திருமுறை 10 · 10.09.20 · 6

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியிலென்மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்வித்தக நந்தி விதிவழி யல்லதுதத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லைகோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்றுநான்முன்னம் செய்ததே நன்னில மானதே.

3

ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதேகூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லைநீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்பேறிட்டுஎன் உள்ளம் பிரியகி லாவே.

4

வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலென்கான்நின்ற செந்தீக் கலந்துடன் வேகில்என்தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென்நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே.

5

ஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென்கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்தஞானத்து உழவினை நான்உழு வேனே.

6

கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்நாடு கெடினும் நமர்கெடு வாரில்லைவீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்பாடது நந்தி பரிசறி வார்க்கே.