திருமுறை 10 · 10.08.14 · 14

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லைதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்தன்னை அறியும் அறிவை அறிந்தபின்தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச்சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்றுசங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே.

3

அறிவு வடிவென்று அறியாத என்னைஅறிவு வடிவென்று அருள்செய்தான் நந்திஅறிவு வடிவென்று அருளால் அறிந்தேஅறிவு வடிவென்று அறிந்திருந் தேனே.

4

அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லைஅறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லைஅறிவே அறிவை அறிகின்றது என்றிட்டுஅறைகின் றனமறை ஈறுகள் தாமே.

5

மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்துமுன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும்பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே.

6

அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின்அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம்அறிவுஅறி வாக அணிமாதி சித்திஅறிவுஅறி வாக அறிந்தனன் நந்தியே.

7

அறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம்அறிவுஅறி யாமை யாரும் அறியார்அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால்அறிவுஅறி யாமை அழகிய வாறே.

8

அறிவுஅறி யாமையை நீவி யவனேபொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போதுஅறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின்செறிவாகி நின்றவன் சீவனும் ஆமே.

9

அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவதுஅறிவுடை யார்நெஞ்சு அருந்தவம் ஆவதுஅறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே.

10

மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே.

11

என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாதுஎன்னையிட்டு என்னை உசாவுகின் றானே.

12

மாய விளக்கது நின்று மறைந்திடும்தூய விளக்கது நின்று சுடர்விடும்காய விளக்கது நின்று கனன்றிடும்சேய விளக்கினைத் தேடுகின் றேனே.

13

தேடுகின் றேன்திசை எட்டோ டு இரண்டையும்நாடுகின் றேன்நல மேஉடை யானடிபாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்கூடுகின் றேன்குறை யாமனத் தாலே.

14

முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தாள்மன்னிச் சிவமாக வாரா பிறப்பே.