திருமுறை 10 · 10.09.28 · 43

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

மாயனை நாடி மனநெடும் தேரேறிப்போயின நாடறி யாதே புலம்புவர்தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக்காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல்இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில்முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்பன்னினர் என்றே பாடறி வீரே.

3

முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றைஎத்தனை வானோரும் ஏத்தும் இறைவனைஅத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர்பித்தன் இவனென்று பேசுகின் றாரே.

4

புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்திபுகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம்புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே.

5

பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படுநீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே.

6

நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனைஏமம் ஓர் ஆயிரத் துள்ளே இசைவீர்கள்ஓமம்ஓர் ஆயிரம் ஓதவல் லார்அவர்காமம் ஓர் ஆயிரம் கண்டொழிந் தாரே.

7

நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியைஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்வானோர் உலகம் வழிபட மீண்டபின்தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.

8

வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்சுந்தர மாதர் துழனியொன்று அல்லதுஅந்தர வானத்தின் அப்புறம் ஆமே.

9

மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்எண்ணிற் கலங்கி இறைவன் இவன்எனார்உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே.

10

மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே.

11

அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்சமைந் தொழிந் தேன்தடு மாற்றம்ஒன் றில்லைபுகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணிவகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே.

12

வள்ளல் தலைவனை வானநன் னாடனைவெள்ளப் புனற்சடை வேதமுதல்வனைக்கள்ளப் பெருமக்கள் காண்பர்கொலோஎன்றுஉள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து ஆளுமே.

13

ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளைநாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்வாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே.

14

விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே.

15

வானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில்தானகம் இல்லாத் தனியாகும் போதகன்கானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளுறும்பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.

16

விதியது மேலை அமரர் உறையும்பதியது பாய்புனல் கங்கையும் உண்டுதுதியது தொல்வினைப் பற்றறு விக்கும்பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே.

17

மேலது வானவர் கீழது மாதவர்தானிடர் மானுடர் கீழது மாதனங்கானது கூவிள மாலை கமழ்சடைஆனது செய்யும்எம் ஆருயிர் தானே.

18

சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனைஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலியாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்வாழும் எழுத்தைந்து மன்னனும் ஆமே.

19

உலகமது ஒத்துமண் ஒத்து உயர் காற்றைஅலர்கதிர் அங்கிஒத்து ஆதிப் பிரானும்நிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச்செலவுஒத்து அமர்திகைத் தேவர் பி ரானே.

20

பரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன்பரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன்பரிசறிந்து அங்குளன் மாமதி ஞானப்பரிசறிந்து அந்நிலம் பாரிக்குமாறே.

21

அந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும்பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள்தந்த உலகெங்கும் தானே பாராபரன்வந்து படைக்கின்ற மாண்பது வாமே.

22

முத்தண்ட ஈரண்ட மேமுடி ஆயினும்அத்தன் உருவம் உலகுஏ ழெனப்படும்அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடிமத்தர் அதனை மகிழ்ந்துஉண ராரே.

23

ஆதிப் பிரான்நம் பிரான்அவ் அகலிடச்சோதிப் பிரான்சுடர் மூன்றுஒளி யாய்நிற்கும்ஆதிப் பிரான்அண்டத்து அப்புறம் கீழவன்ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.

24

அண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன்பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன்தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும்தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே.

25

உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழநிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன்பலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னேபுலம்முழு பொன்னிற மாகிநின் றானே.

26

பராபர னாகிப் பல்லூழிகள் தோறும்பராபர னாய்இவ் அகலிடம் தாங்கித்தராபர னாய்நின்ற தன்மை யுணரார்நிராபர னாகி நிறைந்துநின் றானே.

27

போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லைஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்வேற்றுடல் தானேன்றதுபெருந் தெய்வமாம்காற்றது ஈசன் கலந்து நின்றானே.

28

திகையனைத் தும்சிவ னேஅவ னாகின்மிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரேபுகையனைத் தும்புறம் அங்கியிற் கூடுமுகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே.

29

அகன்றான் அகலிடம் ஏழும்ஒன்றாகிஇவன்தான் எனநின்று எளியனும் அல்லன்சிவன்தான் பலபல சீவனு மாகிநவின்றான் உலகுறு நம்பனும் ஆமே.

30

கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்றதலைவனனை நாடுமின் தத்துவ நாதன்விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்பஉரையில்லை உள்ளுறும் உள்ளவன் தானே.

31

படிகால் பிரமன்செய் பாசம் அறுத்துநெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச்செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கிஅடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே.

32

ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கினஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலிதேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்வாச மலர்போல் மருவி நின் றானே.

33

இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்இறைநல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணிசொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே.

34

உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்அள்ளற் கடலை அறுத்துநின் றானே.

35

மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே.

36

விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்எண்ணில் ஆ னந்தமும் எங்கள் பிரானே.

37

உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல்நித்திலச் சோதியன் நீலக் கருமையன்எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.

38

நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்புறம்பல காணினும் போற்றகி லாரே.

39

இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறுஎங்குநின் றான்மழை போல்இறை தானே.

40

உணர்வது வாயுமே உத்தம மாயும்உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப்புணர்வது வாயும் புல்லிய தாயும்உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே.

41

தன்வலி யால்உல கேழும் தரித்தவன்தன்வலி யாலே அணுவினும் தான்நொய்யன்தன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான்தன்வலி யாலே தடம்கட லாமே.

42

ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறைஊனே சிறுமையுள் உட்கலந்து அங்குளன்வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்தானே அறியும் தவத்தின் அளவே.

43

பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக்குண்டாலம் காய்த்துக் குதிரை பழுத்ததுஉண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்பிண்டத்துஉட் பட்டுப் பிணங்குகின்றார்களே.