திருமுறை 10 · 10.09.14 · 13

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்தெண்டினில் சத்தி திருஅம் பலமாகக்கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.
சொற்பிரிப்பு
அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்பண்டை ஆகாசங்கள் ஐந்தும் பதியாகத்தெண்டினில் சத்தி திருஅம்பலமாகக்கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்துபுரானந்த போகனாய்ப் பூவையும் தானும்நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே.
சொற்பிரிப்பு
குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்துபுரானந்த போகனாய்ப் பூவையும் தானும்நிரானந்தமாகி நிருத்தஞ் செய்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

ஆதி பரன்ஆட அங்கைக் கனலாடஓதும் சடையாட உன்மத்த முற்றாடப்பாதி மதியாடப் பாரண்ட மீதாடநாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே.
சொற்பிரிப்பு
ஆதி பரன் ஆட அங்கைக் கனலாடஓதும் சடையாட உன்மத்த முற்றாடப்பாதி மதியாடப் பாரண்ட மீதாடநாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

கும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம்அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால்உம்பரம் மோனஞா னந்தத்தில் உண்மையே.
சொற்பிரிப்பு
கும்பிட அம்பலத்து ஆடிய கோன் நடம்அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால்உம்பரம் மோன ஞானந்தத்தில் உண்மையே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழுசாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டுநாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம்பாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே.
சொற்பிரிப்பு
மேதினி மூவேழ் மிகும் அண்டம் ஓரேழுசாதகமாகும் சமயங்கள் நூற்றெட்டுநாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம்பாதியோடு ஆடிடும் பரன் இரு பாதமே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

இடைபிங் கலைஇம வானோடு இலங்கைநடுநின்ற மேரு நடுவாம் சுழுனைகடவும் திலைவனம் கைகண்ட மூலம்படர்வொன்றி என்ற பரமாம் பரமே.
சொற்பிரிப்பு
இடை பிங்கலை இமவானோடு இலங்கைநடுநின்ற மேரு நடுவாம் சுழுனைகடவும் திலைவனம் கைகண்ட மூலம்படர்வொன்றி என்ற பரமாம் பரமே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

ஈறான கன்னி குமரியே காவிரிவேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள்பேறான வேதா கமமே பிறத்தலான்மாறாத தென்திசை வையகம் சுத்தமே.
சொற்பிரிப்பு
ஈறான கன்னி குமரியே காவிரிவேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்பு ஏழுள்பேறான வேதாகமமே பிறத்தலான்மாறாத தென்திசை வையகம் சுத்தமே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

நாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடிவேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடிபோதத்தில் ஆடிப் புவனம் முழுதாடும்தீதற்ற தேவாதி தேவர் பிரானே.
சொற்பிரிப்பு
நாதத்தினில் ஆடி நாற்பதத்தே ஆடிவேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடிபோதத்தில் ஆடிப் புவனம் முழுதாடும்தீதற்ற தேவாதி தேவர் பிரானே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடிமூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப்பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக்கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே.
சொற்பிரிப்பு
தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடிமூவரோடு ஆடி முனிசனத்தோடு ஆடிப்பாவினுள் ஆடிப் பராசத்தியில் ஆடிக்கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

ஆறு முகத்தில் அதிபதி நான்என்றும்கூறு சமயக் குருபரன் நானென்றும்தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளேவேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே.
சொற்பிரிப்பு
ஆறு முகத்தில் அதிபதி நான் என்றும்கூறு சமயக் குருபரன் நான் என்றும்தேறினர் தெற்குத் திருஅம்பலத்துளேவேறின்றி அண்ணல் விளங்கி நின்றானே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

அம்பலம் ஆடரங் காக அதன்மீதேஎம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளிஉம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள்தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே.
சொற்பிரிப்பு
அம்பலம் ஆடு அரங்காக அதன் மீதேஎம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளிஉம்பரமாம் ஐந்து நாதத்து ரேகையுள்தம்பதமாய் நின்று தான் வந்தருளுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

12

ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும்பாடிய பாட்டும் பலவான நட்டமும்கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே.
சொற்பிரிப்பு
ஆடிய காலும் அதிற் சிலம்பு ஓசையும்பாடிய பாட்டும் பலவான நட்டமும்கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்தேடி உளேகண்டு தீர்ந்தற்றவாறே.
உரை

உரை எழுதப்படவில்லை

13

இருதயம் தன்னில் எழுந்த பிராணன்கரசர ணாதி கலக்கும் படியேஅரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்குரவனாய் எங்கணும் கூத்துகந் தானே.
சொற்பிரிப்பு
இருதயம் தன்னில் எழுந்த பிராணன்கரசரணாதி கலக்கும் படியேஅரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்குரவனாய் எங்கணும் கூத்து உகந்தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்