திருமுறை 10 · 10.09.13 · 10

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.
சொற்பிரிப்பு
தெற்கு வடக்குக் கிழக்கு மேற்கு உச்சியில்அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்ஒப்பில் பேரின்பத்து உபய உபயத்துள்தற்பரன் நின்று தனி நடம் செய்யுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

அடியார் அரனடி ஆனந்தம் கண்டோர்அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர்அடி ஆர்பவரே அடியவர் ஆமால்அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே.
சொற்பிரிப்பு
அடியார் அரனடி ஆனந்தம் கண்டோர்அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர்அடி ஆர்பவரே அடியவர் ஆமால்அடியார் பொன் அம்பலத்து ஆடல் கண்டாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

அடங்காத என்னை அடக்கி அடிவைத்துஇடம்காண் பரானந்தத் தேஎன்னை இட்டுநடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன்படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே.
சொற்பிரிப்பு
அடங்காத என்னை அடக்கி அடி வைத்துஇடம் காண் பரானந்தத்தே என்னை இட்டுநடந்தான் செயும் நந்தி நன் ஞானக் கூத்தன்படம் தான் செய்து உள்ளுள் படிந்திருந்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனைஇன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே.
சொற்பிரிப்பு
உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனைஇன்புற நாடி என் அன்பில் வைத்தேனே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனைஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே.
சொற்பிரிப்பு
மாணிக்கக் கூத்தனை வண் தில்லைக் கூத்தனைப்பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனைஆணிப் பொற் கூத்தனை யார் உரைப்பாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும்தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே.
சொற்பிரிப்பு
விம்மும் வெருவும் விழும் எழும் மெய் சோரும்தம்மையும் தாமறியார்கள் சதுர் கெடும்செம்மை சிறந்த திருஅம்பலக் கூத்துள்அம்மலர்ப் பொற்பாதத்து அன்பு வைப்பார்கட்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்தநாட்ட முறுக்குறும் நாடகங் காணவே.
சொற்பிரிப்பு
தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்வாட்டறும் கால் புந்தியாகி வரும்புலன்ஓட்டறும் ஆசை அறும் உளத்து ஆனந்தநாட்ட முறுக்குறும் நாடகங் காணவே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக்கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடிநீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடிநாளுற அம்பலத் தேயாடும் நாதனே.
சொற்பிரிப்பு
காளியோடு ஆடிக் கனகாசலத்து ஆடிக்கூளியோடு ஆடிக் குவலயத்தே ஆடிநீடிய நீர் தீ கால் நீள்வான் இடையாடிநாளுற அம்பலத்தே ஆடும் நாதனே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலைகூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடுஏறும் சுழுனை இவைசிவ பூமியே.
சொற்பிரிப்பு
மேரு நடு நாடி மிக்கிடை பிங்கலைகூரும் இவ் வானின் இலங்கைக் குறியுறும்சாரும் திலை வனத் தண் மாமலயத்து ஊடுஏறும் சுழுனை இவை சிவ பூமியே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

பூதல மேருப் புறத்தான தெக்கணம்ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம்பாதி மதியோன் பயில்திரு அம்பலம்ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே.
சொற்பிரிப்பு
பூதல மேருப் புறத்தான தெக்கணம்ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனையாம்பாதி மதியோன் பயில் திரு அம்பலம்ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்