திருமுறை 10 · 10.09.02 · 18

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதிஅரிய பரசிவம் யாவையும் ஆகிவிரிவு குவிவற விட்ட நிலத்தேபெரிய குருபதம் பேசஒண் ணாதே.

3

ஆயன நந்தி அடிக்குஎன்தலைபெற்றேன்வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே.

4

கருடன் உருவம் கருதும் அளவில்பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல்குருவின் உருவம் குறித்த அப் போதேதிரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே.

5

தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்மான்ற அறிவு மறிநன வாதிகள்மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றறஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.

6

சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக்கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்பந்தம் இலாத பளிங்கின் உருவினள்பந்தம் அறுத்த பரம்குரு பற்றே.

7

மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழநிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச்சினம்புகுந் தான்திசை எட்டும்நடுங்கவனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே.

8

தானான வண்ணமும் கோசமும் சார்தரும்தானாம் பறவை வனமெனத் தக்கனதானான சோடச மார்க்கந்தான் நின்றிடில்தானாம் தசாங்கமும் வேறுள்ள தானே.

9

மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்திஉருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும்கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்குஅருவினை கண்சோரும் அழிவார் அகத்தே.

10

தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னைப்பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டுநிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்தலைப்பட லாகும் தருமமும் தானே.

11

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே.

12

தலைப்படும் காலத்துத் தத்துவம் தன்னைவிலக்குறின் மேலை விதியென்றும் கொள்கஅனைத்துஉல காய் நின்ற ஆதிப் பிரானைநினைப்புறு வார்பத்தி நேடிக் கொள்வாரே.

13

நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கிநிகழ்வுஒழிந் தார்எம் பிரானொடும் கூடித்திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளேபுகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.

14

வந்த மரகத மாணிக்க ரேகைபோல்சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம்இந்த இரேகை இலாடத்தின் மூலத்தேசுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே.

15

உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்கண்ணுமா யோகக் கடவுள் இருப்பதுமண்ணு நீரனல் காலொடு வானுமாய்விண்ணு மின்றி வெளியானோர் மேனியே.

16

பரசு பதியென்று பார்முழு தெல்லாம்பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்குஉரிய பதியும்பா ராக்கி நின்றானே.

17

அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில்தம்பர மல்லது தாமறியோம் என்பர்உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே.

18

கோவணங் கும்படி கோவண மாகிப்பின்நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே.