அடையமாட்டா.

4

நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத் தொத்தினை நிகரில்லாப்பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தைப் பசும்பொனை விசும்பாரும்கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகந்தன்னைச்சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை தேய்வது திணமே.
சொற்பிரிப்பு
நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத் தொத்தினைநிகர் இல்லாப்பார்கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தைப் பசும்பொனை விசும்பாரும்கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்துறையுங் கற்பகம் தன்னைச்சீர்கொள் செல்வங்கள் ஏத்தவல்லார் வினை தேய்வது திண்ணமே.
உரை

திருக்கடிக்குளத்தில் எழுந்தருளும் கற்பகத்தின் செல்வங்களைப் புகழ வல்லவருடைய வினைகள் தேய்ந்தொழிவது உறுதி. செல்வங்கள்- அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம் (சித்தியார் 89).

5

சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு துன்னிய தழல்நாகம்அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல கொண்டடி யவர்போற்றக்கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத் துறைதரு கற்பகத்தைவிரும்பு வேட்கையோ டுளமகிழ்ந் துரைப்பவர் விதியுடை யவர்தாமே.
சொற்பிரிப்பு
சுரும்புசேர் சடைமுடியினன் மதியொடு துன்னிய தழல் நாகம்அரும்பு தாதவிழ்ந்து அலர்ந்தன மலர்பல கொண்டடியவர் போற்றக்கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத்துறை தருகற்பகத்தைவிரும்பு வேட்கையோடு உளமகிழ்ந்து உரைப்பவர் விதியுடையவர் தாமே.
உரை

அரும்புகள் தாது அவிழ்ந்து விரிந்த பல மலர்களைக் கொண்டு அடியவர்கள் வழிபடக் கடிக்குளத்து எழுந்தருளும் கற்பகம். கரும்புகளும் மேக மண்டலத்தை அளாவிய கொடிகளும் பின்னிய கடிக்குளம். மனமகிழ்ந்து தோத்திரம் சொல்லும் அடியவர்கள் செல்வமுடையவராவார்கள். விதி-செல்வம்.

6

மாதி லங்கிய பாகத்தன் மதியமொ டலைபுனல் அழல்நாகம்போதி லங்கிய கொன்றையும் மத்தமும் புரிசடைக் கழகாகக்காதி லங்கிய குழையினன் கடிக்குளத் துறைதரு கற்பகத்தின்பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை பற்றறக் கெடுமன்றே.
சொற்பிரிப்பு
மாதிலங்கிய பாகத்தன் மதியமொடு அலைபுனல் அழல் நாகம்போதிலங்கிய கொன்றையும் மத்தமும் புரிசடைக்கு அழகாகக்காதிலங்கிய குழையினன் கடிக்குளத்துறை தருகற்பகத்தின்பாதம் கைதொழுது ஏத்தவல்லார் வினை பற்றறக் கெடுமன்றே.
உரை

கற்பகத்தின் திருவடியைக் கைகூப்பித் தொழவல்லவர் வினைகள் முழுதும் கெட்டொழியும்.

7

குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் குழாம்பல குளிர்பொய்கைஉலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும் பூவைசே ருங்கூந்தல்கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத் துறையுங்கற் பகத்தைச்சீர்நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை நிற்ககில் லாதானே.
சொற்பிரிப்பு
குலவு கோலத்த கொடி நெடுமாடங்கள் குழாம் பலகுளிர் பொய்கைஉலவு புள்ளின மன்னங்களால் இடும்பூவை சேரும் கூந்தல்கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும் கற்பகத்தைச்சீர்நிலவி நின்று நின்று ஏத்துவார் மேல்வினை நிற்ககில்லாதானே.
உரை

பூவைசேரும் கூந்தற்கலவையென்பது வாமபாகத்தைக் குறித்தது. கற்பகத்தை ஏத்துவார்பால் வினைகள் நிற்கமாட்டா.

8

மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேல் மதியிலா மையிலோடிஎடுத்த லும்முடி தோள்கரம் நெரிந்திற இறையவன் விரலூன்றக்கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக் கடிக்குளந் தனில்மேவிக்கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார் குணமுடை யவர்தாமே.
சொற்பிரிப்பு
மடுத்த வாளரக்கன் அவன்மலை தன்மேல் மதி இலாமையில் ஓடிஎடுத்தலும் முடிதோள் கரநெரிந்திற இறையவன் விரல் ஊன்றக்கடுத்து வாயொடு கையெடுத்து அலறிடக் கடிக்குளம் தனில்மேவிக்கொடுத்த பேரருட் கூத்தனை ஏத்துவார் குணம் உடையவர்தாமே.
உரை

மடுத்த- (பகைவர் உடம்பின்) உட்புகுத்திய. இரு- முரிய. அருட்கூத்தன்- ஞானநாடகமாடும்பிரான். குணம் - எண்குணம்.

9

நீரி னார்கடல் துயின்றவன் அயனொடு நிகழடி முடிகாணார்பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர் பவளத்தின் படியாகிக்காரி னார்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தின்றன்சீரினார்கழல் ஏத்தவல் லார்களைத் தீவினை யடையாவே.
சொற்பிரிப்பு
நீரினார் கடல் துயின்றவன் அயனொடு நிகழ் அடிமுடி காணார்பாரினார் விசும்புறப் பரந்து எழுந்ததோர் பவளத்தின் படியாகிக்காரினார் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தின்றன்சீரினார் கழல் ஏத்த வல்லார்களைத் தீவினை அடையாவே.
உரை

கடல் துயின்றவன் - பாற்கடலில் யோக நித்திரை செய்யும் திருமால். விசும்பு - ஆகாயம். படி -உருவம். கற்பகத்தின் கழல் ஏத்தவல்லவர்களுக்கு வினை இல்லை.

10

குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங் குறியினில் நெறிநில்லாமிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக் கொள்ளன்மின் விடமுண்டகண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத் துறைதரும் எம்மீசர்தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள் தூநெறி யெளிதாமே.
சொற்பிரிப்பு
குண்டர் தம்மொடு சாக்கியர் சமணரும் குறியினில் நெறிநில்லாமிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்எனக் கொள்ளன்மின் விடம் உண்டகண்டர் முண்ட நன்மேனியர் கடிக்குளத்துறை தரும் எம் ஈசர்தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள் தூநெறி எளிதாமே.
உரை

குறி- குறிக்கோள். தொண்டர் தொண்டர்- தொண்டர்க்குத் தொண்டர். தூநெறி-திருநெறி,சிவநெறி.

11

தனம லிபுகழ் தயங்குபூந் தராயவர் மன்னன்நற் சம்பந்தன்மனம லிபுகழ் வண்தமிழ் மாலைகள் மாலதாய் மகிழ்வோடும்கனம லிகட லோதம்வந் துலவிய கடிக்குளத் தமர்வானைஇனம லிந்திசை பாடவல் லார்கள்போ யிறைவனோ டுறைவாரே.
சொற்பிரிப்பு
தனமலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நற்சம்பந்தன்மனமலி புகழ்வண் தமிழ்மாலைகள் மாலதாய் மகிழ்வோடும்கனமலி கடலோதம் வந்துலவிய கடிக்குளத்து அமர்வானைஇனமலிந் திசை பாடவல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே.சுவாமி : கற்பகநாதர்;அம்பாள் : சௌந்திரநாயகி.
உரை

செல்வமும் மிக்க புகழும். மாலது- அன்பு. கனம்- மேகம். இனம்- அடியார் கூட்டம்.

திருச்சிற்றம்பலம்