1
வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்ஓதத் தகும்எட்டு யோகாந்த அந்தமும்ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே.
சொற்பிரிப்பு

உரை
2
அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்அந்தம்ஒர் ஆறும் அறிவார் அமலத்தர்அந்தம்ஓர் ஆறும் அறியார் அவர்தமக்குஅந்தமோடு ஆதி அறியஒண் ணாதே.

3
தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்ஆனாத் துரியத்து அணுவன் தனைக்கண்டுதேனார் பராபரம் சேர்சிவ யோகமாய்ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே.

4
நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம்சத்தம் முதல்ஐந்தும் தத்துவத் தால்நீங்கிச்சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்துஅத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே.

5
மேவும் பிரமனே விண்டு உருத்திரன்மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால்மேவும் பரவிந்து நாதம் விடாஆறாறுஓவும் பொழுதுஅணு ஒன்றுஉள தாமே.

6
உள்ள உயிர்ஆறாற தாகும் உபாதியைத்தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்உள்ள இருள்நீங்க ஓர்iஉணர் வாகுமேல்எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே.

7
தேடும் இயம நியமாதி சென்றகன்றுஊடும் சமாதியில் உற்றுப் பரசிவன்1பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.பா-ம் : 1 படர் சிவன்
சொற்பிரிப்பு
தேடும் இயம நியமாதி சென்றகன்றுஊடும் சமாதியில் உற்றுப் பரசிவன்பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.
உரை
8
கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில்விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்குஉள்ளன வாம்விந்து உள்ளே ஒடுங்கலும்தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.

9
தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவேறுஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்குஅளியவ னாகிய மந்திரம் தந்திரம்தெளிஉப தேசஞா னத்தொடுஐந் தாமே.

10
ஆகும் அனாதி கலைஆ கமவேதம்ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்ஆகும் அனாதி உடல்அல்லா மந்திரம்ஆகும் சிவபோ தகம்உப தேசமே.

11
தேசார் சிவமாகும் தன்ஞானத் தின்கலைஆசார நேய மறையும் கலாந்தத்துப்பேசா உரையுணர் வற்ற பெருந்தகைவாசா மகோசர மாநந்தி தானே.

12
தான்அவ னாகும் சமாதி தலைப்படில்ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்ஏனைய போதாந்தம் சித்தாந்த மானதுஞான மெனஞேய ஞாதுரு வாகுமே.

13
ஆறந்த மும்சென்று அடங்கும்அந் நேயத்தேஆறந்த ஞேயம் அடங்கிடு ஞாதுருகூறிய ஞானக் குறியுடன் வீடவேதேறிய மோனம் சிவானந்த உண்மையே.

14
உண்மைக் கலைஆறுஓர் ஐந்தான் அடங்கிடும்உண்மைக் கலாந்தம் இரண்டுஐந்தோடு ஏழ்அந்தம்உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்துஉண்மைக் கலைசொல்ல ஓர்அந்தம் ஆமே.

15
ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்துவீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்கூவி யருளிய கோனைக் கருதுமே.

16
கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்பஅரனுரை செய்தருள் ஆகமந் தன்னில்வருசமயப் புற மாயைமா மாயைஉருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.

17
வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரைபோதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேயநாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும்மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே.

18
வேதாந்தம் தன்னில் உபாதிமேல் ஏழ்விடநாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம்மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன்போதாந்த தற்பதம் போமசி என்பவே.

19
அண்டங்கள் ஏழும் கடந்துஅகன்று அப்பாலும்உண்டென்ற பேரொளிக் குள்ளாம் உளஒளிபண்டுறு நின்ற பராசக்தி என்னவேகொண்டவன் அன்றிநின் றான்எங்கள் கோவே.

20
கோஉணர்த் தும்சத்தி யாலே குறிவைத்துத்தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவேபாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்பஓஅனைத் துண்டுஒழி யாத ஒருவனே.

21
ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார்இருவினை உன்னார் இருமாயை உன்னார்ஒருவனு மேயுள் உணர்ந்திநின் றூட்டிஅருவனு மாகிய ஆதரத் தானே.

22
அரன்அன்பர் தானம தாகிச் சிவத்துவருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டுஉரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும்திரனுறு தோயாச் சிவாநந்தி யாமே.

23
வேதாந்த தொம்பதம் மேவும் பசுஎன்பநாதாந்த பாசம் விடநின்ற நன்பதிபோதாந்த தற்பதம் போய்இரண்டு ஐக்கியம்சாதா ரணம்சிவ சாயுச் சிய மாமே.

24
சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும்சிவமாம் சதாசிவன் செய்துஒன்றானால்நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே.

25
சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலால்சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்திவர்சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.
சொற்பிரிப்பு
சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலால்சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்திவர்சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே
உரை
26
சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும்அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனான்நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம்தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே.

27
தத்துவம் ஆகும் சகள அகளங்கள்தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம்தத்துவ மாம்சிவ சாயுச் சியமே.

28
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளனநாதன் உரையவை நாடில் இரண்டந்தம்பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே.

29
பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம்விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம்பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே.

30
ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம்ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில்ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்னஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே.

31
அன்றாகும் என்னாதுஐ வகைஅந்தம் தன்னைஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டுநின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்மன்றாடி பாதம் மருவலும் ஆமே.

32
அனாதி சீவன்ஐம் மலமற்றுஅப் பாலாய்அனாதி அடக்கித் தனைக்கண்டு அரனாய்த்தன்ஆதி மலம்கெடத் தத்துவா தீதம்வினாவுநீர் பாலாதல் வேதாந்த உண்மையே.

33
உயிரைப் பரனை உயர்சிவன் தன்னைஅயர்வற்று அறிதொந் தத்தசி அதனால்செயலற்று அறிவாகி யும்சென்று அடங்கிஅயர்வற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே.

34
மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்சென்னிய தான சிவோகமாம் ஈதென்னஅன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே.

35
முதலாகும் வேத முழுதுஆ கமமப்பதியான ஈசன் பகர்ந்தது இரண்டுமுதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்துஅதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே.