திருமுறை 10 · 10.09.11 · 8

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்குஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே.
சொற்பிரிப்பு
தான் அந்தம் இல்லாச் சதானந்த சத்தி மேல்தேன் உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்குஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்ஆனந்தம் ஆக அகில சராசரம்ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே.
சொற்பிரிப்பு
ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்ஆனந்தம் ஆக அகில சராசரம்ஆனந்தம் ஆனந்தக் கூத்து உகந்தானுக்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்அளியார் சிவகாமி யாகும் சமயக்களியார் பரமும் கருத்துறை யந்தக்தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.
சொற்பிரிப்பு
ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்அளியார் சிவகாமியாகும் சமயக்களியார் பரமும் கருத்துறை யந்தக்தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

ஆன நடம்ஐந்து அகள சகளத்தர்ஆன நடமாடி ஐங்கரு மத்தாகம்ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தேதேன்மொழி பாகன் திருநட மாடுமே.
சொற்பிரிப்பு
ஆன நடம் ஐந்து அகள சகளத்தர்ஆன நடமாடி ஐங்கருமத்து ஆகம்ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தேதேன்மொழி பாகன் திருநடமாடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்டமூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்டதாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்துஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே.
சொற்பிரிப்பு
பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்டமூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்டதாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்துஏகாந்தமாம் பிரமாண்டத்த என்பவே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்பூதங்கள் ஆடப் புவனம் முழுதாடநாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே.
சொற்பிரிப்பு
வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆடக்கீதங்கள் ஆடக் கிளர் அண்டம் ஏழாடப்பூதங்கள் ஆடப் புவனம் முழுதாடநாதம் கொண்டு ஆடினான் ஞானாந்தக் கூத்தே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில்ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப்போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே.
சொற்பிரிப்பு
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன் ஐந்தில்வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமந் தன்னில்ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப்போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

தேவர் அசுரர்நரர் சித்தர்வித் தியாதரர்மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்தாபதர் சத்தர் சமயம் சராசரம்யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே.
சொற்பிரிப்பு
தேவர் அசுரர் நரர் சித்தர் வித்தியாதரர்மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்தாபதர் சத்தர் சமயம் சராசரம்யாவையும் ஆடிடும் எம்மிறை ஆடவே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்