திருமுறை 10 · 10.08.26 · 7

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம்தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவேநிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின்சொற்பத மாகும் தொந்தத் தசியே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதிதொந்தத் தசிமூன்றில் தொல்தா மதமாதிவந்த மலம்குணம் மாளச் சிவம்தோன்றின்இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே.

3

தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியேஅந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டுஅந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்துஉந்து முறையில் சிவமுன்வைத்து ஓதிடே.

4

வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்துஉய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தைமெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்துஅத்தற்கு அடிமை அடைந்துநின் றானே.

5

தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம்உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே.

6

ஆகிய அச்சோயம் தேவதத் தன்இடத்துஆகிய வைவிட்டால் காயம் உபாதானம்ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறிவுஆகிய சீவன் பரசிவன் ஆமே.

7

தாமதம் காமியம் ஆகித் தகுகுணமாமலம் மூன்றும் அகார உகாரத்தோடுஆம்அறும் மவ்வும் அவ் வாய்உடல் மூன்றில்தாமாம் துரியமும் தொந்தத் தசியதே.