1
சொற்பிரிப்பு
உரை
அன்னப்பறவையின் நடைபோல மெல்லிய நடையுடைய உமாதேவியார். அடியவர் வினையொடும் பொருந்தார். இத்திருப்பதிகம் முழுதும் பாராயணம் புரிவாரது வினைதீர்க்கும் உண்மையை அனுபவித்துணர்க.
திருச்சிற்றம்பலம்
அன்னப்பறவையின் நடைபோல மெல்லிய நடையுடைய உமாதேவியார். அடியவர் வினையொடும் பொருந்தார். இத்திருப்பதிகம் முழுதும் பாராயணம் புரிவாரது வினைதீர்க்கும் உண்மையை அனுபவித்துணர்க.
சால - அமைய, சங்கரன்- சுகத்தைச் செய்பவன், நித்தியசுகம். பேரின்ப வடிவினனாகிய பரமசிவன் தன் அடி அடைந்தவர்க்குத் தனது பேரின்பவடிவினை அருள்கின்றான் (முத்தி நிச்சயப் பேருரை, பக். 74, 177).
மானம்- பெருமை, வலி, பார்த்தன் அர்ச்சுனன், புருதையின் புதல்வன் என்னும் பொருளது. மதித்து - அறிந்து. கானத்தே திரிவேடன்- வனசரன். அமர் - விரும்பிச் செய்யும் போர். பகைத்துச் செய்யும் போரன்று. களிப்பு மிகுதி குறிக்கின்றுழி. 'அமர்க்களம்' என்பது உலகவழக்கு.
முனிவர் உயிரை அறிந்து கொள்ளவந்த அக்கூற்றுவனை 'பெறுமவற்றுள் யாமறிவதில்லை' (குறள்) என்பதில் பரிமேலழகர் மதிப்பது என்றுரைத்தார். உண்மை அடியவர்க்குத் திருவடி வேட்கையும், சதாகால தியானமும் இன்றியமையாதவை. துயர்ப்பிணக்கு - துயரத்தைத் தரும் மாறுபாடு.
வேள்வித்தலைவன்- இயமானன். 'இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்டமூர்த்தியாகி' (அப்பர்) சிவனை நினையாத உயிர்கள் அவ்வெட்டுருவங்களுள் சிறந்த ஒன்று ஆமோ? கோட்டாறு- கோணிய கோட்டாற்றுக் கொச்சை (தி. 2 ப. 70 பா. 2). 'கோட்டாறு சூழ் கொச்சை' (தி. 3 ப. 89 பா. 1.)
யுகாந்த காலத்தில் வெள்ளம் உலகங்களை மூடி அழிக்கும்போது தேவர்கள் சிவபெருமானைச் சரண் புகுந்தனர் என்பது வரலாறு. ஓட்டந்து - ஓட்டம் தந்து. ஆழி -அருட்கடல். அந்தரம் - வானம். இன்பன் - ஆனந்தரூபன். மாநகர் - பெருங்கோயில்.
பேய்கள் பாடவும் பூதங்கள் துதிக்கவும் காளி நாணவும் மகாதாண்டவம் ஆடிய ஞான சொரூபர். சாய்கள் - புகழ்கள். 'இந்திரன்தன் சாயாப் பெருஞ்சாய் கெடத் தாம்புகளால் தடந்தோள் போய் ஆர்த்தவன்' (கம்ப. யுத்த. நாக 21). 'தாய்களாயினார் பல்லுயிர்க்கும் - (தாயவன் காண் உலகிற்கு) (அப்பர்) பல்லுயிர்க்கும் தாய்களாயினார் தமை என்று மாற்றிக் கூட்டிச் சிவபெருமானை எனப் பொருளுரைக்க.
நெரியக் கழலடியை வைத்து என்க. புலன்கள் - வயல்கள். கள்தேனுமாம். மன்றில் தென்றல் புகுந்து என மாற்றுக. குலம் - கூட்டம். மா- பெருமை.
பண்டு கண்டது காண்டல்- புதிதாக ஒன்றும் காணாமை. அறியுந்தோறும் அறியாமை காண்பது புதுக்காட்சி. அறியாமை விலகாதிருப்பதே பண்டு கண்டது காண்டலாகும்.
மேதிகள் கரும்பை முறித்துத் தின்று குளத்தில் மூழ்க வாளை கலங்கிப் பாயும் வயல். ஆவி- குளம் . வெறித்து - கலங்கி, அஞ்சி.
பரசுபாணி - மழுவேந்தியகையன். பத்தர்கள் அத்தன் -மெய்யன்புடையார்க்கு இறைவன். அத்தன் - கையகப்படுவோன் எனலுமாம். அக்கு -எலும்பு.
திருச்சிற்றம்பலம்