திருமுறை 10 · 10.09.27 · 22

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

மலமில்லை மாசில்லை மானாபி மானம்குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லைநலமில்லை நந்தியை ஞானத்தி னாலேபலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே.

3

ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும்சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொருகோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே.

4

ஆராலும் என்னை அமட்டஒண் ணாதினிச்சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன்சீராடி அங்கே திரிவதல் லால் இனியார்பாடுஞ் சாரா அறிவறிந் தேனே.

5

பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையைஅரிந்தேன் வினையை அயில்மன வாளால்முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.

6

சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன்அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்சிந்தையின் மேவித் தியக்கு அறுத் தானே.

7

பண்டுஎங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக்கண்டுஅங்கு இருக்கும் கருத்தறி வாரில்லைவிண்டு அங்கே தோன்றி வெறுமனம் ஆயிடில்துண்டு அங்கு இருந்ததோர் தூறுஅது வாமே.

8

அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லதுஅன்னையும் அத்தனும் ஆரறி வார்என்னைஅன்னையும் அத்தனும் யானும் உடனிருந்துஅன்னையும் அத்தனை யான்புரந் தேனே.

9

கொண்ட சுழியும் குலவரை உச்சியும்அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்துளேஉண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே.

10

நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்தவம்வரும் சிந்தைக்குத் தான்எதிராமே.

11

சித்தம் சிவமாய் மலமூன்றும் செற்றவர்சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம்கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார்சத்தம் பரவிந்து தானாம்என்று எண்ணியே.

12

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்வினைப்பற்று அறுக்கும் விமலனைத் தேடிநினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.

13

சிவபெரு மான்என்று நான்அழைத்து ஏத்தத்தவப்பெரு மான்என்று தான்வந்து நின்றான்அவபெரு மான்என்னை யாளுடை நாதன்பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.

14

பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டேன்அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே.

15

என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்துமுன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதிபின்னம்செய்து என்னைப் பிணக்கறுத் தானே.

16

பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத்து எண்ணும்கணக்கறுத் தாண்டனன் காண்நந்தி என்னைப்பிணக்கறுத்து என்னுடன் முன்வந்த துன்பம்வணக்கலுற் றேன்சிவம் வந்தது தானே.

17

சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டுஅவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே.

18

கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே.

19

உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்கைவளம் இன்றிக் கருக்கடந் தேனே.

20

மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்றுதூண்டா விளக்கின் தகளிநெய் சோர்தலும்பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணிமாண்டான் ஒருவன்கை வந்தது தானே.

21

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்என்பொன் மணியை இறைவனை ஈசனைத்தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.

22

மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்மனம்வி ரிந்து குவிந்தது வாயுமனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே.