திருமுறை 10 · 10.09.19 · 12

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

பரம குரவன் பரம்எங்கு மாகித்திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்றுநிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம்அரிய துரியத்து அணைந்துநின் றானே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

குலைக்கின்ற நீரின் குவலய நீரும்அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம்நிலத்திடை வானிடை நீண்டகன் றானைவரைந்து வலம்செயு மாறுஅறி யேனே.

3

அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்எங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர்தங்கிநின் றான்தனிநாயகன் எம்இறைபொங்கிநின் றான்புவ னாபதி தானே.

4

சமயச் சுவடும் தனையறி யாமல்கமையற்ற காமாதி காரணம் எட்டும்திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர்அமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே.

5

மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல்உருஆயது வேறாம் அதுபோல் அணுப்பரன்சேய சிவமுத் துரியத்துச் சீர்பெறஏயும் நெறியென்று இறைநூல் இயம்புமே.

6

உருவன்றி யேநின்று உருவம் புணர்க்கும்கருவன்றி யேநின்று தான்கரு வாகும்மருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே.

7

உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதிஉருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே.

8

பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப்பரஞ்சோதி என்னுள் படிந்ததன் பின்னைப்பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே.

9

சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கிஅரியன உற்பலம் ஆமாறு போலமருவிய சத்தியாதி நான்கும் மதித்தசொரூபக்குரவன் சுகோதயத் தானே.

10

உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தன்கரையற்ற சத்தியாதி காணில் அகாரமருவுற்று உகாரம் மகாரம தாகஉரையற்ற கா (தா)ரத்தில் உள்ளொளி யாமே.

11

தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்துமுலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்துகலைநின்ற கள்வனில் கண்டுகொண் டேனே.

12

ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள்போமாறு அறிந்தேன் புகுமாறும் ஈதென்றேஏமாப்ப தில்லை இனியோர் இடமில்லைநாமாம் முதல்வனும் நான்என லாமே.