திருமுறை 10 · 10.09.01 · 7

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

பலியும் அவியும் பரந்து புகையும்ஒலியும் எம் ஈசன் தனக்கென்றே உள்கிக்குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லைஅவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும்அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.

3

நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடிதேட அரியன் சிறப்பிலி எம்இறைஓடும் உலகுயிர் ஆகிநின் றானே.

4

இயம்புவன் ஆசனத் தோடு மலையும்இயம்புவன் சித்தக் குகையும் இடமும்இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே.

5

முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சிஅகம்பர மாதனம் எண்எண் கிரியைசிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே.

6

அகமுக மாம்பீடம் ஆதார மாகும்சகமுக மாம்சத்தி யாதன மாகும்செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும்அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.

7

மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியேதூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே.