திருமுறை 10 · 10.08.16 · 20

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதிஅறிவுக்கு அறிவாம் பதியும் அனாதிஅறிவினைக் கட்டிய பாசம் அனாதிஅறிவு பதியில் பிறப்பறுந் தானே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டுபசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

3

கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்றுநடக்கின்ற ஞானத்தை நாடோறும் நோக்கித்தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.

4

பாசம்செய் தானைப் படர்சடை நந்தியைநேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தலும்கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே.

5

விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகிவிட்ட பசுபாசம் மெய்கண்டோன் மேவுறான்சுட்டிய கேவலம் காணும் சகலத்தைச்சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே.

6

நாடும் பதியுடன் நற்பசு பாசமும்நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லைநீடிய நித்தம் பசுபாச நீக்கமும்நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே.

7

ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்ஆய பசுவும் அடலே றெனநிற்கும்ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

8

பதிபசு பாசம் பயில்வியா நித்தம்பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப்பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்பதிபசு பாசம் பயில நிலாவே.

9

பதியும் பசுவொடு பாசமும் மேலைக்கதியும் பசுபாச நீக்கமும் காட்டிமதிதந்த ஆனந்த மாநந்தி காணும்துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.

10

அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆகும்அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆகஅறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்அறிந்த பதிபடைப் பான்அங்கு அவற்றையே.

11

படைப்புஆதி யாவது பரம்சிவம் சத்திஇடைப்பால் உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல்படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்யபடைப்பாதி தூய மலம்அப் பரத்திலே.

12

ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்ஆகிய சத்தி சிவபர மேல்ஐந்தால்ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மம்செய்வோன்ஆகிய தூயஈ சானனும் ஆமே.

13

மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன்மேவும் உருத்திரன் மால்வேதா மேதினிஆகும் படிபடைப் போன்அர னாமே.

14

படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும்துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும்சடத்தை விடுத்த அருளும் சகலத்துஅடைத்த அனாதியை ஐந்தென லாமே.

15

ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டுவேறாகு மாயையின் முப்பால் மிகுத்திட்டுஅங்குஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டுவேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே.

16

வீட்கும் பதிபசு பாசமும் மீதுறஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால் உணர்ந்துஆட்கு நரக சுவர்க்கத்தில் தானிட்டுநாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே.

17

நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம்பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே.

18

ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்றுமோக மறச்சுத்தன் ஆதற்கு மூலமேஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே.

19

பாசம் பயிலுயிர் தானே பரமுதல்பாசம் பயிலுயிர் தானே பசுவென்பபாசம் பயிலப் பதிபர மாதலால்பாசம் பயிலப் பதிபசு வாகுமே.

20

அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனிஅத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே.